தமிழீழ அங்கீகார மாநாட்டுக்கு அனுமதி: பொலிஸ் கமிஷனரின் தடை ரத்து
Posted On Monday, 22 December 2008 at at 23:20 by Mikeநீதித்துறையே தமிழர்களை காப்பாற்ற சரியான ஆள் நீதான். இந்த அரசியல் வாதிகள் எல்லாம் ஊமைகள் தன்னுடைய சுயநலங்களையே பார்க்கிறார்கள்.
சென்னை அமைந்தகரையில் விடுதலைச் சிறுத்தைகள் தமிழீழ அங்கீகார மாநாட்டுக்கு அனுமதி மறுக்கும் உதவி பொலிஸ் கமிஷனரின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை அமைந்தகரையில் உள்ள புல்லா அவென்யூவில் வரும் டிசம்பர் 26-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் மாநாடு நடத்தப்பட இருந்தது.
ஆனால், இந்தக் கூட்டத்துக்கு அனுமதி மறுத்து அண்ணாநகர் உதவி பொலிஸ் கமிஷனர் டிசம்பர் 20-ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா. செல்வம் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி கே. சுகுணா முன்னிலையில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பிறகு நீதிபதி அளித்த தீர்ப்பு:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கும் முன்பு, மாநகர பொலிஸ் சட்ட விதி பின்பற்றப்படவில்லை.
அதேபோல், இந்தப் பொதுக்கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசமாட்டோம் என்று மனுதாரர் தரப்பில் உறுதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், அண்ணாநகர் உதவி பொலிஸ் கமிஷனரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை, அண்ணாநகர் உதவி பொலிஸ் கமிஷனர் மீண்டும் பரிசீலித்து டிசம்பர் 23-ம் தேதிக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசமாட்டோம் என்று உறுதி அளிக்கும் மனுவை உதவி பொலிஸ் கமிஷனரிடம் மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/view.php?22cWnB2025j0e2e2sG7D3b3T9EY4d0M2h2cceDpO2d4bWQH4b0dLLSce
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே அறிஞர் அண்ணா பேசுவதற்கு அவர்களின் ஆட்சி பீடம் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.கடைசியாக பேசட்டும்,ஆனால் அரசியல் பேசக் கூடாது என்று அவர்களே "ஆற்றோரம்" என்ற தலைப்பைக் கொடுத்தார்களாம்.
அண்ணா அவர்கள் ஆற்றோர நாகரீகங்களைப் பற்றிப் பேசி தமிழக ஆறுகள் அவற்றில் தோன்றிய நாகரீகங்கள் என்று தமிழரின் நாகரீகம் ,பெருமை என்று என்னென்ன அரசியல் பேச வேண்டுமோ அவ்வளவையும் வாழைப் பழத்தில் ஊசி என்று சொல்வார்களே அது போலப் பேசி மணவர்களை மகிழ்வித்தாராம்.
ஆம்!தமிழன்,தமிழில் தமிழனைப் பற்றிப் பேசக் காங்கிரசுக்காரர்களுக்கு இந்த மாதிரிப் பதிலடிகள் தான் தேவை.
ஏ!தாழ்ந்த காங்கிரசே!
அழிவுப் பாதை வேண்டாம்.
கருத்துக்கு நன்று தமிழன் அவர்களே, நம்ம சத்யராஜ் பேசினாரே அது போலவா, அண்ணாவின அந்த பேச்சை கேட்க ஆவலாக உள்ளேன், ஏதும் இணைப்பு இருந்தால் கொடுக்கவும் நண்பரே.
ஆம்!தமிழன்,தமிழில் தமிழனைப் பற்றிப் பேசக் காங்கிரசுக்காரர்களுக்கு இந்த மாதிரிப் பதிலடிகள் தான் தேவை.
ஏ!தாழ்ந்த காங்கிரசே!
அழிவுப் பாதை வேண்டாம்.
இதே போல விடுதலை புலிகளின் தடையை நீக்குமாறு திருமா உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரவேண்டும்...
அதில் வெற்றி பெற்றுவிட்டால் சட்டரீதியாக காங்கிரசு அத்தையும் இத்தையும் மூடிக்கொள்ளும்.