தமிழர்களை இராண்டாந்தர குடிமக்களாக நடத்துகிறது மகிந்த அரசு: மங்கள சமரவீர
Posted On Tuesday, 23 December 2008 at at 10:18 by Mikeஇலங்கை தமிழர்களை சிறிலங்காவின் மகிந்த அரசு இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்துகிறது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி பிரிவு தலைவர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மங்கள சமரவீர பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை மத ரீதியாக மகிந்த அரசு பிளவுபடுத்தி வருகிறது என்றும் மங்கள சமரவீர கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குகளுக்கான குழுவின் தலைவராக இருந்தபோது உள்நாட்டுத் திணைக்களத்தின் மீது பாரிய விசாரணைகளை நடத்தினோம். உள்நாட்டு திணைக்கள ஆணையாளரை நீக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தோம். ஆனால் மகிந்த அமைச்சரவை அதனை ஏற்காமல் என்னை சித்திரவதை செய்தது. அதனால்தான் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம் என்றார் அவர்.