50,000 ஹிட்ஸ், இன்றோ, நாளையோ, இதைவிட மகிழ்ச்சி ஒன்று
Posted On Monday, 22 December 2008 at at 14:18 by Mikeஅனைவரினது ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வந்தவர்களின் எண்ணிக்கை 15,000. அதிக பட்ச வருகையாக ஒரே நாளில் 1311 பேர் வந்துள்ளனர்.
நான் ஒன்னும் பிரபல பதிவர் சொல்லிக்கற மாதிரி பெரிய எழுத்தாளர் ஒன்னும் இல்லீங்க. ஏதோ ஒரு சராசரி பதிவர். தமிழ் பற்றுள்ள, தமிழ் உணர்வுள்ள பதிவரே. நினைத்ததை சுருக்கமா சொல்ல நினைப்பவன்.
50000 ஹிட்டுகளை விட பெரிய மகிழ்ச்சி இப்ப எல்லாம் பதிவர்களிடம் தமிழுணர்வு அதிகரித்துள்ளது. நிறைய பதிவுகள் வருகின்றன. நாம் அனைவரும் தமிழருக்காக உழைக்க வேண்டும் என்ற உணர்வு பதிவர்களிடம் அதிகரித்துள்ளது. துரோகிகளை புறமுதுக்கு காட்டி ஒடிட செய்ய வேண்டும். தமிழரின் வாழ்வில் விடிவு பிறக்கும் வரை வரை போராடுவோம். தமிழர் படும் கஷ்டங்களை உலகுக்கு எடுத்து சொல்வோம்.
துரோகிகளுக்கு ஒரு வெப் சைட் இருக்குது, தமிழ் இனத்துக்கு ஆயிரம் வெப் சைட் இருக்குது அதிலிருந்து ஏதாவது ஒன்றை எடுத்து நீங்கள் பதிவு போடலாம். நீங்கதான் உட்காந்து எழுதனும்-ங்கிற அவசியம் கிடையாது. நான் எழுதுவது குறைவுதான். ஒன்னு நேரம் வேணும், சில நேரம் விசயம் தெரியாது, சில நேரம் டைப் பண்றது கொஞ்சம் கஷ்டம். ஆனால தமிழுணர்வு மட்டும் என்னை எழுத தூண்டுகிறது. தமிழர்கள் காப்பற்ற பட வேண்டும் என்ற ஒரே உணர்வுதான் என்னுள். என்னாள் எந்த அளவு முன்னெடுத்து செல்ல முடியுமோ அந்த அளவு முயற்சிக்கிறேன்.
எந்த நேரத்திலும் சோர்வடையாதிர்கள். சில சமயம் மோசமான பின்னூட்டம் வரும். இந்த தமிழின துரோகிகள் எழுதற பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கும். எப்படி இவனால எல்லாம் இப்படி பேச முடிகிறது என்று தோனும். இவனுங்க எங்கும் இருப்பானுங்க, எட்டப்பன் இல்லையா, கருணா இல்லையா. இவனுங்க ஒரு நாளும் நிம்மதியாவே இருக்க மாட்டானுங்க.
உண்மை வெல்லும் ஒரு நாள்.
15,0000 or 15,000 ?
valtukal
மன்னிக்கவும், எழுத்துப்பிழை, சரி செய்து விட்டேன்.
மைக், 50000 கடந்து விட்டிர்கள், வாழ்த்துகள். உங்கள் சேவை தொடரட்டும்.
நன்றி Dr.Sintok மற்றும் சுரேஷ் அவர்களே. தமிழினம் தழைத்தோங்க உங்கள் அனைவரது ஆதரவும் தேவை.
வாழ்த்துக்கள் நண்பரே.....
உங்கள் பதிவை தொடர்ந்து வாசித்து வருகிறேன்..முடிந்தால் லே - அவுட் ரொம்ப ப்ளைனாக இருக்கிறது. மாற்ற முயற்சிக்கவும்...
இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டியதில்லை.நன்றி
வாழ்த்துக்கள் நண்பரே தங்கள் பணிக்கு!
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.
ஆடம்பரமோ,ஆரவாரமோ இல்லாத அமைதியானத் தொடர்ந்த பணி தான் தமிழர்களுக்குத் தேவை.
வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கு நன்றி, நன்றி, நன்றி. தமிழ் மணத்திற்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் பதிவில் தெரிவிக்க மறந்து விட்டேன்.
உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்!!!
தேவா...
வாழ்த்துக்கள் !!!!!!!!!
வாழ்த்துக்கள் !!!!!!!!!
வாழ்த்துகளுக்கு நன்றி ரவி, மதிபாலா உங்கள் template அறிவுரைக்கும் நன்றி. விரைவில் மாற்றுகிறேன்.
//
ஏதோ ஒரு சராசரி பதிவர்.
//
அப்படி தெரியலியே..
வாழ்த்துக்கள்
காலம் கருதி, உண்மையை எழுதும் உங்களை தமீழீழ உறவுகள் அனைவரும் வாழ்த்துவார்கள்.
தொடருங்கள். உங்கள் எழுத்துக்குப் பலன் கிட்டும்!!!
வாழ்த்துக்கள்.
ஒரு ஈழத்தமிழன்
நன்றி ஆளவந்தான் அவர்களே உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்
/*//
ஏதோ ஒரு சராசரி பதிவர்.
//
அப்படி தெரியலியே..
*/
பார்த்திங்களா, நான் ரொம்ப சராசரி பதிவர் குட ஒத்துக்க மாட்டேங்கீறிங்க, அந்த அளவுக்கு மோசாமாக எழுதுகிறேனா.