சிங்களவர்களின் குரலாக சதா ஒலிக்கும் ஜெயலலிதா: வீரமணி சாடல்

சிங்களவர்களின் குரலாக தமிழ்நாட்டிலிருந்து பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சதா ஒலித்துக் கொண்டிருக்கின்றார் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி சாடியுள்ளார்.
இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் அண்ணா பெயரில் கட்சி. அதனையே "ஆரிய மாயை'' அபகரிப்பு. எந்த சொல்லுக்காக சிங்கள இராணுவ தளபதியை கண்டிக்கிறார்களோ, அதே கருத்தினை வெளிப்படையாக அறிக்கைகள் மூலம் பொறுப்பான ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்பதையும் புறந்தள்ளிவிட்டு, இலங்கை தமிழ் மக்களுக்காக தமிழக முதலமைச்சர் வசூலித்த நிவாரண நிதி சேகரிப்பை கொச்சைப்படுத்தினார்.

ஆனால் உண்மை என்ன? படங்களுடன் செய்திகள் வந்தனவே. ஜெயலலிதாவின் புளுகு பலூன் வெடித்து சிதறிவிட்டதே. சிங்களர்களின் குரலைத்தானே இவர் சதா ஒலிக்கிறார். காரணம் என்ன? தமிழரல்லர் என்பதுதானே. தமிழ்நாட்டு வாக்காளர்களை எவ்வளவு அடிமுட்டாள்கள் என்று அவர் நினைத்திருக்கிறார்.

இவ்வளவையும் மறந்துவிட்டு, அந்த அணிபக்கம் ஓடினால் இரண்டொரு சீட்டுகள் கிடைக்கும் என்று ஓடுகிறார்களே- தமிழன் நிலை இவ்வளவு கேவலமாக ஆகலாமா?

ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி, சோ, கல்கி- பார்ப்பன ஊடகங்கள் இன அடிப்படையில் மன அடிப்படையில் ஒன்றாக நிற்கின்றன. தமிழர்களின் கடமை என்ன? சிங்களவருக்கு ஆதரவு குரல் கொடுப்பவருடன் கூட்டு வைத்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழங்குவோம் என்பது அசல் இரட்டை வேடம் அல்லவா? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு காட்டும் போது நம்மில் எவரும் ஈனத்தமிழர்களாக மாறிவிடக்கூடாது என்றார் அவர்.

http://puthinam.com/full.php?225Vo6202mcYA2e2OA4c3b3K6DD4d3B1e2cc0UmI4d4eKOAca0bCMRde

Posted in |

3 comments:

  1. Anonymous Says:

    When he gave Pattam to Jayalalitha, don't he know abt all these.. Junck person.... I dont know when these people are stil alive

  2. Mike Says:

    வருகைக்கு/கருத்துக்கு நன்றி நண்பரே, கண்டிப்பாக வீரமணி மாதிரி தமிழுக்காக உழைக்கக்கூடியவர் யாருமில்லை. இவர், ராமதாஸ், வை.கோ, பழ.நெடுமாறன் மற்றும் திருமாளவன் இவர்களாலே ஈழபோராட்டாம் இன்றி இந்த உன்னத நிலையை அடைந்திருக்கிறது. இவர்கள் பேசுபவை அனைத்தும் தமிழரின் நலன் கருதியே என்பதில் எந்த மாற்று கருத்துக் கிடையாது.

    அவர் பட்டம் குடுத்தார் என்பதற்காக, ஜெ யின் தமிழின விரோத போக்கை ஆதரிக்கனும் என்பது முட்டாள்தனம்.

  3. Anonymous Says:

    ஜெயலலிதா ஆட்சியின்போது பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட சில முக்கிய செயல்பாட்டிற்கு துணையாய் இருந்தார். அதற்காகவே அவருக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை" என்ற பட்டம் திராவிடர் கழகம் கொடுத்தது. அப்போதே ஜெயலலிதாவின் ஈழவிடுதலைப்போராட்ட எதிர்ப்புச் செயல்பாடுகளை வீரமணி கண்டித்திருக்கிறார். "ஆதரிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை, தூற்றாமலாவது இருக்கவேண்டும்" என விடுதலையில் தலையங்கம் எழுதப்பட்டது. இடஒதுக்கீட்டு ஆதரவு முயற்சியிலும் ஜெயலலிதா தொடர்ந்து தீவிர ஆதரவு தரவில்லையென்பதையும் விடுதலையில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே விமர்சனத்தை திராவிடர் கழகம் வைத்தது.

    "சிங்களவர்களின் குரலாக ஜெயலலிதா ஒலிக்கிறார்" என்ற விமர்சனத்தை வீரமணி வைப்பது எதனால் என்று பார்க்கவேண்டும். "கலைஞர் அரசால் ஈழமக்களுக்கு அனுப்பப்படும் உதவி விடுதலைப்புலிகளுக்குப்போகிறது" - என்பதை ஜெயலலிதாவும், சிங்கள அரசினைப்போலவே சொல்லிக்கொண்டிருப்பதால்தான்.

    வைகோ, தா.பாண்டியன் போன்றவர்கள் அரசியல் கூட்டணிஅமைக்கும்போதாவது அம்மையார் மனப்போக்கை மாற்றினால் நல்லது.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails