ஒருவர் மட்டும் கண்டிக்காததன் சூட்சமத்தைப் புரிந்து கொள்வீர்
Posted On Thursday, 11 December 2008 at at 12:01 by Mikeஅண்மையில் இலங்கையிலிருந்து ஒரு இழிவான சொல், தமிழ் நாட்டிலே உள்ள தலைவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டது. அதைக் கண்டிக்கின்ற வகையில் தமிழ்நாட்டிலே உள்ள தலைவர்கள் எல்லாம் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் - வரலாற்று ரீதியாக, வடநாட்டு மன்னர் களான கனகனும், விஜயனும் தமிழ் நாட்டு மன்னர்களை இகழ்ந் தார்கள் - தமிழ் நாட்டு மன்னர்கள் வடக்கே படையெடுத்து வந்தபோது, எம் போலும் மன்னர் ஈங்கில்லை போலும் என்று கனக விஜயர்கள் கர்வத்தோடு பேசினார்கள் என்பதைக் கேள் விப்பட்டு சேரன் செங்குட்டுவன் ஆத்திரமடைந்து அவர்களைப் போரிலே வென்று, அவர்கள் தலையிலே இமயத்திலிருந்து கல் லெடுத்து, அதையேற்றி வைத்து, அந்தக் கல்லைக் கொண்டு கண்ணகிக்குச் சிலை வடித்தான் என்று நிறைவுறுகிறது சிலப்பதி காரம். அப்படி செங்குட்டுவன் ஆர்த்தெழுந்து கனகனையும் விஜயனையும் தோற்கடித்து, அவர்கள் தலையிலே கல்லேற்றி தமிழகத்திலே மற்ற மன்னர்களிடத்திலே அந்தக் காட்சியைக் காட்டச் சொன்னபோது சில மன்னர்கள், அதை இழித்துரைத் தார்கள் என்று பேசப்படுவதுண்டு.
ஏன் இந்த சேரனுக்கு மாத்திரம் இவ்வளவு ஆத்திரம் கனக விஜயன் மீது? சோழனுக்கும் பாண்டியனுக்கும் இல்லாத ஆத்திரம் சேரனுக்கு மாத்திரம் வருவானேன்? என்ற அந்த வாசகத்தை நானே எழுதிய சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகமாக தீட்டியிருக் கிறேன். அப்போது செங்குட்டுவன் சொல்வான், சோழனுக்கும் பாண்டியனுக்கும் வராத ஆத்திரம் எனக்கேன் வந்தது? என்று புலவர்களே, நீங்கள் கேட்கிறீர்கள். எனக்கு ஆத்திரம் வந்ததற்குக் காரணம், நான் தமிழன் என்பதால், தமிழ் இனத்தை வட புலத்திலே உள்ளவர்கள் வசை பாடியதால் வந்த ஆத்திரம் இது என்று தான் சேரனாக இருந்தாலும் கூட சேர, சோழ, பாண்டியர் மூவருமே தமிழ் மன்னர்கள்தான் என்ற நிலையில் நான் அதற்காக ஆத்திரப்படுவதிலே நியாயம் உண்டு என்று சேரன் செங்குட்டுவன் கர்ச்சித்தான் அவனுடைய அவையில்! - அதைத் தொடர்ந்து போரிட்டான், இமயமலை வரையிலே சென்றான், குயிலாலுவம் என்ற இடத்தில் கனகனையும் விஜயனையும் வென்றான், அவர்கள் தலையிலே கல்லேற்றி வந்து அந்தக் கல்லைக் கொண்டு கண்ணகிக்குச் சிலை வடித்தான்.
அதேபோல, இப்போது இன்றைக்கு இலங்கையிலே உள்ள ஒரு தளபதி, தமிழ்நாட்டிலே உள்ள தலைவர்களை இகழ்ந் துரைத்தார் என்ற ஒரு செய்தி பத்திரிகைகளில் வந்தது. இலங்கையின் ராணுவத் தளபதி, சரத் பொன்சேகா, தமிழகத் தலைவர்களை, தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்தார். அவர் சண்டே அப்சர்வர் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசியல் தலைவர்களை அரசியல் கோமாளிகள் என்று அடாவடித்தனமாகக் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் பணம் பெறுவதற்காகவும் விடுதலைப்புலிகளை விரட்டி விட்டால் அவர்களிடமிருந்து கிடைக்கும் அந்தப் பணத்தை இந்த அரசியல் கோமாளிகள் இழந்து விடுவார்கள் என்றும் சரத் பொன்சேகா கூறினார். இது கண்டு - இதைப் பத்திரிகைகளிலே படித்து விட்டு தமிழ் நாட்டுத் தலைவர்கள் தமிழகத்திலே இயக்கங்களை நடத்துகின்ற தலைவர்கள் ஆத்திரப்பட்டு கண்டனங்கள் வெளியிட்டார்கள். தினத்தந்தி முதல் பக்கத்திலே யார் யார் கண்டனங்களை வெளியிட்டார்கள் என்ற பெயர்கள் வந்திருக்கின்றன. அப்படி கண்டனங்களை வெளியிட்டவர்கள் யார் யார் என்றால் முதலமைச்சர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தை களின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் என். வரதராசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றார்கள்.
நான் படித்தேன். இதில் ஒரு முக்கியக் கட்சியின் பெயர் இல்லையே? யார் பெயர் அது?
நாமெல்லாம் நாம் தமிழர்களாக இருக்கின்ற காரணத்தால் நம் முடைய பெயர் இதிலே இருக்கின்றது. நாம் தமிழர் அல்லாத வருடைய பெயர் இதிலே இல்லை. இந்த உண்மையை இந்த ரக சியத்தை இந்த சூட்சமத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால், நாம் தமிழர், நாம் என்றைக்கும் நம்மிடையே ஒருவருக்கொருவர் புகைச்சலின் காரணமாகப் போரிட்டுக் கொண்டாலும், இது போன்ற சூழ்நிலைகள் வரும் போது, நாம் தமிழர்களாக இருப்போம். நம்முடைய கண்டனத் தைத் தெரிவிப்போம், நம்முடைய போர்க் குரலைக் கொடுப் போம் என்பதற்கு அடையாளம் தான் இந்த நிகழ்ச்சி.
நன்றி: விடுதலை
ஒருவேளை 'கோமாளினி' என பெண்பாலில் சொல்லவில்லை எனக் கோபம் வரவில்லையோ.
புள்ளிராஜா
'கோமாளினி'
ஓ இப்பட ஒன்று இருக்கிறதா புள்ளி ராஜா
இப்படிக்கு
புள்ளிராஜி
சோழ,பாண்டிய மன்னர்கள் தமிழர்கள் இல்லை என்று இந்த கருணாநிதி என்ற நபர் கூறுகின்றார்.
இந்த கருணாநிதி என்ற நபர், ஈழ,இலங்கைத் தமிழர்களுக்கு என்ன செய்து கிழித்தாராம்.
congressum than intha listla illa itha evanum solla maattaanungale!!!.intha karunaa(nidhi) velaiyellam venaam.vera ethachum uruppadiyaa solla mudinja sollunga.