தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவோருக்கு ...
Posted On Friday, 8 January 2010 at at 14:42 by Mikeநாளை சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் .... ஒருவேளை மகிந்த/கோத்தபாய கும்பலை சர்வதேச நீதிமன்றில் ஏற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் வரலாம்??!! ஏனெனில் சிலவற்றை ஏற்கனவே சரத்தே தனது வாயால் கக்கியும் விட்டார்! அது எமக்கா நடைபெறாவிட்டாலும், இன்றைய சிறிலங்காவில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக மகிந்த கும்பல் செய்பவைகளுக்கான அறுபடைகளாகவும் இருக்கலாம் அல்லது ஏற்கனவே அமெரிக்காவிற்கு சரத் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையிலாவது இருக்கலாம்!!
இற்றைக்கு அறுபது வருடகால தமிழின அழிப்பில், நாம் இன்றுவரை ஒரு இனவழிப்பானையாவது சர்வதேச குற்றவாளிக்கூண்டில் ஏற்றியிருக்கிறோமா????? எமக்கு அதற்கான வலு இருக்கிறதா?? ..... ஆனால் இன்று ஏதே ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது!! அதனை பயன்படுத்துவோம்!!
.... அப்படியாயின் சரத், எம்மை அழிக்கவில்லையா??? என்று கேட்டு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவோருக்கு ... நாம் இதனை புறக்கணித்து ஒன்றும் காணப்போவதில்லை!!! ஒன்றில் ஒரு மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களித்து எமது எதிர்ப்பை காட்டலாம், அதுவும் வடகிழக்கில் இருக்கும் ஒட்டூம்/ஒட்டில்லாத குழுக்களும் மகிந்தவிற்கு ஆதரவளிக்க இருப்பதாக தெரிவித்திருக்கும் சூழ்நிலையில், எமது மக்கள் அங்கு புறக்கணித்தாலும், வாக்குக்கள் கள்ள வாக்குகளாக போடப்பட்டே தீரும்!!! அதனை விட வாக்களிப்பதே மேலானது!!
மற்றும் இன்றுவரை நடைபெற்ற இனவழிப்புகளுக்கு, @புலி எதிர்ப்பு அரசியல்@ @மாற்றுக்கருத்து அரசியல்" எனும் பெயர்களில் பின்புலமாக இருந்தவர்களை சற்றாவது ஒதுக்க்க இத்தேர்தல் முடிபுகள் அமையலாம்!!???