இலங்கையின் மனித உரிமை மீறல்கள்: தனி விசாரணைக்குழுவுக்கு ஐ.நா. பரிசீலனை


இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் ஆணைக்குழு ஒன்றை நியமிப்பது தொடர்பாக தான் பரிசீலித்துவருவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை அரசுக்கு அறிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு தனி ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கான விரிவான பரிசீலனைகளை மேற்கொண்டுவருவதாக ஐக்கிய நாடுகள் சபை பேச்சாளர் மார்ட்டின் செசீக்கி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. அதிகாரி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கேட்டபோது,

ஐக்கிய நாடுகள் சபையின் படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி பிலிப் அல்ஸ்டன் சமர்ப்பித்துள்ள முன்வைத்துள்ள முடிவுகளின்படி, இலங்கையில் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்த நம்பகரமான – பக்கசார்பற்ற – சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசு இந்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு வசதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகராலயம் உதவி செய்வதற்கு தயாராக உள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை தொடர்ச்சியாக சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. அவ்வாறான விசாரணைகளை மேற்கொள்ளும்போது மட்டுமே சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தமுடியும் என்றார்.

--
தோழமையுடன்......
Muthuraja.I



Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails