பிரபாகரன் தந்தை மரணம்: இலங்கை ராணுவம் அறிவிப்பு, ஆனால் இது திட்டமிட்ட படுகொலையே
Posted On Thursday, 7 January 2010 at at 10:04 by Mikeவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை காலமானார் என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 86.
இராணுவத்தின் கொடிய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று (06.011.2009) இரவு காலமானதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. இது ஒரு இயற்கை மரணம் என்று ராணுவத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இறுதிப் போரின்போது, வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாளும் மக்களுடன் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துவிட்டனர். கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவில் வேலுப்பிள்ளையும் அவரது மனைவி பார்வதி அம்மாளும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை கடைசி வரை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து வந்தது.
அதன்பிறகு இவர்களின் நிலை என்ன, எங்கே வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற தகவல்கள் எதையும் இலங்கை அரசு தெரிவிக்கவில்லை. கொடிய சித்திரவதைகளை அந்த வயதான தாயும் தந்தையும் அனுபவித்ததாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வந்தன.
இந்நிலையில் வேலுப்பிள்ளை நேற்று (06.01.2009) இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலையாவது இலங்கை அரசு காட்டுமா, தமிழர்களிடம் ஒப்படைக்குமா? என்று தெரியவில்லை.
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பற்றி எந்த தகவலும் இலங்ûகை ராணுவம் வெளியிடவில்லை.
--
தோழமையுடன்......
Muthuraja.I
--
தோழமையுடன்......
Muthuraja.I
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன், தேசத்தலைவரின் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட காரணமாக இருந்த கருணாநிதி, சோனியா மனிதாபிமானத்துடன் அரசு மரியாதையுடன் இவரது உடலினை தகனம் செய்ய வேண்டும்.