பிரபாகரன்-எம்.ஜி.ஆர் படத்துடன் சுவரொட்டி: மதுரையில்பரபரப்பு!
பிரபாகரனுடன் முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆர். இருக்கும் சுவரொட்டி மதுரை முழுவதும் ஒப்பட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.ரின் நினைவு தினத்தையொட்டி மதுரையில் நாம் தமிழர் இயக்கத்தின்சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

அதில் ''இருப்பாய் தமிழர் நெருப்பாய்! தமிழீழத்தை ஆதரித்து அன்னை தமிழகத்;தை ஆண்ட அன்பு மனிதர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு வீரவணக்கம்,"என்றும்,

 ''நன்றி மறப்பது நன்றன்று! ஈழத்தாயகத்தை  மீட்டெடுக்க களமாடிய புலிகளுக்கு பேராதரவு தந்த மாமனிதர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு வீரவணக்கம்"என்ற வாசகங்களுடன் எம்.ஜி.ஆருடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் தாங்கிய இரண்டு வகை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நாம்தமிழர் இயக்கத்தின் சார்பில் மதுரை நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சம்பத்

"மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் எங்கள்  தமிழ்மண் குளிக்கும்"....

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails