யாரெல்லாம் தூரமாயிருக்கீங்களோ கை தூக்குங்க, காமக்கொடூரன் ஜெயேந்திரர் கேட்கிறார் மாணவிகளிடம்








                          னது 75-வது பிறந்த நாளை ஊர் ஊராகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் காஞ்சி ஜெயேந்திரர். திருச்சியில் 3 பெண்கள் கல்வி நிறு வனங்களில் ஜெயேந்திரரின் பிறந்தநாள் டிசம்பர் 17, 18, 19 தேதிகளில் அமர்க்களப்பட்டது. மாணவிகளிடம் ஆசிரியர்கள், ""யாரெல்லாம் தூரமாயிருக்கீங்களோ கை தூக்குங்க. இது சாமி சம்பந்தப்பட்ட விஷயம். யாராவது தீட்டாயிருந்து ஏதாவது தப்பாயிடிச்சின்னா தெய்வ குத்தமாயிடும்'' என்று சொல்ல, ""என்ன இப்படியெல்லாம் கேட்கு றாங்களே'' என்று மாணவிகள் பதறிப்போய், ஓரிருவர் கை உயர்த்தினர். அப்போது ஒரு மாணவி, இவ்வளவு சுத்தம், ஆச்சாரம் பார்க்குறவர் ஏன் மேடம் ஜெயிலுக் கெல்லாம் போகணும்? அந்த விஷயத்திலும் சுத்தமா இருந்திருக்கலாமே'' என்று சொல்ல, மாணவிகளிடம் சிரிப்பலை. 

இந்திராகாந்தி பெண்கள் கல்லூரியில் நடந்த பிறந்தநாள் விழாவுக்கு வந்த ஜெயேந்திரர் உற்சாக மனநிலையில் இருந்தார். சங்கரராமன் வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து பல்டி அடிக்கிற விவரம் வந்துகொண்டே இருந்ததால்தான் இந்த மனநிலை. ஜெயேந்திரரை வாழ்த்த மதுரை, திருப்பனந்தாள் ஆதீனங்களும், விஸ்வ இந்து பரிஷத் வேதாந்தம், பா.ஜ.க ஹெச்.ராஜா ஆகியோர் வந்திருந்தனர். 

எந்த மேடையிலும் பேச்சால் பொறி கிளப்பும் மதுரை ஆதீனம், தன்னுடைய தலைமையுரையில், ""பிறந்தநாள் கொண்டாடும் பெரியவாவை (ஜெயேந்திரர்) இயேசு வடிவத்தில் பார்க்கிறேன். ஏன்னா இயேசு சிவப்பா இருப்பார். இவரும் சிவப்பா இருக்கிறார். இவரை நபிகள் நாயகத்தின் அவதாரமா பார்க்கிறேன்'' என மற்ற மதங்களை இழுத்துப்பேசியவர், ஜெயேந்திரர் நூற் றாண்டு வாழ, வந்திருந்தவர்களை கோஷம் போட வைத்தார்.

ஜெயேந்திரர் ஏற்புரை வழங்கவில்லை. அருளுரை வழங்கினார். ""மிருகங்களைப் போல வாழாமல் மனிதர்களாய் வாழவேண்டும்'' என்று அவர் சொன்னது தான் ஹைலைட். விழாவில் நால்வருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ணமூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை தொடவிரும்பாத ஜெயேந் திரர் ஆசி மட்டும் வழங்கிவிட்டு, தன் உதவியாளர் கையால்தான் விருதுகளைக் கொடுக்கச் செய்தார்.

இளையராஜா பேசும்போது, ""இயேசு அவதாரம், நபி அவதாரம் என்றெல்லாம் மதுரை ஆதீனம் பேசினார். நீங்க யாருடைய அவதாரமாகவும் இருக்க வேண்டாம். பெரியவாளாகவே இருங்க'' என்றவர், மகாபெரியவர் காலத்திலிருந்தே தனக்கு காஞ்சி மடத்துடன் நெருக்கம் இருப்பதைக் குறிப்பிட்டுவிட்டு, ""எனக்கு இசை தெரியாது. இன்னமும் இசையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்'' என தத்துவார்த்தமாகப் பேசினார்.

திருச்சி நேஷனல் கல்லூரியிலும் சீதாலட்சுமி கல்லூரியிலும் ஜெயேந்திரர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. எடைக்கு எடை தங்கம், வெள்ளி எனக் கொடுக்கப்பட்டதால் ரொம்பவும் சந்தோஷத்தில் மிதந்தார் காவி கட்டிய துறவி.




SAVE PEOPLE FROM GENOCIDE
www.TerminateGenocide.com

Posted in |

9 comments:

  1. dondu(#11168674346665545885) Says:

    //மாணவிகளிடம் ஆசிரியர்கள், ""யாரெல்லாம் தூரமாயிருக்கீங்களோ கை தூக்குங்க. இது சாமி சம்பந்தப்பட்ட விஷயம். யாராவது தீட்டாயிருந்து ஏதாவது தப்பாயிடிச்சின்னா தெய்வ குத்தமாயிடும்'' என்று சொல்ல, ""என்ன இப்படியெல்லாம் கேட்கு றாங்களே'' என்று மாணவிகள் பதறிப்போய், ஓரிருவர் கை உயர்த்தினர். அப்போது ஒரு மாணவி, இவ்வளவு சுத்தம், ஆச்சாரம் பார்க்குறவர் ஏன் மேடம் ஜெயிலுக் கெல்லாம் போகணும்? அந்த விஷயத்திலும் சுத்தமா இருந்திருக்கலாமே''//
    கேட்டது ஜெயேந்திரர் அல்ல என்பது தெளிவாகிறது.

    //விழாவில் நால்வருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ணமூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை தொடவிரும்பாத ஜெயேந் திரர் ஆசி மட்டும் வழங்கிவிட்டு, தன் உதவியாளர் கையால்தான் விருதுகளைக் கொடுக்கச் செய்தார்.//
    ஆக யாரையுமே தொடவில்லை.

    பை தி வே ஜெயேந்திரருக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. உங்கள் பதிவில் இருந்த தகவல் பிழைகளையே தந்தேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  2. Mike Says:

    வருகைக்கு நன்றி டொண்டு, நல்ல வேளை உங்களின் தீட்டு computer technologyயை இன்னும் பாதிக்க வில்லை. அல்லது நீங்களும் இங்கு பாகுபாடு பார்க்க ஆரம்பித்து விடுவிர்கள். பில்கேட்ஸ் அவாளை நேரில் உங்கள் காமூகன் பாத்தாலும் இப்படிதான் தொடாமல் பேசுவாரா, அல்லது காரியம் நடக்க காலை வேண்டுமானாலும் கழுவுவாரா.

  3. சுரேஷ் Says:

    காமூகனுக்கு தேவையறிந்த்து, அவனுடைய குணமறிந்த்து அதை கேட்க வேண்டிய கடமை ஆசிரியைகளுக்கு உள்ளது.

    காஞ்சி கொலை பண்ணினான் என்று ஊரறிந்த விசயம், அவர் கத்தியை வைத்து குத்த வில்லை அதனால் அவர் குற்றவாளி இல்லை என்று தோண்டு வாதாட நினைக்கிறார். முட்டாள் தோண்டு.

  4. Anonymous Says:

    இளையராசா இவர் கூட்டத்திற்குச் செல்வதால் இவருக்கு patronage கூடும் என்பது தெரியாதா.....?

  5. Anonymous Says:

    தேவநாதன் கோவிலுக்குள் செய்ததை விட பல மடங்கு மடத்துக்குள் செய்து விட்டு பெரியவா என்று சொல்லி திரிவது கேவலம். வெளியில் வருவது எப்போதுமே மிக குறைவு. பாதிக்கபட்ட பெண்கள் நமக்கு தெரிந்தவர்கள் அல்லது உறவானவர்கள் என்று எண்ணி பாருங்கள்..வலி தெரியும்.

  6. Anonymous Says:

    மானங்கெட்ட கபோதியைப் பெண்கள் கல்லூரிகளுக்கு அழைக்கும் கல்லூரி நிர்வாகம், தலைவர்கள் வீட்டுப் பெண்கள் காரித் துப்ப வேண்டாமா?

    பூணூலுக்கு அவ்வளவு மகிமையா?

    வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற
    நன்குணர்ந்தோர் உள்ளுவரோ ஒரு குலத்துக் கொரு நீதி ?
    அடுத்து காஞ்சி தேவநாதன் விழாக்கள் எப்போது ?
    கட்டாயம் ஹவுஸ் ஃபுல் தான் !!
    அட மானங்கெட்டத் தமிழா !!!

  7. மாசிலன் Says:

    டோண்டு ராகவன்<>.

    இதைத்தான் குழந்தையை கில்லிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது என்பது.

    இப்படியுமா இளம் மாணவிகளிடம் கொடூரமாக கேட்பது?

    மாத விலக்கு என்பதே மகப்பேறு அடைவதற்கான உதரவாதம். இதைகூடவா இந்த மானங்கெட்ட கும்பல்கள் கேவலப்படுத்தும்?

    தாய்க்குலங்களை அவமானப்படுத்தும் இவர்களை போன்றவர் கோமாளிகளைத்தான் சமுதாயத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும்.

    வெட்கத்தில் தலை குனிகிறேன்.

  8. Kodees Says:

    /மாணவிகளிடம் ஆசிரியர்கள், ""யாரெல்லாம் தூரமாயிருக்கீங்களோ கை தூக்குங்க.//

    கேட்டது ஆசிரியர்களா? ஜெயேந்திரரா?

    தலைப்பைச் சரியாக வைக்கவும். தேவை இல்லாத காழ்ப்பு வேண்டாமே!

  9. Mike Says:

    வருகைக்கு நன்றி கோடீஸ்

    /*கேட்டது ஆசிரியர்களா? ஜெயேந்திரரா?

    தலைப்பைச் சரியாக வைக்கவும். தேவை இல்லாத காழ்ப்பு வேண்டாமே
    */

    எந்த காழ்ப்புனர்ச்சியும் யார் மேலும் இல்லை நண்பரே, தவறு நடக்கும் போது தட்டி கேட்க வேண்டியுள்ளது அது யாராக இருந்தாலும் ஒன்றுதான், தேவநாதனுக்கும், ஜெயேந்திரர்க்கும், கருணாநிதிக்கும், ஜேவுக்கும் ஒன்றே.

    ஆசிரியர்களை பிடிச்சு உள்ளே வைச்சு உண்மையை கேட்டால், யார் கேட்டது, யாரால் கேட்க வைக்கப்பட்டது என்ற உண்மை தெரியும். அதற்கு ஜெயேந்திரர் சம்மதிப்பாரா.

    என்ன அநியாயம் இது, தமிழ் நாடே கொதித்து எழ்ந்து இருக்கு வேண்டும். இந்த பார்ப்பன பத்திரிக்கைகள் என்னவெல்லாம் எழுதுகிறார்கள். இந்த பெண்ணடிமை தனத்தை எழுத தெரியாத கோழைகள்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails