இனி இந்தி மட்டுமே !!!


என் தமிழ் உறவுகளே, 

இனி இந்த இந்திய திருநாட்டின் ஆட்சி மொழி "இந்தி" மட்டுமே, அரசு எந்திரங்கள் இந்தியில் மட்டுமே இயங்கும்.
வருகிற சனவரி மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் .

நீதி மன்றங்களின் மொழி இனி இந்தி,
தொடர்வண்டி போக்குவரத்து நிலையங்களில் முன் பதிவு படிவங்கள் இந்தியில் மட்டுமே இருக்கும்,
காவல் துறை இந்தி பேசும்.
உங்களுடைய குடும்ப அட்டை இந்தியில் மட்டுமே அச்சிடபட்டிருக்கும்,
அனைத்து அரசாங்க நிகழ்வுகளும் இந்தியிலே மட்டும் இருக்கும்.
இந்தி படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேளையில் முன்னுரிமை.

இந்தி எழுத படிக்க தெரியாதவர்கள் துணைக்கு படிக்க தெரிந்தவர்களை அழைத்து செல்லவும் அல்லது  வேலைக்கு அமர்த்தி கொள்ளவும்.

என் தமிழ் உறவுகளே! இப்படி ஒரு அறிவிப்பு நமது அரசு விடுத்தால் என்ன செய்வோம் நாம்?
ஈழ வரலாறு தெரியாத அல்லது அந்த போராட்டத்தினை அசிங்க படுத்த நினைக்கும் அதி புத்திசாலிகளிடம் இந்த கேள்வியை கேளுங்கள்? 

ஆயிரத்து தொள்ளயிரத்து அறுபத்து ஒன்று சனவரி முதல் தேதி அன்று இலங்கை அரசு "இனி சிங்களம் மட்டுமே"  என்ற சட்டத்தை கொண்டுவந்த பொது முப்பத்தாறு லட்சம் தமிழர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் ?

வன்முறையில் ஈடு பட்டானா?  பேருந்தை  koluthinaanaa?  இல்லை சிங்களர்களை கொலை செய்தானா? இல்லவே இல்லை அப்போதும் அமைதி போராட்டம் தான் வேறு வழி இல்லை அவர்களுக்கு தெரிந்ததெல்லாம்  காந்திய வழியாம் அவர்களை வழி நடத்தியவர் தந்தை செல்வா, காந்தியை பெருதும் மதித்த ஒரு மாபெரும் தலைவர் அவர்.

கோரிக்கைகளை வைத்தார்கள் அவ்வளவுதான் . அப்படி என்ன கோரிக்கையா?
சிங்களம் ஆட்சி மொழியாகவே இருக்கட்டும் , நாங்கள் வாழும் பகுதிகளான வடக்கு மற்றும்  கிழக்கு பகுதிகளில் மட்டுமாவது தமிழை அனுமதியுங்களேன் .
இதுதான் அந்த கோரிக்கை. இதற்கு பலன் என்ன கிடைத்திருக்கும் என் தமிழர்களுக்கு?
வேற என்ன நாங்க தீவிரவாதம் பண்றோம்னு சொல்றீங்க அதா தான் எங்க கோரிக்கைகளுக்கு பலனா சிங்களர்களிடம் நாங்க பெற்றோம்,
அடி உதை கொலை எத்தன தமிழன அமைதி போராட்டத்தின் போதே நாங்க மரணத்துக்கு அனுப்பினோம். எப்போ எடுத்தோம் நாங்க தீவிர வாத பாதையை?

எனதருமை உறவுகளே !

வரலாறு  தெரியாத, சிங்கள அரசுக்கு வக்காலத்துவாங்கும் நம் சக தமிழர்கள் நாம் ஒவ்வொருவரை சுற்றியும் இருக்கிறார்கள் அவர்களிடம் கேளுங்கள் இனி இந்தி மட்டும் என்று இந்திய அரசு அறிவித்தால் என்ன செய்வாய் நீ என்று?.

தமிழன் மட்டும் அல்ல மற்ற மொழி பேசுபவர்களிடமும் கேளுங்கள், தயவு செய்து இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்புங்கள்.

" நான் தமிழன் நீ தமிழன் நாம் தமிழர்"

தோழமையுடன்

குமரகுருபரன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails