வெறும் வார்த்தைகளிலும், வரிகளிலும் உள்ளடக்க முடியாத உன்னதமான பெரும் தலைவனை ஈழத் தமிழினம் பெற்றிருக்கிறதுதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஈழத் தமிழர் வராலற்றில் அரை நூற்றாண்டை அசைத்து நிமிர்கின்ற இவ்வேளையில், அவரை வாழ்த்துவதில் நாம் பெரும் மகிழ்வடைகின்றோம்.

வெறும் வார்த்தைகளிலும், வரிகளிலும் உள்ளடக்க முடியாத உன்னதமான பெரும் தலைவனை ஈழத் தமிழினம் பெற்றிருக்கிறது. அத்தகைய பெரும் தலைவனுக்குச் சிறப்பு மலர் ஒன்றினை வெளியிடுவது வாழ்த்துரைப்பது எம்மை மட்டற்ற மகிழ்ச்சிக்கும்  பெருமித நிலைக்கும் இட்டுச்செல்கிறது. ஆழப்பெரும் கடலை சிறு சுள்ளிகொண்டு அளக்க முயன்று தோற்றுப்போன நிலையிலும் சிறிய தலை நிமிர்வை இம்மலர் எமக்கு எற்படுத்தியுள்ளது. பிரபாகரன் என்கின்ற அதியுயர் மனிதனின் தோற்றுவாகய்க்குப் பின்னாலான ஈழத் தமிழ் மக்களின் வரலாறு அந்த மனிதனுடன் பின்னிப் பிணைந்து இசைத்தே நடைபோடுகிறது.
அவ்வகையில் அந்த மாமனிதனின் மிகப் பெரிய வரலாற்றை ஆவணப்பதிவாக்கி பத்திரப்படுத்த வேன்டிய கட்டுப்படு ஈழத் தமிழ் மக்களின் முன்னே குறிப்பாக தமிழ் அறிவு ஜீவிகளின் முன்னே குறிப்பாக பெரும் கடனாய் விரிந்து கிடக்கின்றது. இக்கடப்பாட்டின் ஒரு துளியாயும் அவ்வரலாற்று பெரும்பணி நோக்கிய சிறு தொடக்கமாகவும் விடுதலைப் பேரொளி உங்கள் முன் கதிர் பரப்பியிருக்கின்றது. பொய்மை வரலாறுகளைத் தகர்தெறிந்து தமிழீழ தேசியத் தலைவரின் வழிகாட்டலில் பல்லாயிரம் மாவீரர்கள் இலட்சிய ஆகுதியோடு முன்நகர்ந்து வரிந்து செல்லும் ஈழபோராட்டத்தின் சத்திய சாட்சியங்காளாக அனைத்துத் தமிழ் உறவுகளும் கைகோர்த்து முன் செல்வோம். உண்மை பெருவரலாற்றை உலகிற்குப் படைத்தளிப்போம்.


நன்றி
ஈழமுரசு ஐரோப்பா.
(நிர்வாக ஆசிரியர்குழு)
பரிஸ்- பிரான்ஸ்.


G.G.THARMARAJAN,
21, Jalan 5,
Taman Garing Jaya,
Kuala Garing,
48000 Rawang,
Selangor.
60166426574New Email names for you!
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails