துரோகத்திற்கு மேலும், மேலும் துரோகம், சோனியாவே உனக்கே இது நியாயமா.


மஹிந்தவின் பிரச்சார பணியில் இந்திய நிபுணர்கள் 50 பேர் சோனியாவின்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை .......

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு என சோனியா காந்தித் தரப்பினரினால் பிரசாரத்துறை சார்ந்த நிபுணர்கள் 50 பேர் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் பிரபல தேர்தல் பிரசார நிறுவனங்களில் ஒன்றான விப்லவ் கம்னிகேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

குமுதம்

ராஜபக்ஷே பிரச்சாரத்திற்கு இந்திய நிறுவனம் : சோனியாகாந்தி ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்
கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவிற்கு ஆதரவாக பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தியாவில் இருந்து 50 நிபுணர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை தேர்தலில் ராஜபக்ஷே மீண்டும் வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து, அவருக்கான பிரச்சார தந்திரங்களை மேற்கொள்வதற்கு இந்திய பிரச்சார நிறுவனங்களில் ஒன்றான விப்லவ் கம்யூனிகேஷன்சின் 50 நிபுணர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Posted in Labels: |

1 comments:

  1. Anonymous Says:

    That is tha character of her birth.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails