தமிழின துரோகி இளங்கோவன் வீட்டில் குண்டு வீசியது யார்? தமிழின உணர்வாளர்களை அழிக்க சதி திட்டம் தீட்டும் நயவஞ்சகர்கள்


இளங்கோவன் வீட்டில் குண்டு வீசியது யார்?
- போலீஸ் மீது பாயும் சீமான்
கனடாவில் இயக்குனர் சீமான் கைது!' என்ற பதற்றச் செய்தி தமிழ்
உணர்வாளர்களை உலுக்கிய இரண்டாம் நாளில்... சீமானின், 'நாம் தமிழர்'
இயக்கத் தோழர்கள் மூன்று பேர் கைது என்ற செய்தியும் வந்து பரபரப்பைக்
கூட்டியிருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அனுசரிக்கும் மாவீரர் தினத்துக்காக
உரையாற்ற கனடா சென்ற சீமான், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு சென்னைக்கு
அனுப்பப்பட்டார். அவர் நவம்பர் 27-ம் தேதி பின்னிரவு கடந்து சென்னை விமான
நிலையத்தில் வந்திறங்கும் சில மணித்துளிகளுக்கு முன்... இரவு 11.50
மணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் சென்னை
அடையாறு வீட்டில் யாரோ சிலர் பெட்ரோல் குண்டு வீச, வீட்டு வாசலில் உள்ள
பிளாஸ்டிக் நாற்காலி பற்றி எரிந்திருக்கிறது.
மாவீரர் தினத்தன்று ஈரோட்டில் தமிழக தொழிலாளர் முன்னணி சார்பில்
வைக்கப்-பட்டிருந்த பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களின் பேனர்களை இளங்கோவன்
தலைமையில் காங்கிரஸார் கிழித்தெறிந்தனர். இந்த நிலையில் இளங்கோவனின்
சென்னை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் கிடைத்ததும் அலர்ட்டான
போலீஸார், ஈரோட்டில் இருந்த இளங்கோவனுக்கும், மேலிடத்துக்கும்
தெரிவித்து-விட்டனர்.
இதையடுத்து, இளங்கோவன் வீட்டில் பெட்ரோல் குண்டு எறிந்ததாக சீமானின்
'நாம் தமிழர்' இயக்கத்தவர்களான... விஜயகுமார், மித்ரன், மேட்டூரைச்
சேர்ந்த மணி, அருள் ஆகியோர் மீது குற்றம் சுமத்தி விஜயகுமாரைத் தவிர,
மற்ற மூவரையும் கைது செய்தனர். இந்தக் கைது நடவடிக்கைதான், போலீஸார்
மீது விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.
"அரசியல் நிர்ப்பந்தமே 'நாம் தமிழர்' இயக்கப் பிரமுகர்கள் மீதான
கைதுக்குக் காரணம். மற்றபடி வெடிகுண்டு என்பதெல்லாம் கப்சா. தன் வீட்டில்
வெடிகுண்டு வீசியதை இளங்கோவன் சோனியாவிடம் சொன்னால், இங்குள்ள
ஆட்சிக்குப் பிரச்னை வந்துவிடப் போகிறதோ என்ற எண்ணத்தில்தான் இந்தக்
கைது நடந்திருக்கிறது. எங்கள் தோழர்களுக்கும் இதற்கும் எந்தச்
சம்பந்தமும் இல்லை" என கொதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் 'நாம் தமிழர்'
இயக்கத்தினர்.
மேலும்... "கடந்த ஆண்டு சீமான் சிறையில் இருந்தபோது அவரது கார் எரிப்பு,
பிப்ரவரி மாதம் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கார்
எரிப்பு, மே மாதம் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகம் மீது
தாக்குதல் என ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள் மீது
தொடர் தாக்குதல்கள் நடந்தன. ஆனால் அவற்றின் மீது இதுவரை பெயருக்குக்கூட
விசாரணை நடத்தாத போலீஸார்... இளங்கோவன் வீட்டில் ஒரு பிளாஸ்டிக்
நாற்காலி எரிந்ததற்கு, தொடர்பே இல்லாத எங்கள் இயக்கத்தினரைக் கைது
செய்கிறார்கள் என்றால்... இதில் அரசியல் உள்நோக்கம் இல்லாமல் வேறு என்ன
இருக்க முடியும்?
வெடிகுண்டு வீசப்பட்ட அதே நேரத்தில் விஜயகுமார், மித்ரன், மணி, அருள்
ஆகியோர் சீமானை வரவேற்க விமான நிலையத்தில் இருந்தனர். ஆனால், முறையாக
விசாரிக்காமல், தி.மு.க. அரசை அதிகம் விமர்சனம் செய்யும் இளங்கோவனைத்
திருப்திப்படுத்தத்தான் இந்த அவசரக் கைது நடவடிக்கை. ஈரோட்டில்
நடந்ததற்கு நாங்கள் நினைத்தால் ஈரோட்டிலேயே பதிலடி கொடுத்து
இருப்போம். அதற்கு ஏன் ஆள் இல்லாத அடையாறு வீட்டை நாங்கள்
தாக்கப்போகிறோம்?" என்றனர், 'நாம் தமிழர்' இயக்கத்தினர் கோபமாக.
அவர்கள் சொல்வது மாதிரியே... அன்று இரவு சென்னை விமான நிலையத்தில்
இருந்தபடி, சீமானின் வருகை குறித்து நம்முடன் செல்போனில் பேசிக்
கொண்டிருந்தார் மித்ரன். அவர்தான், அதே நேரம், அடையாறில் பெட்ரோல்
குண்டு வீசியதாகக் கைது செய்யப்-பட்டிருக்கிறார்.
இதுகுறித்-தெல்லாம் இளங்கோவனிடம் பேசினோம்.
"என் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது போலீஸார் உரிய
நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். அவர்கள்
உண்மையான குற்றவாளிகளா இல்லையா என்பதை நான் கூற முடியாது. அதை நீங்கள்
போலீஸிடம்தான் கேட்க வேண்டும். தா.பாண்டியன் வீட்டில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த கார் எரிக்கப்பட்டதும் தவறுதான். அவர்கள் யாராக
இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதில்
மாற்றுக் கருத்து கிடையாது. அமைதிப் பூங்காவான தமிழகத்தில் இதுபோன்ற
வெறிச் செயல்கள் மற்றும் வன்முறை மூலம் தீவிரவாதத்தை வளர்க்க
முயல்கிறார்கள். ஆரம்பகட்டத்திலேயே இதைத் தடுக்கவேண்டும்" என்றார் அவர்.
இதற்கிடையில், இந்த வழக்கில் தேடப்பட்ட 'நாம் தமிழர்' இயக்கத்தின்
ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில்
சரணடைந்தார். அவரைச் சந்திப்பதற்காக கோர்ட்டிற்கு வந்த சீமானிடம்
பேசினோம்..
"எமது இயக்கத் தோழர்கள் மீது திட்டமிட்டு போடப்பட்ட பொய் வழக்கு இது.
இதேபோல தமிழகம் முழுவதும் 22 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நான்
சிறையில் இருந்தபோது என் காரை எரித்துவிட்டு, என் வீட்டுச் சுவரில் இதே
இளங்கோவனின் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டிகளை ஒட்டிவிட்டுப்
போனார்கள் வன்முறைவாதிகள். ஆனால் அவர்கள் மீது போலீஸின் கைகூடப்
படவில்லை. அந்த சுவரொட்டிகளை கிழித்துக்கூட எறியாமல் அமைதி காத்த என்
தம்பிகளின் மீது இன்றைக்கு வெடிகுண்டு வீசியதாக வழக்கு
போடப்பட்டிருக்கிறது. எங்கே போகிறது தமிழ்நாட்டு அரசியல்? அதேபோல
பொதுவுடமை இயக்கத் தலைவர் தா.பாண்டியன் கார் எரிக்கப்பட்டது. இயக்குனர்
பாரதிராஜாவின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில்
தொடர்புடைய கார் எண்ணை குறிப்பிட்டு புகார் கொடுத்தும் காவல்துறையினர்
இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
தி.மு.க.வின் கூட்டணிக் கட்சி என்பதால் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில்
தாக்குதல் என்றதும், என்ன? ஏது? என்று விசாரிக்காமல் எங்கள் தோழர்களை
போலீஸார் கைதுசெய்து இருக்கின்றனர். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்
கட்சியை திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான்
ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. அதேபோல வழக்கை முடிக்கவேண்டும் என்ற
வேகம்தான் போலீஸாரிடம் இருக்கிறது. இந்த யாதார்த்தத்தை உணர்ந்து
இனிமேலாவது உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும்.
விஜயகுமார் வீட்டிற்குச் சென்று போலீஸார் துன்புறுத்தி உள்ளனர். அவரது
குடும்பம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், வழக்கை சட்டரீதியாகச்
சந்திக்கும் நோக்கிலும்தான் அவர் சரணடைந்துள்ளார். இதுபோன்ற
அத்துமீறல்களை சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம்" என்று சற்று
ஆவேசத்துடன் சொன்னார் சீமான்.
http://www.tamilagaarasiyal.com/
Muthamizh
Chennai

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails