மு.க.வின் சகோதர யுத்தம் !!! அனாமத்தாய் போன மூன்று 'தினகரன்' உயிர்கள் !!!
Posted On Sunday, 13 December 2009 at at 03:55 by Mikeமதுரையில் 'தினகரன்' பத்திரிகை அலுவல கம் எரித்து, மூன்று ஊழியர்கள் கொல்லப் பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 'அட்டாக்' பாண்டி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்திருக்கிறது மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம்! டி.எஸ்.பி-யாக இருந்த ராஜாராம் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுக்க பல்வேறு அதிர்ச்சி அலைகளை எழுப்பியதால், வேறு வழியில்லாமல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது தமிழக அரசு. நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், 32 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 85 பேர் சாட்சியமளித்தனர். சொல்லி வைத்தது போல், பாதிக்கப்பட்டபத்திரிகை அலுவலகம் தரப்பில் தொடங்கி அனைத்து சாட்சியங்களுமே, 'தங்களுக்கு எதுவுமே தெரியாது. நினைவில் இல்லை...' என்ற ரீதியிலேயே சாட்சியம் அளித்தனர். சி.பி.ஐ. தரப்பில் வழக்கின் முக்கிய சாட்சியங் களாகதொலைக் காட்சி மற்றும் அச்சு ஊடகங் களில் வெளியான படங்களை தாக்கல் செய்திருந்தனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்களின் வக்கீல் தரப்போ, 'அவை அனைத்தும் கிராஃபிக்ஸ்(?)' என்று வாதிட்டனர். இந்நிலையில்தான், கடந்த 9-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளார் நீதிபதி. குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். சம்பவம் நடந்ததும் அது தொடர்பான வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டதும் 9-ம் தேதி என்பது எதிர்பாராத ஒற்றுமை! தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய 'அட்டாக்' பாண்டி, ''நாங்கள் குற்றம் செய்யவில்லை என்பது நீதிமன்றம் மூலம் நிரூபணமாகியுள்ளது. இந்த வெற்றியை அழகிரி அண்ணனின் காலடியில் சமர்ப் பிப்பேன்...'' என்றார். தினகரன் ஊழியர்கள் படுகொலை வழக்கு கண்காணிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட்) கட்சியின் மாநில பொதுச் செயலாளருமான பாண்டியன், ''பட்டப் பகலில் பல பேர் கண் முன்னே நடந்த குற்றத்துக்கு எந்த தண்டனையும் இல்லை. அரசியல் செல்வாக்கும் ஆதரவும் இருந்தால் எதையும் செய்யலாம் என்றாகிவிட்டது. வேறென்ன சொல்ல?'' என்றார் விரக்தியுடன். சாதாரணமாக, சி.பி.ஐ-யால் விசாரிக்கப்படும் வழக்குகள் அவ்வளவு எளிதாகத் தோற்றுப்போவ தில்லை. ஆனால், இந்த வழக்கில் அதற்கு நேர் மாறாக நடந்திருக்கிறது. இதுதான் இறுதித் தீர்ப்பா அல்லது சி.பி.ஐ. மேல்முறையீட்டுக்கு போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! | |