செம்மொழி மாநாட்டில் தீக்குளிக்க ரெடி, தமிழினத்தனை பட்டினி போடும் கருணாநிதிக்கு எதிராக



''பி.எட்.. டி.பி.டி. முடித்து 20ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலையின்றி அவதிப்படும் 25ஆயிரம் தமிழாசிரியர்களுக்கு வேலை வழங்க அரசு முன்வராவிட்டால் செம்மொழி மாநாட்டு அரங்கின்முன்பு தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் ''என்று வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்கத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி அவர்கள் அரசு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது..''6 ஆயிரத்து 700நடுநிலைப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை என அரசே அறிவித்துள்ளது.

இந்த பள்ளிகளில் உடனடியாக பட்டதாரி தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
கடந்த 9.5.2007 அன்று பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையில் அறிவித்த 3 ஆயிரத்து 875 பட்டதாரி தமிழாசிரியர் பணியிடங்களை உடனடியாக நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும்.

மூன்றாண்டு பயிலும் புலவர் பட்டயப்படிப்பினை பட்டமாக மாற்றித்தர வேண்டும். அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் பி.எட். படித்தவர்களையே நியமனம் செய்வது போல தமிழாசிரியர் பணிக்கும் பி.எட்., டி.பி.டி., படித்தவர்களையே நியமனம் செய்ய வேண்டும். இந்த படிப்புகளை படிக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரிகளாக பதவி உயர்வு பெற வழிவகை செய்யும் அரசு ஆணைகளை ரத்து செய்ய வேண்டும்.

ஆசிரியர் தேர்வு ஆணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு பதிவு எண்ணை உடனடியாக நீக்க வேண்டும். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 75 சதவீதத்தை தமிழாசிரியர் பணியிடங்களுக்கு ஒதுக்க வேண்டும்.

பதிவு மூப்பு மூலம் நியமனம் செய்யும் அரசு, வயது மூப்பினையும் ஏற்று கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, பி.எட்., டி.பி.டி. பயிற்சி பெற்று 40 வயதைக் கடந்து வேலையின்றி அல்லல்படும் 25 ஆயிரம் தமிழாசிரியர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் வருகிற தமிழர் திருநாளாம் தமிழ்ப்புத்தாண்டு அன்று தமிழாசிரியர் பயிற்சி பட்டம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை அரசிடம் திருப்பித் தரும் போராட்டமும், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு அரங்கின் முன் வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்களின் தீக்குளிப்பு போராட்டமும் நடைபெறும்  "என்று தங்களின் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.



-

சம்பத்

"மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் எங்கள்  தமிழ்மண் குளிக்கும்"....

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails