அப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய்அப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய்
அன்னையைக் கொன்று அடுப்பினுளிட்டாய்
அண்ணனைத்
தம்பியை
அக்காளைத் தங்கையை
மாமனை மச்சானை
மடிதிறந்த மனைவியைப் பேரனைப் பூட்டனை
குருவை
அறத்தைச் சொன்ன ஆசானைத் தோழனை
இன்பிறவெல்லாம் கொன்றாய்
தேசத்தின் விடுதலையின் பெயரால்."

"எச்சங்களில்
"எந்த எலும்பு" உனது உறவினதென ஒருநாள் நீ அலைவாய்!
இவையெல்லாம்
எதன் பெயரால்,
எதன் பெயரால்,
எதன் பெயராலெனப் பிதற்றுவாய்.
அன்று,
உன் பிதற்றலுக்குச்
செவியெறிய நானோ அல்ல உன் வம்சமோ
இல்லாதிருக்கக் காண்பாய்!"--
தோழமையுடன்......
Muthuraja.I

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails