அவதாரும் முள்ளிவாய்க்காலும்


அம்பு வில்லுடன் இருக்கும் அப்பாவிகளை அடியோடு அழிக்கவந்த அவதார் திரைப்படத்தில்..
பூமியில் உள்ள கேவலமான மனிதரால் மாற்றுக்கிரக மக்கள் படும் அவலம் நமக்கு முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்துகிறது.

டைட்டானிக் திரைப்படத்தின் பின்னர் ஜேம்ஸ் கமரூன் எடுத்த அவற்றார் (அவதாரம்) திரைப்படம் இன்று உலகம் முழுவதையும் ஓர் உலுக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது. 12 வருடங்களுக்கு ஒரு தடவை குறிஞ்சி மலரும் என்பார்கள், அதுபோல டைட்டானிக் வந்து 12 வருடங்களுக்குப் பிறகு இந்தக் குறிஞ்சிப்பூ மலர்ந்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் வக்கிர மனம் கொண்ட மனிதர்களால் தாக்கப்படும் மாற்றுக்கிரக அபலை மனித்கள் உயிரைக் காக்கப் படும்பாடு, முள்ளிவாய்க்காலில் நடந்த கொடிய தாக்குதலை கண் முன் கொண்டு வருகிறது. இதில் ஒரு மாற்றம் முள்ளிவாய்க்காலில் கெதியற்றவர்கள் அழிக்கப்பட்டார்கள், இங்கு காக்கப்படுகிறார்கள் இதுதான் வேறுபாடு. இப்படம் திரையுலக வரலாற்றில் 21 ம் நூற்றாண்டின் அவதாரம் என்று போற்றப்பட வேண்டிய மேன்மை கொண்டது. அனைவரும் திரையரங்கு சென்று முப்பரிமாணத்தில் அதைக் காண வேண்டும்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இந்தியாவில் இருந்த என் தம்பியிடம் தொலைபேசியில் பேசியபொழுது, இதே கருத்தை அவனுடன் பகிர்ந்து கொண்டேன். இந்தப் படத்தில் அப்பாவி மக்கள் தாக்கப்படும் காட்சிகளும், பிறகு அவர்கள் இடம் பெயர்ந்து செல்லும் காட்சிகளும், சிறு குழந்தைகள், பெண்கள் படும் அவலங்களும் எனக்கு ஈழத்தில் நடந்த, நடந்துக்கொண்டிருக்கின்ற அவலத்தை நினைவுபடுத்தியது.

நன்றி,
சதீஷ்மூர்த்திPosted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails