நானாவது மடத்துக்குள்ளே அப்படி இப்படின்னு இருந்தேன். நீ கர்ப்பக கிரகத்துக்குள்ளேயே திருவிளை யாடல்களைத் தொடங்கிட்டியே



ஜெயேந்திரன் : அம்பிதேவநாதாநம்ம காஞ்சிபுரத்து பெருமையை பரப்புறதுல நீயும்என்னோட சேர்ந்துட்டே போலிருக்கே!
தேவநாதன் : எல்லாம்தாங்கள் காட்டிய வழி சுவாமி!

ஜெயேந்திரன் : போடாஅபிஷ்டு. நானாவது மடத்துக்குள்ளே அப்படி இப்படின்னு இருந்தேன். நீ கர்ப்பக கிரகத்துக்குள்ளேயே திருவிளை யாடல்களைத் தொடங்கிட்டியேஅபார துணிச்சல்டாநோக்கு!
தேவநாதன் : இதுக்கு என்ன சாமிதுணிச்சல் வேண்டியிருக்கு. நம்ம பகவான்கள் செய்யாததையா நாம் செய்துட்டோம். பகவான்கள் கற்பழிப்பு நடத்தினா, ‘புனிதம்ங்கிறான்! நாம் செய்தால் கிரிமினல் குற்றம்ங்கிறான். சே... பகவானோட நெருங்கி இருக்குறநமக்குஇந்த அற்ப உரிமைகள் கூட கிடையாதா?

ஜெயேந்திரன் : விவரம் தெரியாமப் பேசாதடா அம்பி! பகவானேஇப்ப நேரில் வந்து அந்த திருவிளையாடல்களை நடத்துனாசட்டத்துலே யிருந்துஎவனும் தப்பிக்க முடியாது தெரியு மோன்னோ?
தேவநாதன் : பகவான் தப்ப முடியாதுங்கிறதுசரிதான்! ஆனாநீர் தப்பிட்டேளே! கோயிலுக் குள்ளேயே சங்கர்ராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் உங்களுக்கு எதிரான சாட்சிகள் எல்லாம்,பல்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாளே! தி.மு.க. ஆட்சியிலேகாத்து உங்க பக்கம் வீசுறதே!

ஜெயேந்திரன் : அம்பிஅதுக்கெல்லாம் கொடுத்து வைக்கனும்டா! இப்போ நேக்கு எதிரான சாட்சியெல்லாம் பல்டி அடிச்சுட்டாளேஇதை எவனாவது எதிர்த்து வாயை திறக்குறானா பாத்தியாஒரு பயலும் பேச மாட்டான். சுப்ரமணியசாமியி லிருந்து சோ ராமசாமி வரைக்கும் எல்லோரும் வாயை மூடிட்டா... என்னைக் கைது செஞ்ச அந்த அம்மாளேஇப்போஎனக்கு எதிரா வாய திறக்குறதுல்லேயே! போலீசு எல்லாம்கூட இப்ப என் பக்கம் சாஞ்சிடுச்சு! தினமணி’, ‘தினமலர்’ எல்லாம் மீண்டும் நம்மள புகழத் தொடங்கிட்டானே! கவனிச்சியோ!
தேவநாதன்: ம்... கவனிச்சுண்டுதான் இருக்கேன்.... தினகரன் எரிப்பு வழக்குல கூட குற்றவாளி எல்லாம் தப்பிச்சுட்டா! போலீசே பல்டி அடிச்சுடுத்து. அதேபோல உங்களுக்கும் அடிக்குது யோகம்!

ஜெயேந்திரன் : அம்பிதினகரன் எரிப்பு வழக்குலபோலீசே பல்டி அடிச்சத துக்ளக் சோ கண்டிச்சு எழுதிட்டான். ஆனால் என் விஷயத்துல கண்டுக்கவே இல்லயே கவனிச்சியோ?
தேவநாதன் : அதுஎப்படி சாமி கவனிக்காம இருப்பேன். நான் கர்ப்பகிரகத்துக்குள்ளே கசமுசா’ செய்தேனேஅதை நம்ம ராமகோபாலன்னோதுக்ளக் ராமசாமியோசு.சாமியோ கண்டுக்கலியேஇந்து விரோதின்னு எவனாவது சுண்டு விரலை அசைத்தானாஇல்லையேசாமி! இப்படி நமக்குள்ள ஒரு நல்லஅன்டர்ஸ்டான்டிங்’ இருக்கற துனாலதான் நம்மவண்டி ஓடிகிட்டு இருக்கு. ஆனா லும்நீங்க தப்பிச்சுட்ட மாதிரிநான் தப்பிக்கிற துக்கும்ஏதேனும் வழி செய்ய மாட்டேளா சாமி.

ஜெயேந்திரன்: மடையாசெல்போன ஆத்துலேயே விட்டுட்டு வராம - ஏண்டா கர்ப்ப கிரகத்துக்குள்ளே எடுத்துட்டு போன! பூணூலை மட்டும் மாட்டிட்டு வந்தா போதாதோஅது தானே வினையா வந்துமுடிஞ்சுருச்சு’! சமஸ்கிருத மந்திரம் மட்டும் ஒலிக்க வேண்டிய இடத்துல, ‘செல்போன்’ அபசுரம் கேட்கலாமோ!
தேவநாதன்: நீங்க சொல்றது சரிதான் சாமி! ஆனா பார்ட்டிகளைஅவசரமாக அழைக் கிறதுக்குசெல்போன் வேணுமே சாமி. பக்தர்கள்கூட்டம் இல்லாத நேரம்பார்த்துபகவான் மட்டும் தனியா இருக்குற நேரத்துல அவசரமா பார்ட்டிகள’ அழைக்கணும்னா,பகவானையா அனுப்ப முடியும்அவன்தான் போவானாஅவன் இருக்கிற இடத்துல கல்லா தானே உட்கார்ந்திருப்பான்! விவரம் தெரியாம பேசறேளே! அவசரத்துக்கு செல்போன் உதவுமே தவிர,ஆண்டவனா உதவுவான்?

ஜெயேந்திரன்: அந்த ஆண்டவன்தான் எதுக்கும் உதவ மாட்டான்ங்குறது நமக்குத் தெரியாதாநன்னாவே தெரியும். அதனால் தானேநீயும்நானும் மடத்தையும் கருவறையையும் நமக்கு வசதியா பயன்படுத்த முடியுது! ஆனாகாலம் கெட்டுப் போச்சுடா! இனி நம்ம இஷ்டம்போல விளையாட முடியாது போலிருக்கு.
தேவநாதன் : என்ன சொல்றேள்?

ஜெயேந்திரன் : கர்ப்பகிரகம்மடத்துக்குள்ளே எல்லாம்வீடியோ கேமராவைப் பொருத் திட்டான்னு வச்சுக்கோநம்ம கதை அம்போ தான்!
தேவநாதன்: அந்த அளவுக்கு ஏமாந்துருவோமாஅதெல்லாம் சாஸ்திரத்துக்கு விரோதம்னு நம்மஇராமகோபாலன்துக்ளக்,ராமசாமி எல்லாம் கூச்சல் போட வச்சுட்டா போச்சு!

ஜெயேந்திரன்: ஆமாண்டாஅம்பி! கவர்ன் மென்ட்ல அப்போ பயந்துடுவான்ல. இந்த சாஸ்திர விரோதம்”, “ஆச்சார விரோதம்”, “பழக்க வழக்க விரோதம்” என்கிறதையெல்லாம் நாம இறுக்கிப் பிடிச்சுக்கனும். இல்லாட்டாநம்ம பாடு அவ்வளவுதான்!
தேவநாதன்:  அதாவதுஇந்த விரோதங்களை யெல்லாம் செய்யறதுக்கு பூதேவராகிய நமக்கு மட்டுமே உரிமை. மற்றவர்களுக்கு இல்லேங்கிறேள். அப்படித்தானே?

ஜெயேந்திரன் : இதையெல்லாம் நோக்கு விளக்கி விலாவாரியாக சொல்லணுமாடாபுரிஞ்சுக்க வேண்டியது தான்.
தேவநாதன்: புரிஞ்சுகிட்டேன் சாமி. அப்படியே என்னை வழக்கிலேயிருந்து காப்பாத்துறதுக்கு ஏதாவது வழிசொல்லுங்களேன்.

ஜெயேந்திரன் : யோசனை இருக்குடாஅம்பி! காஞ்சிபுரத்தை - தமிழ்நாட்டிலேயிருந்து தனியா பிரிச்சுநம்ம தலைமையிலே தனி ஆட்சியக் கொண்டு வந்துட்டோம்னாஒரு பயலும் நம்மை அசைச்சுக்க முடியாதுடா. அதைத்தான் ஆலோசனை பண்ணிகிட்டு இருக்கேன்.
தேவநாதன் : சபாஷ்! சரியான யோசனை சாமி. அதுலஎன்னையும் சேர்த்துக்கோங்க! காஞ்சிபுரத்த நாம் எல்லாம் சேர்ந்து புண்ணியபூமியா மாத்திடுவோம்! அப்பஎந்த கூட்டம்எந்த போலீசு வந்துடுவான்பார்த்துடுவோம்!
கோடாங்குடி மாரிமுத்து


Posted in |

4 comments:

  1. தர்ஷன் Says:

    அருமை
    இப்ப அடுத்தடுத்து உங்களைத் தூற்றி சிலப் பின்னூட்டங்கள் வர வேண்டுமே

  2. Anonymous Says:

    நண்ணா பேஷா இருக்குன்னா! அவா பேசிடுண்டது. அருமையான கற்பனை.

    நன்றி
    மகாராஜா

  3. Anonymous Says:

    சோ,ராம்,தினமலம்,தினமானங்கெட்டது
    எல்லாம் சேந்தே திட்டம் போட்டுட்டா!
    பூணூல் செய்யரதெல்லாம் புண்ணியம்.
    மத்தவா செஞ்சா பாவம்.
    பணம், பத்ரிகா தர்மமெல்லாம் பூணூலைக் காப்பத்த்தான்!

  4. Anonymous Says:

    If you have guts can you write articles on muslims and christians. Soothu adipaan

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails