இப்பொழுது சொல் நீ இந்தியனா,திராவிடனா,தமிழனா !
Posted On Tuesday, 29 December 2009 at at 10:23 by Mikeவணக்கம் இந்திய திராவிட தமிழர்களே,
இந்த கட்டுரையின் நோக்கம் நாம் எவ்வாறாக இந்திய தேசியத்தால் ஏமாற்றப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்பதே.என்னிடம் வாதிடும் பல தோழர்கள் இந்திய தேசியத்தை முன்னிறுத்தியே வாதிடுகிறார்கள்.உங்கள் தேசிய பற்று நல்லாத்தான் இருக்கு .உங்கள் இந்திய பற்றுக்கு நான் கடைசி வரியில் பதில் அளித்து உள்ளேன்.யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.சிந்திக்க வேண்டுகிறேன்.
நாம் பல வகையில் இந்திய தேசியத்தால் ஏமாற்ற பட்டாலும் முல்லை பெரியாறு விசயத்தில் எவ்வாறாக ஏமாற்றபடுகிறோம் என்பதை இங்கே காணலாம்,
யார் இந்த முல்லை பெரியாறு ?
மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத்திற்கு இடையே தொடங்கி இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது மேற்கு தொடர்ச்சி மலை.மேற்கிலிருந்து வரும் அரபிக்கடலின் குளிர் காற்றை தடுத்து, அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் மழை பொழியச்செய்து பல ஆறுகளை ரிப்பன் வெட்டாமல் தொடங்கி வைக்கும் பெருமை மேற்கு தொடர்ச்சி மலையையே சாரும். தனக்கு மேற்கே இருக்கும் பகுதிகளை தண்ணீர் பற்றாக்குறை இன்றி செழிப்பாக்கியும், கிழக்கே இருக்கும் பகுதிகளை தக்காண பீட பூமியாக்கி வறட்சியில் வைத்திருப்பதும் இம்மலைத்தொடரே என்றும் சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கும் பெரியாறு,அதாவது தமிழக எல்லையில் உருவாகி கேரளாவுக்குள் நுழைந்து மறுபடியும் தமிழகத்தின் வழியாக அரபிக்கடலில் கலக்கும் ஆறு தான் இந்த பெரியாறு.
கேரளாவின் ஜிவ நதி,
இந்த கட்டுரையின் நோக்கம் நாம் எவ்வாறாக இந்திய தேசியத்தால் ஏமாற்றப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்பதே.என்னிடம் வாதிடும் பல தோழர்கள் இந்திய தேசியத்தை முன்னிறுத்தியே வாதிடுகிறார்கள்.உங்கள் தேசிய பற்று நல்லாத்தான் இருக்கு .உங்கள் இந்திய பற்றுக்கு நான் கடைசி வரியில் பதில் அளித்து உள்ளேன்.யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.சிந்திக்க வேண்டுகிறேன்.
நாம் பல வகையில் இந்திய தேசியத்தால் ஏமாற்ற பட்டாலும் முல்லை பெரியாறு விசயத்தில் எவ்வாறாக ஏமாற்றபடுகிறோம் என்பதை இங்கே காணலாம்,
யார் இந்த முல்லை பெரியாறு ?
மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத்திற்கு இடையே தொடங்கி இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது மேற்கு தொடர்ச்சி மலை.மேற்கிலிருந்து வரும் அரபிக்கடலின் குளிர் காற்றை தடுத்து, அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் மழை பொழியச்செய்து பல ஆறுகளை ரிப்பன் வெட்டாமல் தொடங்கி வைக்கும் பெருமை மேற்கு தொடர்ச்சி மலையையே சாரும். தனக்கு மேற்கே இருக்கும் பகுதிகளை தண்ணீர் பற்றாக்குறை இன்றி செழிப்பாக்கியும், கிழக்கே இருக்கும் பகுதிகளை தக்காண பீட பூமியாக்கி வறட்சியில் வைத்திருப்பதும் இம்மலைத்தொடரே என்றும் சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கும் பெரியாறு,அதாவது தமிழக எல்லையில் உருவாகி கேரளாவுக்குள் நுழைந்து மறுபடியும் தமிழகத்தின் வழியாக அரபிக்கடலில் கலக்கும் ஆறு தான் இந்த பெரியாறு.
கேரளாவின் ஜிவ நதி,
- கேரளாவில் 244 கீ.மீ நீளமுள்ள மிகப்பெரிய வற்றாத ஆறாகவும்,
- கேரள மின் தேவையை அதிக பட்சம் பூர்த்தி செய்வதாகவும்,
- கேரளத்தின் பெரிய நகரங்களுக்கான பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும்,
- கேரளத்தின் மிகப்பெரிய இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளதும் பெரியாற்றின் குறுக்கேயே.
- இதனாலேயே பெரியாறு கேரளத்தின் ஜீவநதி என்று சொல்லப்படுகிறது.
தென் தமிழகத்தின் உயிர் நாடி,
- வைகை அணையின் ஒரே நீர் ஆதாரம்
- மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவாசய நிலம் இதை நம்பி
- 140 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பெரியாறு மின் உற்பத்தி நிலையம் இதை நம்பியே. .
- தென் தமிழகத்தின் குடிநீர் தேவையும் இதை நம்பியே குறிப்பாக தேனி,மதுரை,இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள்.
வற்றாத உயிர் ஆறான பெரியாற்றின் தண்ணீர் வீணாக அரபிக்கடலில் கலப்பதை தடுக்க இடையில் ஒரு அணை கட்டவேண்டும் என்று திருவாங்கூர் மன்னரிடம் 1862 ல் பிரிட்டிஷ் பிரதிநிதியான மதராஸ் ஆளுனர் கோரிக்கையை முன்வைக்கிறார். ஆங்கிலேயரின் கோரிக்கையை மறுக்க முடியாமல் காலந்தாழ்த்தி வந்த திருவாங்கூர் மன்னருக்கு ஆங்கிலேயரால் நெருக்கடி தரப்படவே 1886 அக்டோபர் 21 ல் அணை கட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். ஒப்பந்தத்தின் சாரம்,
ஒப்பந்த தேதியில் இருந்து 999 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் செல்லுபடியாகும். அணையில் தேக்கப்படும் நீரில் 104 அடிக்கு மேலுள்ள நீர் சுரங்க வழியின் மூலம் மதராஸ் கொண்டு வர வேண்டும். அணை கட்டப்படுவதால் மூழ்கடிக்கப்படும் 8000 ஏக்கர் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 5 வீதம் 40,000 ரூபாய் வருட வாடகையாக சென்னை அரசாங்கம், திருவாங்கூர் மன்னருக்கு கொடுக்கவேண்டும். அதாவது அணை அமைந்திருப்பது கேரளாவில் என்றாலும் (999 வருட வாடகை ஒப்பந்த அடிப்படையில்) தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
60 ஆண்டுகள் இதே ஒப்பந்தம் நடந்து கொண்டிருக்கையில் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சரி செய்ய, பெரியாறு தமிழகத்தில் நுழையும் இடத்தில் ஒரு மின உற்பத்தி நிலையம் கட்டுவதற்காக 1970 ல் பழைய ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அணை கட்டப்பட்டதால் அந்தப்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட நிலத்திற்கு ஏக்கருக்கு ரூபாய் 30 வீதம் 8000 ஏக்கருக்கு 2,40,000 ரூபாய் வருட வாடகையாக தமிழக அரசு, கேரள அரசிற்கு கொடுக்க வேண்டும். மட்டுமின்றி அந்தப்பகுதி மீன் படி உரிமையும் கேரள அரசிடம் செல்கிறது.
இந்நிலையில் 1979 ல் மலையாள மனோரமா என்ற கேரள இதழ், 'முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயத்தில்' இருப்பதாக பரபரப்பு செய்தியை வெளியிடுகிறது. அதைத்தொடர்ந்து கேரள அரசு மற்றும் மத்திய நீர் வளத்துறையின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு அணையை மேலும் வலுப்படுத்த முன்வருகிறது. அதுவரை தேக்கப்பட்டுக்கொண்டிருந்த நீர் 154 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்படுகிறது. அணையில் மராமத்து வேலைகள் செய்யப்பட்டு வலுப்படுத்தப்பட்ட பிறகு நீர் மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்துவிட்டது, இன்று வரை மறுத்து வருகிறது.
என்ன தான் பிரச்சனை?
அணையில் இருந்து வரும் நீர் முல்லை ஆறு வழியாக தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு பாசன மற்றும் குடிநீர் தேவைகளை நிறைவு செய்து வைகை ஆற்றில் கலக்கிறது. அதுவே வைகை அணையின் நீர் ஆதாரமாகவும் இருக்கிறது. அதனாலேயே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் பாசன மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையும் நிறைவடைகிறது. இவற்றிக்கு தமிழ்நாட்டிற்கு குறைந்தபட்ச தேவை 84 மில்லியன் கனமீட்டர் தண்ணீர். இந்த குறைந்தபட்ச தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டுமாயின், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட வேண்டும். தற்போது இருக்கும் 136 அடியில் போதுமான தண்ணீர் கிடைக்காமல் மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல ஏக்கர் நிலம் தரிசாகிக் கிடக்கிறது. பல விவசாயக் குடும்பங்களின் தற்கொலைக்கும் பட்டினிச் சாவுக்கும் தண்ணீர் பற்றாக்குறையே காரணம்.
அணையின் நீர் மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டதால், நீரின் கொள்ளளவு 10.4 ல் இருந்து 6.4 டி.எம்.சி யாக குறைந்துள்ளது. அதனால் 140 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் கணிசமான அளவு மின் உற்பத்தி குறைந்துள்ளதும் தமிழக அரசிற்கு நஷ்டமே. அது மட்டுமின்றி, அணையிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் மூலம் அடுத்த அணையான இடுக்கியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்திற்கே விற்கப்படுவது கொடுமை. நமக்கு தரவேண்டிய தண்ணீரைக் கொண்டு மின்சாரம் தயாரித்து அதை நமக்கே மீண்டும் விற்பனை செய்கிறார்கள்.
152 அடியாக இருந்த போது மூழ்கியதாக சொல்லப்பட்ட 8000 ஏக்கர் நிலம், தற்போது 136 அடியாக நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் மூழ்கிய நிலத்தில் பகுதி மீட்கப்பட்டுவிட்டது. மீதி நிலத்தை கேரள அரசும் கேரள மக்களும் பயன்படுத்திவருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு 8000 ஏக்கர் நலத்திற்கான வாடகையை செலுத்திவருகிறது. அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டால் அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை காலிசெய்ய வேண்டிவரும் என்ற அச்சமும் உள் அரசியலும் இப்பிரச்சனையில் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.இந்த செய்திகளை நான் நக்கீரன் இணையதில் இருந்து சேகரித்தது .
உச்சநீதி மன்ற தீர்ப்பையே மதிக்காத கேரள அரசு,
152 அடிக்கு நீர் தேக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்திலும், 136 மேல் உயர்த்தக்கூடாது என்று கேரள அரசு கேரள உயர் நீதி மன்றத்திலும் வழக்குத்தொடங்கியது. அவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2006 பிப்ரவரியில் இருமாநிலத்திற்கும் பொதுவாக 142 அடியாக நீர்மட்டத்தை வைத்துக்கொள்ள ஆணை பிறப்பிக்கப்படுகிறது. உச்சநீதி மன்றத்தின் ஆணையை சற்றும் மதிக்காத கேரள அரசு 136 அடியிலிருந்து நீர் மட்டத்தை உயர்த்தாததோடு மட்டுமின்றி, அணை அபாயகட்டத்தில் இருப்பதாகச்சொல்லி புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. பெரியாற்றில் புதிய அணை கட்டப்பட்டுவிட்டால் மேலே குறிப்பிட்டுள்ள தமிழக மாவட்டங்கள் குடிக்கவும் தண்ணீர் இன்றி பஞ்சத்தால் பாலைவனமாகிவிடும்.
கேரளாவின் நாடகமும் மத்திய அரசின் சூழ்ச்சியும்,
கடந்தவாரம் கேரள அரசு வெளியிட்ட ஒரு அறிக்கை, 'முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 40 லட்சம் பிணங்களை அரபிக் கடலில் தேடவேண்டியிருக்கும்' என்று சொல்கிறது. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணையாலும் தாங்க முடியாது என்கிறது கேரள அரசு. இதற்கிடையே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள மத்தியஅரசின் ஒப்புதலும் கேரள அரசிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மலையாளிக்கு நம்மளால ஆப்பு வைக்க முடியாத என்ன?
- பெரியாறு அணையின் கடைசி தண்ணீர் குடிக்கப்படும் இராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் டன் கணக்கில் கேளராவுக்கு சென்று ஏற்றுமதியாகிறது.
- ஒட்டஞ்சத்திரத்தில் இருந்து காய்கனிகள் கேரளாவிற்கு செல்கிறது. (இவ்வளவு நீர் வளம் இருந்தும் கேரளாவில் விவசாயம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதை நினைவில் கொள்க)
- வீடு கட்ட மணலும் கூலித்தொழிலாளர்களும் தமிழ்நாட்டிலிருந்தே செல்வதும் கவனத்தில் ஏற்கவேண்டும்.
- தமிழகத்தில் இருந்துதான் கேரளாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்கின்றனர்.
- கேரளாவுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் செல்கிறது. (பால்,அரிசி,பழங்கள்,மீன்கள்,காய்கறிகள் முதலியன்)
- அட இவ்வளவு ஏன்.. நல்ல கல்விக்கு கேரளமக்கள் தமிழ்நாட்டையே நம்பி இருக்கிறார்கள்.
20 மந்திரிகளை வைத்து கேரளவால் சாதிக்க முடியும் பொழுது 39 மந்திரிகளை வைத்து இதுவரை நாம் தமிழகத்துக்கு ஒன்றையும் புடுங்க முடியவில்லையே ஏன்? காவிரியையும், பாலரையும் இழந்ததால் தான் 55 % விவசாயத்தை இழந்து
நிற்கிறோம்.நமது பாதி விவசாயம் வானம பார்த்த பூமியாக மாறி போய் உள்ளது, முல்லை பெரியாறும் கையை விட்டு போனால் நாம் நாளைய சந்ததிக்கு எதை கொடுக்க போகிறோம், அரசியல்வா(வி)யாதிகளின் சித்து விளையாட்டில் இதுவும் ஒரு அங்கம். தமிழர்கள் நம்மிடம் ஒற்றுமை இல்லை. அண்டை மாநிலங்களில், பொதுப் பிரச்சனைக்கு ஒன்று சேருவது மாதிரி, தமிழ் நாட்டில் சேருவதில்லை. அப்புறம் எங்க இருந்து உருப்புடுவது.சுயநல திராவிட கட்சிகள் மட்டுமின்றி பொதுவுடைமை பேசும் கம்யூனிஸ்டுகளும் இந்த விஷயத்தில் நமக்கு ஆதரவாக இல்லை. பொலீட் பீரோவில் கேரளாவிற்கு ஆதரவாகத்தான் பேசியிருக்கிறார்கள்.இன்னும் எத்தனை காலத்துக்கு இந்திய தேசியத்தையே நாம பேசி ஏமாற போகிறோம்,
இப்பொழுது சொல் நீ இந்தியனா,திராவிடனா,தமிழனா !
நான் இந்தியன் என்றால் அந்த இந்தியனே என் இனத்தையே அழிக்கிறான் இந்தியன் ,
நான் திராவிடன் என்றால் அண்டை மாநில திராவிடனே எனக்கு தண்ணிர் தர மறுக்கிறான்? (நம் ஈழ தமிழர் அழிய திராவிட மலையாளிகள் தூது போனது).
அப்படி என்றால் நான் யார்? தமிழா ! திராவிட அரசியலையும் ஆரிய பார்ப்பானையும் நம்பி இன்னும் எத்தனை காலம் நாயினும் கீழாக சாக போகிறோம்,தமிழனாக ஒன்றுபட்டால் எல்லாமே கிடைக்கும்,புரிந்து கொள்ளாத வரை நாம் நக்கி பிழைக்கும் நாய்களே அன்றி மனிதர்கள் அல்ல.
....பகலவன்....
இந்தியனாகவோ, திராவிடனாகவோ இருப்பதைவிட மானமுள்ள தமிழனாக இருப்போம்.
தமிழனாய் மட்டுமே அடையாளப்படுத்திக்கொள்வோம்.- தமிழன்.
சாட்டை,.. ஆனால காற்றில் வீசப்பட்ட சாட்டை
தோழர் மைக் இந்த பதிவை தங்கள் வலைப்பூவில் சேர்த்து தமிழ்மணத்தில் வலம் வரவிட்டால் நான் மகிழ்வேன்..
//கருநாகம் உலக செம்(கனி)மொழி மாநாட்டிற்கு அழைப்பு!...//
உடன் பிறப்பே..
நேற்று நீ அடித்த டாஸ்மார்க்கு போதை தெளிந்திருக்காது என்று எனக்கு தெரியும்..இருந்தாலும் உன்னை நல்வழிபடுத்த வேண்டிய பொறுப்பு கழகத்திற்கு இருப்பதால் இக்கடிதம் எழுதுகிறேன்.. இக்கடிதம் எழுதாமலே நீ ஊரை அடித்து உலையில் போட்ட காசை கொண்டு..ஏழை எளியவர்தம் உணவு மற்றும் பயணகளைப்பு அயர்ச்சியை குவாட்டரும் கோழி பிரியாணியையும் கொடுத்து ஊரை வளைத்து நம் கனிமொழி மாநாடுக்கு நிறைத்துவிடுவாய் என எனக்கு தெரியும்..
இருந்தாலும் கடமை என்று உள்ளதல்லவா? எதிர்கட்சி அறிவீலிகளும் தமிழ் உணர்வு பதர்களும் இன்று எம்மை பார்த்து எகத்தாளம் இடுவதை கண்டாயோ.கழக கொள்கை என்னவேன்று கேட்கிறார்கள்.. கழகம் ஒரு குடும்பம் என்றார் அண்ணா.. இன்று அதே தான் நாமும் சொல்கிறோம் குடும்பம்தான் கழகம்..
டெல்லிக்கு அஞ்சா நெஞ்சன் அழகிரியாம்..
தமிழ்நாட்டு இளித்தவாயவர்களுக்கு ஸ்டாலினாம்..
ஈழ உறவுகளுக்கு கனி மொழியாம்..
கலைத்துறைக்கு உதயநிதியாம்..
மக்களை எந்நேரமும் மயக்கி சினிமா மோகத்தில் வைத்திருக்க தயாநிதியாம்..
ஊரை கொள்ளை அடிக்க எனது அமைச்சர்களாம்..
இத்தாலிகாரிக்கு புடவை துவைக்க நானாம்..
மக்களை எருமை மாடுகளாக வைத்திருக்க நீயாம்..
காவிரி கைவிட்டு போனால் என்ன?
முல்லை பெரியாறு அணையை பெயர்த்தால் என்ன?
பாலாறு பணால் ஆனால் என்ன?
ஈழ தமிழன் செத்தால் என்ன?
தமிழ் மீனவன் செத்தால் என்ன?
எவன் செத்தால் நமக்கென்ன? நமக்கென்ன?
தமிழ் தமிழ் என்பதே ஊரை அடித்து உலையில் போடும் நமது தாரக மந்திரம்..
பார்பானை திட்டுவது நமது கொள்ளை அடிப்பதை பொறுக்காமல் இருப்பவர்கள் மீது எரியும் எறிகணைகள்..
தேதிகளும் ..பழையநிகழ்வுகளும் நாம் தப்பிக்கும் வழிமுறை..
நடிகைகளின் குத்தாட்டம் நம் கண்ணை குளிர்ச்சி செய்யும் அருமருந்து..
கடிதமும் தந்தியும் ஊரை ஏமாற்றுவதற்கு கிடைத்த ஆயுதங்கள்(நம்து அமைச்சர் ராசாவுக்கு வருமானமும் கூட)..
இந்தியாவை எப்படி பாகிஸ்தான் ஒற்றுமையாக வைத்திருக்கிறதோ..
அதே போல் நம்மை ஜெயலலிதா ஒற்றுமையாக வைத்திருப்பார்..
இன்னும் பல சொல்லிகொண்டே போகலாம் ..
இது போகட்டும்..கழக ஆட்சியில் டாஸ்மார்க்கு உன் பகுதியில் திறந்திருக்கிறதா? நீ விரும்பிய உற்சாக பானம் தங்கு தடையின்றி கிடைத்ததா?கழக ஆட்சி அளித்த 2 ஏக்கர் நிலத்தில் காய்கறிகளை பயிர் செய்து ..நாய் கூட சாப்பிட மறுக்கும் 1 ரூபாய்க்கு கொடுத்த புழுத்த அரிசியை பொங்கி.. தின்று ..இலவச வண்ண தொல்லைகாட்சி பெட்டியில் மானாட அடுத்தவன் பொண்டாட்டி மார்பாட நிகழ்ச்சியில் லயித்திருக்கின்றாய் என்பது எனக்கு தெரியும்.. இருந்தாலும் உன் கடமை ஒன்று உண்டல்லவா?
கோவை கிடுகிடுக்க .. உலகம் நடுநடுங்க..கனிமொழியாம் செம்மொழி மாநாட்டுக்கு ஊரை அழைத்துவா.. உன் வீட்டை அழைத்துவா.. உன் உறவை அழைத்துவா..
நன்றி நண்பரே, உங்களது பதிவினை பகிர்ந்து கொண்டதற்கு
மைக்
நல்லகாலம் நீங்கள் பெண்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை.