தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ள யுத்த கைதிகளை இரகசியமாக படுகொலை செய்வதற்கு திட்டம்


ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தடுப்பு முகாம்களில் சிறவைக்கப்பட்டுள்ள யுத்த கைதிகளை இரகசியமாக படுகொலை செய்வதற்கு ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சாட்சிகளற்ற யுத்தம் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் செயல்பட்டு வரும் மனித உரிமை செயல்பாட்டளர் ஒரவரை மேற்கோள் காட்டி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர் வரும் ஜனாதிபதித் தோடதலுக்கு முன்னர் சுமார் 10,000 தமிழர்களை படுகொலை செய்வதற்கு ஸ்ரீலங்காவின் புலனாய்வு பிரிவு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தால் நிர்வகிப்படும் புனர்வாழ்வு முகாம் மீது மீட்பு  நடவடிக்கை என்ற பெயரில் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்களை படுகொலை செய்வதே புலனாய்வு பிரிவின் நோக்கம் என்று இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தனக்கு தகவல் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பு முகாம் மீது விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் தாக்குதல் நடத்தி தடுத்த வைக்கப்பட்டுள்ள தமது போராளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அந்த தேமாதல்களின் போது பல கைதிகள் உயிரிழந்துவிட்டதாகவும் அறிவிப்பதே புலனாய்வு பிரிவின் திட்டம் என்று தெரியவந்துள்ளது.

இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெருமளவானவர்களை படுகொலை செய்வதற்கு புலனாய்வு துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையை தடுப்பதற்கும் அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கும் சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியன உடனடியாக இந்த தடுப்பு முகாம்களில் தமத அதிகாரிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்குரிய அழுத்தங்களை சர்வதேச சமூகம் இந்த அமைப்புகள் மீது பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



--
தோழமையுடன்......
Muthuraja.I

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails