நெப்போலியன், அலெக்சாண்டர் வரலாற்றில் படித்த நாம் இன்று ஒரு நிஜ வீரன் பிரபாகரனின் சகாப்தத்தில வாழ்கிறோம் என்பதனை விட வேறு என்ன பெருமை வேண்டும் நமக்கு

அந்த அன்பு, உண்மை தலைவனுக்கு என்றென்றும் மறவாத தமிழ் மக்களின் உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்
நவம்பர் - 26 தமிழின தலைவனின் பிறந்தநாள்

என் தமிழினம்
தாழ்ந்ததாய் இங்கு வரலாறு இல்லை ...!

நெப்போலியன் மாவீரனாம் ...?
அலெக்சாண்டர் உலகம் வென்றவனாம் ...?
யார் கண்டார் ? வரலாறு மட்டுமே என் கைகளில் ..!


எட்டையபுரத்தில் ஒரு தாயின் கருவறை
அக்னி பிழம்பைச் சுமந்ததாம் ...!
வல்வெட்டிதுறையில் பார்வதி தாயின் கருவறை
ஒரு புலிக்குட்டியைச் சுமந்ததே ...!
தமிழன் வீரம் உலகம் அறிய
வாழும் நீயே சாட்சி ...!

வெள்ளையனுக்கு வேட்டு வைத்தான்
வீர பாண்டிய கட்ட பொம்மன் ...!
கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டான்
அன்று காட்டிக் கொடுத்தான் எட்டப்பன்..!
இன்று உறவாடிக் கெடுத்தான் கருணா
என்ற தமிழின துரோகி ...!


ஈழம் என்பது தமிழன் ஆண்டது
கங்கை வென்றான்
கடாரம் கொண்டான்
ஈழம் சென்றான் - எம் சோழன்...!
தமிழன் தாழ்ந்ததாய் இங்கு வரலாறு இல்லை ...!

நீ ஒரு மாவீரன்
வான்படை அமைத்தாய்
நீர்ப்படை அமைத்தாய்
தரைப்படை அமை
த்தாய்
தமிழீழ
த் தாயின் தலையில் மகுடம் வைத்தாய்...!
தமிழன் யார் என்று உலகிற்கு உணர்த்தினாய்....!


உன் காலத்தில் தமிழனாக
வாழ்வதற்கு
த் தலை நிமிர்கிறேன்...!
உன் ஆசை வெல்லும்
தமிழீழம் பிறக்கும்
எமது தாகம் தமிழீழ தாயகம்...!உதய சூரியன்
தமிழகம்Get your preferred Email name!
Now you can @ymail.com and @rocketmail.com.

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails