கலைஞருக்குப் பாமரனின் பதில்


கலைஞருக்குப் பாமரனின் பதில்

இந்திய அரசியலில் ஒரு மூத்த அறிவாளியான கலைஞர், ஜனநாயகத்தின் அடிப்படையை மறந்து பேசுவது எங்களுக்கு வியப்பை அளிக்கிறது. இன்றைய நாட்களில், ஈழ மண்ணை சிங்களவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல் தெளிவின்மையே காரணம் என்று கூறி வருகிறார். ரணில் விக்ரமசிங்கே ஆட்சிக்கு வந்திருந்தால், தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைத்திருக்கும் என்றும், 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் அதிபர் தேர்தலைப் புறக்கணிக்கத் தமிழ் மக்களைக் கேட்டுக்கொண்டதன் விளைவாக ரணில் தோற்றதால், இன்றைய நிலைமை என்றும் கூறுகிறார்.

அவர் கூறுவது உண்மையா?

இதோ எம் தெளிவு.

ஜனநாயகத்தின் அடிப்படையே, பெரும்பான்மை மக்கள் ஒற்றைக் கருத்துடன் தங்களுக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்துத் தமக்கான அட்சியை நிறுவுவதுதான். இலங்கையில் நடைபெற்று வரும் இனமோதல்களுக்கான தீர்வு என்பது இரு இனமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.

ஒரு வேளை, தமிழ் மக்கள் வாக்களித்திருந்து, ரணில் வெற்றி பெற்றிருந்தால், அவர் ஜனாதிபதி ஆகியிருப்பாரேவொளிய பெரும்பான்மை சிங்களவர்களைப் பிரதிபலித்திருக்கமாட்டார். தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விலகியதிலிருந்து, சிங்களவர்களின் உண்மையான எண்ணம் வெளிப்பெற்றது. சமாதானத்தையும் பேச்சுவார்த்தையையும் பெரும்பாலான சிங்களவர்கள் புறக்கணித்துள்ளனர். மகிந்தவைத் தேர்ந்தெடுத்ததின் மூலம், சிங்கள இனம், தமிழ் மக்களுடன் அரசியல் தீர்விற்குத் தயாராகவில்லை என்பதையே காட்டுகிறது.

ரணில் ஜனாதிபதியாகி, ஒருவேளை தீர்வொன்றை அளித்தாலும், அது பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதரவின்மையால், குறுகிய காலத்திலேயே பயனற்றதாகிவிடும். மீண்டும் பல போராட்டங்கள் வெடிக்கும்.

ஈழப் போராட்டத்திற்குத் தீர்வைப் பலர் முன்வைக்கின்றனர். ஆனால் அவர்கள், "நிரந்தரம்" என்கிற சொல்லை மறக்கின்றனர். நிரந்தரமான தீர்வு என்பது, பெரும்பான்மை சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும்போதே அமையும். இப்படியான தீர்வு ஒன்று அமையாவிடின், இலங்கை இயற்கையாகவே இரண்டாக உடையும்.

தமிழ் மக்கள், அரசியல் ரீதியாகப் போராட வேண்டுமாயின், ஜனநாயகக் கட்டமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இலங்கை அரசை விரும்பாதவர்கள், அந்த அரசுக்கான தேர்தல்கள் யாதிலும் கலந்துகொள்ளக் கூடாது. தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும்.

மக்களை நம்பியே அரசேவொளிய அரசை நம்பி மக்களில்லை. பெரும்பான்மை மக்கள் பங்குபெறாத எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெறுபவர்கள் செல்வாக்கற்றவர்களே.

ஈழ மக்கள் வாக்களிக்காவிடில், ஈழத்தில் இலங்கையரசின் அதிகாரம் செல்லாது. இவ்வகையான போராட்டமானது, இந்தியாவையே கலக்கங்கொள்ளச்செய்யும்.

ஈழம் இயல்பாகப் பிறக்கும்.


--தெளிவான தமிழன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails