அடிச்சான்யா பல்டி இந்த தள்ளாத வயதிலேயும், இந்த தமிழினத்துரோகி


பல ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது என்று நான் சொல்லவில்லை: திடீரென குத்துக்கரணம் அடிக்கும் கருணாநிதிதமிழினத்தின் துரோகி கருணாநிதி செய்வதெல்லாம் செய்து விட்டு இப்போது திடிரென ஒரு கேள்வி பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். உலக தமிழினத்தின் தலைவராக வேண்டும் என்ற இரட்டை வேட முயற்சியில் தமிழின துரோகி என்ற பட்டத்தால் வெந்து போயுள்ள ஐயாவின் கேள்வி பதில்.

karunaleadthurokiமுதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,
கேள்வி:  ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள ஒரு பேட்டியில்  “இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது. நான் மவுனமாக அழுவது யாருக்கு தெரியும்?” என்கிறாரே கருணாநிதி?  என்ற கேள்வி கேட்கப்பட்டு  அதற்கு வேக வேகமாக பதில் சொல்லப்பட்டிருக்கிறதே?
பதில்:  நான் எனது கடிதத்தில், “இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது” என்று எந்த இடத்திலும் எழுதவே இல்லை. ஆனால் நான் எழுதாததை, நான் கூறாததை கூறியதாக ஒரு கேள்வியைக் கேட்கச் செய்து, அதற்கு என்னைத் தாக்கி பதில் கூறப்பட்டுள்ளது. நான் என்னுடைய கடிதத்தில் தெளிவாக எழுதியிருக்கிறேன். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:
நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை.
இப்படி சகோதர யுத்தம் காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டோம். முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறினோம்.
இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து  தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக்கொண்டு போய்விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை நான் எழுத நேரிட்டது.
இப்படியெல்லாம் பொதுவாக என்னுடைய வேதனையை வெளிப்படுத்தினேன். அதையெல்லாம் மறைத்துவிட்டு இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது என்று நான் சொன்னதாக கற்பனையாக ஒரு கேள்வி கேட்கப்பட்டு, அதற்காக என்மீது பாய்ந்து விழுந்து குதறி பதில் சொல்லப்பட்டிருக்கின்றது.
அந்த இதழ் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது! அந்த இதழின் சிறப்பு செய்தியாளர் ஒருவர் நான் எழுதாததை எழுதியதாகச் சொல்லி கேள்வி கேட்டு  அப்படி நான் எழுதினேனா இல்லையா என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் ஒருவர் என்னைத் தாக்கி பதில் சொல்லியிருப்பது; என் மீது வசை பாடுவதற்காகவே இருவரும் சேர்ந்து ஜோடித்த நாடகமேயாகும்.
கேள்வி:  ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள ஒரு பேட்டியில் “சகோதர யுத்தம் நடத்தியதால் தான் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக கருணாநிதி சொல்கிறாரே?” என்று ஒரு கேள்வியும் அந்த இதழில் கேட்கப்பட்டு, அதற்கும் உங்களைத் தாக்கி பதில் கூறப்பட்டுள்ளதே?
பதில்:  இதுவும் நான் சொல்லாததுதான். சகோதர யுத்தம் நடந்தது என்று சொல்லியிருக்கிறேன். அதனால் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் சொல்லவில்லை. சகோதர யுத்தம் காரணமாக ஒட்டுமொத்தமாக நாம் பாதிக்கப்பட்டோம் என்று சொல்லியிருக்கிறேன். அதிலே என்ன தவறு என்று தெரியவில்லை.
கேள்வி:  “மாவீரன் மாத்தையா” என்று நீங்கள் ஒரு துரோகியை அழைத்து விட்டதாக அந்த இதழுக்கு பேட்டி அளித்தவர் சொல்லியிருக்கிறாரே?
பதில்:  மாத்தையாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரே அவர்தான்! அப்போது அவரை மாவீரன் மாத்தையா என்று தான் அறிமுகம் செய்துவைத்தார்.
கேள்வி:  அந்த இதழில் வந்த பேட்டியில்  “வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னதெல்லாம் அலட்சியப்படுத்தப்பட்டது என்று வேதனைப்படுகிறாரே கருணாநிதி?” என்ற ஒரு கேள்வியும் இடம் பெற்று, அதற்கும் பேட்டி அளித்தவர் எந்த அளவிற்கு உங்களைத் தாக்க முடியுமோ அந்த அளவிற்கு தாக்கி பதில் அளித்திருக்கிறாரே?
பதில்:  இந்த கருத்து நான் எழுதியது தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதிலே என்ன தவறு? “விடுதலைப்படை முகத்திலே நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு  தளபதிகளுக்கு  தலைவர்களுக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு; மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக்கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு; இது போன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள்” என்று நான் எழுதியது உண்மைதான். இதிலே எந்தப் பிழையும் இருப்பதாக நான் இப்போதும் உணரவில்லை. நாம் கூறியதை அலட்சியப்படுத்தி  இப்போது நம்மைத் தாக்கி மிக வேகமாக பதில் சொல்லியிருப்பவர்கள் சொன்ன யோசனைகளையெல்லாம் கேட்ட காரணத்தினால்தான் இன்று இலங்கை தமிழினம் அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாகி தவிக்கின்றது என்பதுதான் ஆதாரபூர்வமான உண்மை!
வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு என்று நான் கூறியிருப்பதில் இருந்தே, அவர்களின் வீரத்தைப் பாராட்டியிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கண்ணை மூடிக்கொண்டு நம்மைத் தாக்க வேண்டுமென்ற வெறி கொண்டவர்களுக்கு அப்படித்தான் பதிலளிக்கத் தோன்றும். வீரத்தையும், விவேகத்தையும் பற்றி நான் இப்போது கூறவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய “சாக்ரடீஸ்” ஓரங்க நாடகத்திலேயே “வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்! தீட்டிய வாளும், தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தீரர்களே! இதோ நான் தரும் ஆயுதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்! அறிவாயுதம்! அறிவாயுதம்!” என எழுதியிருக்கிறேன். அந்த வசனத்தை பல மேடைகளில் பேசிக் காட்டியவர்கள்தான் இப்போது அதனை இழித்துரைக்கிறார்கள். எனக்கு அப்போது பேசியதுதான் மனதிலே நிற்கிறது

நன்றி நெருடல்

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails