பொய் வழக்கில் என் தம்பிகளைக் கைது செய்யும் காவல் துறை என் காரை எரித்தவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?-செந்தமிழன் சீமான் ஆவேசம்நேற்று 27-11-09 வெள்ளிக்கிழமை இரவு 12 மணியளவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 3 தமிழர்களை இன்று அதிகாலை காவல் துறை கைது செய்துள்ளது.அவர்களை இன்று சனியன்று மாலை 3 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பியது.அப்பொழுது தனது நாம் தமிழர் இயக்கத் தம்பிகளைச் சந்தித்து அவர்களைச் சிறைக்கு வழியனுப்ப வந்த செந்தமிழன் சீமான் அப்பொழுது கூடியிருந்த நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில் எனது தம்பிகளைப் பொய் வழக்கில் காவல்துறை கைது செய்துள்ளது.அவர்கள் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று நிருபித்து விரைவில் சிறையை விட்டு வெளியேறுவார்கள்.எங்கள் இயக்கத்தின் தம்பிகள் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டார்கள்.

தமிழகத்தின் காவல்துறையை நோக்கி நான் ஒரு கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.எனது காரை இதே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளைர்கள் தான் 6 மாததிற்கு முன்பு எரித்தார்கள்.அதற்கு இன்று வரை காவல்துறை யார் மீதும் நடவடிக்கை இல்லை.அதே போல இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் நாட்டுச் செயலாளர் தா.பாண்டியன் கார் எரித்த கயவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை.மேலும் இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திலும் இன்று வரை நடவடிக்கை இல்லை.
இந்த சம்பவத்தில் மட்டும் உடனடியாக பொய்யாக எங்கள் இயக்கத்தவரைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
காவ்ல் துறை உண்மையுடனும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு செந்தமிழன் சீமான் ஆவேசமாகக் கூறினார்.

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails