சீமான் ஒரு தமிழ் மார்டின் லூதர் கிங் 11 வயது கனேடிய மகன்‏


பாசமுள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு!

உங்கள் ஒரு தமிழரின் சொற்களுக்கே சிங்களவன் இப்படி பயப்படுகிறான் என்றால் ..............


நீங்கள் கனடாவிலிருந்து சென்று விட்டீர்கள் என்று அறிந்த நேரத்திலிருந்து மனம் ஒரு தவிப்புடன் இருந்தாலும் ,உங்கள் ஒருவருக்கு சிங்களவன் பயப்படுகிறான் என்று என்னும் போது பெருமையாக இருக்கிறது, 


அண்ணா சீமான் அவர்களுக்கு, 


 ஒரு விடயம் சொல்ல ஆசைப்படுகிறேன், என்னுடைய மகன் 11  வயது மட்டுமே, உங்களின் பேச்சை கேட்க இரவு 10 மணிக்கு என்னோடு வந்தார், உங்கள் பேச்சு முடிந்து வெளியில் வந்ததும் அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் காதில் ஒலிக்கின்றது .


 " அம்மா அந்த மாமாவின் பேச்சைக் கேட்டது அமெரிக்காவில் மார்டின் லூதர் கிங்கின் பேச்சைக் கேட்ட மாதிரி இருக்குது அம்மா" 


ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் இவர் தமிழர் எங்கள் விடுதலைக்காக போராடுகிறார் என்றார். என்னுடைய மனம் நிறைந்திருந்தது. அதுமட்டுமில்லாது அவருக்கு நீங்கள் ஒரு புது வீரத்தைக் கொடுத்ததாக கூறினார். இப்படி உங்களுடைய ஒவ்வொரு மேடைப் பேச்சையும் அவர் இனைய தளத்தில் என்னோடு சேர்ந்து கேட்பார். பெருமையோ பெருமை. 

மாவீரர் நாளில் நீங்கள் இங்கு இல்லாதது பெரிய ஆதங்கமாக இருந்ததாலும் ஒரு மேடைப் பேச்சில் நீங்கள் சிங்களவனுக்கு ஒரு பீதியை கிளப்பி விட்டீர்கள். அண்ணனைக் கண்டு பயந்த மாதிரி இருந்தது . 


என்றுதான் தமிழனின் சுததந்திர தாகம் தனியுமோ?
தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்!!!!!  

நன்றி


From: Jothy JJ

Posted in Labels: |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails