அண்ணாவின் மேல் செருப்பு விட்டெறிந்து சகோதர யுத்தம் நடத்தியது யார்
பெரியாரின் திருமணத்தை அரசியலாக்கி, அவரிடமிருந்து விலகி தனிக் கழகம் உருவாக்க அண்ணாவுடன் புறப்பட்ட சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் என்று ஒவ்வொருவரோடும் சகோதர யுத்தம் நடத்தியது யார்?

எம்.ஜி.ஆரோடும், வைகோவுடனும் சகோதரயுத்தம் நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியது யார்?

வேலூர் செயற்குழுவில் சம்பத் தாக்கப்பட்டதும்,

திருச்சி பொதுக்கூட்டத்தில் அண்ணா,கண்ணதாசன் மீது செருப்பு வீசப்பட்டதும் சகோதர யுத்தத்தின் சமிக்ஞைகளன்றி வேறென்ன?

‘மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தினைத் திருடும் ஆணையோ, பெண்ணையோ சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளியை விட்டுவிடுகிறது’ என்றார் ஹென்றி மெய்ன்.

விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.
இதுதானோ கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!


அசோக சக்கரத்தைத் தேசியக் கொடியில் வைத்திருக்கும் காந்தி தேசத்தை ஆளும் அரசு, தமிழினத்துக்கு எதிராக ராஜபக்ஷே சகோதரர்கள் நடத்திய ரத்தக் குளியலுக்கு ரகசிய ஆதரவு வழங்கியதோடு, அழித்தவன் கைகளிலேயே புனர்வாழ்வு தர ஆயிரம் கோடியை அள்ளிக் கொடுத்த கொடுமைக்கு உடந்தையாக நின்ற கலைஞரை வரலாறு எப்படி வாழ்த்தும்?


இவர் சகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா? என்ன தகுதி இருக்கிறது

Posted in Labels: |

3 comments:

 1. மதி Says:

  ஜெ இந்த பிரச்சினையை விரைவிலே வெளிப்படுத்துவார் என நம்புகிறேன்.

  இந்த தமிழின துரோகிக்கு தர்ம அடி மக்களால் கொடுக்கப்பட வேண்டும்.

 2. Anonymous Says:

  தூத்துக்குடி கே.வி.கே.சாமி முதல் தா.கிருஷ்ணன் வரை எத்தனை முக்கியத் தலைவர்கள் சொந்தக் கட்சிக்காரர்களாலேயே கொல்லப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதுவும் யாரால் கொல்லப்பட்டார்கள். இதுவும் சகோதர யுத்தம்தானே.

 3. ஜோதி Says:

  தோழரே இதுக்கெல்லாம் ஒரே வழி வாரிச போட்டுத்தல்றதுதான் அமைச்சறாயிடரான் உடனே தான் மகன மாவட்டசெயலாளராக்கிடறான்,இன்னொரு மகன,எம்.பி ஆக்கிடறான்.ஏன்னா?கட்சியில வேற ஆளே இல்ல பாரு.ஒரு மகன போட்டுதல்லிட்டாதான் அவனுக்கு இழப்பு தெரியும்.இதுவரிக்கும் அவனுக்கு கமிஷந்தான் தெரியுது.போட்டுதல்னாதான்,அரசியலுக்கு வந்தா எதயாவது இழக்கனும்னு தெரியும்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails