எம்.பி.க்களின் சுற்றுப் பயணம்-கண்களை விற்று சித்திரமா? ஜீனியர் விகடன்
Posted On Wednesday, 21 October 2009 at at 13:07 by Mikeகண்களை விற்று சித்திரமா? தமிழருவி மணியன் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்ந் தது. ஜெனரல் டயர் 1,600 முறைதுப்பாக்கி குண்டு களால் சுட்டு, 379 இந்தியரைப் படுகொலை செய்தான். பல நூறு மக்கள்படுகாயமுற்றனர். வெள்ளையனின் இந்த வெறியாட்டத்தைக் கண்டித்து மகாத்மா காந்தி ஓர்அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, குருதயாள் மல்லிக் என்றஇளைஞர், காந்தியை காண வந்தார். மூன்று மணி நேரம் அவர் காத்திருந்த பின்பு அண்ணல்அறைக் கதவைத் திறந்து, \\\'மன்னிக்க வேண்டும் மல்லிக். உங்களை நான் நீண்ட நேரம்காத்திருக்கச் செய்துவிட்டேன். ஜெனரல் டயரின் இரக்கமற்ற வெறிச்செயலை முழுமையாக வெளிப்படுத்தும் சரியான வார்த் தைகளை யோசித்து எழுதுவதில் நேரம் கடந்துவிட்டது!\\\' என்றார். அகிலத்தில் அன்பை விதைத்த காந்தி யால், தன்னை அழிக்க வந்த கோட்சேவை மன்னிக்கமுடிந்தது. ஆனால், அப்பாவி மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டயரை கடைசி வரை அவர் மன்னிக்கவில்லை! \\\'பயங்கரவாத ஒழிப்பு\\\' என்ற போர் வையில் பல்லாயிரம் தமிழ் மக்களை பலியிட்ட,இரண்டு கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டி வைத்து, முழுமையாக நிர்வாணப்படுத்தி,மூளை சிதறும்படி சுட்டு வீழ்த்திய, எண்ணற்ற தமிழ்ப் பெண் களைப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய, சர்வதேசப் போர் விதிகளுக்கு மாறாக ரசாயன குண்டு களை வீசிக் கூட்டம் கூட்டமாகத் தமிழினத்தைக் கரிக்கட்டைக் குவியலாக்கிய, மூன்று லட்சம் மக்களை முள்வேலிக்குள் முடக்கிக் கொடுமைப்படுத்துகிற ராஜபக்ஷே பரிவாரத்தை நம் முதல்வர் கலைஞர் மன்னித்து, \\\'பகைவர்க்கும் அருள்வாய் நன்னெஞ்சே\\\' என்று பாடம் நடத்திவிட்டார்! வட்டமேஜை மாநாட் டில் பங்கேற்ற பின்பு லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய காந்தி, ரோமில் உள்ள வாடிகன் நகரில் போப் ஆண்டவரை காண விரும்பினார். போப் ஆண்டவர் சட்டை அணியாத காந்தியை சந்திக்க விரும்பவில்லை. இச்செய்தியைக் கேள்வியுற்ற இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி, மகாத்மாவை நேரில் வந்து சந்தித்தார். இருவரும் உரையாடியபோது, \\\'என் ஆட்சி யைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?\\\'என்று ஆவலுடன் முசோலினி கேட்டார். அச்சம் என்பதை அறிந்திராத அண்ணல், \\\'உங்கள் ஆட்சி ஒரு சீட்டுக்கட்டு மாளிகை. அது கட்டிய வேகத்தில் கலைந்துவிடும்!\\\' என்றார்.\\\'முசோலினியின் முகத்தைப் பார்த்தபோது, தூக்கி லிடுபவன்தான் என் நினைவில் நின்றான்\\\' என்று எரவாடா சிறையில் நண்பர்களிடம் சொன்னவர் மகாத்மா. * நேருவின் மனைவி கமலா காசநோய்க்கு சுவிட்சர் லாந்தில் சிகிச்சை பெற்றபோதுமரணமடைந்தார். அப்போது அவருக்குப் பக்கத்தில் நேருவும், இந்திராவும் இருந்தனர்.நேருவின் துயரில் பங்குகொள்ள விரும்பிய முசோலினி, தன் கைப்பட ஓர் இரங்கல் கடிதம்எழுதி, வெளியுறவு அமைச்சர் சியோனோவிடம் கொடுத்தனுப்பினார். \\\'இந்தியா திரும்பும்வழியில் ரோமாபுரியில் என் விருந்தினராக இரண்டு நாட்கள் தங்கினால் மகிழ்வேன்\\\' என்றுகடிதத்தில் குறிப்பிட்டார். ஆனால், ஆப்பிரிக்காவிலுள்ள இனக் குழுக்களை வேட்டையாடி,அபிசீனியாவை ஆக்கிரமித்த முசோலினியின் விருந்தோம்பலை நேரு நிராகரித்தார். அவர்பயணித்த விமானம் ரோமில் இறங்கியபோது, இடைப்பட்ட நேரத்தில் தன் மாளிகைக்கு வந்து இளைப்பாறும்படி, ஓர் உயர் அதிகாரி மூலம் முசோலினி அழைப்பு விடுத்தபோதும்,நேரு அதற்கு இணங்கவில்லை! நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எப்போது ராஜபக்ஷேவுடன் கலந்துரையாடி அகம் மகிழ்ந்தது..? வவுனியாவில் காடுகளை அழித்து 2,500 ஏக்கர் சதுப்பு நிலத்தில் கட்டமைக்கப்பட்ட மணிக் பண்ணையில் முள்வேலிகளுக்கிடையில் அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் பன்றிகளைவிட மிகக் கேவலமாகக் கொடுமைப்படுத்தப்படும் நம் இன மக்களை நேரில் சந்தித்த பின்பு... பாலின்றிப் பசியோடு அழும் பல் முளைக்காத குழந்தைகளை, போதிய உணவின்றி நடமாடும் எலும்புக்கூடுகளாக நலிந்துகிடக்கும் சிறுவர்களை, மாற்று உடையின்றி மாதக் கணக்கில் அழுக்கேறிய கந்தல் ஆடைகளுடன் காட்சி தரும் மனிதர்களை, மலம் கழிக்க நீரின்றி நிலைகுலைந்த மாதரை, மருந்தின்றி நோயால் வாடும் வயோதிகரை, துர்நாற்றம் பரப்பும் கழிவுக் கால்வாய்களுக்கிடையில் சின்னஞ்சிறு கூடாரத்தில் எட்டு மனிதர்கள் அடைபட்டுக் கிடக்கும் சூழலை, தம் உறவிழந்து உறுப்பிழந்து உயிர் மட்டும் இழக்காமல் வலிகளைச் சுமந்தபடி விழிநீர் வடிக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளின் கதறலைக் கேட்ட பின்பு... அவற்றுக்குக் காரணமான ராஜபக்ஷேவின் பக்கத்தில் அமர்ந்து, வாய் மலர்ந்து சிரித்தபடி வார்த்தையாடி, விருந்துண்டு, பொன்னாடை போர்த்தி, அவர் அளித்த பரிசில் ஏற்றுப் பரவசமடைய இந்த நாடாளுமன்றக் குழுவால் எப்படி முடிந்தது? முல்லைத் தீவு, விசுவமடு, முள்ளிவாய்க்கால் பகுதி களிலிருந்து காற்றில் கலந்து வரும் அவலக் குரல்களும், மரண ஓலங்களும் காங்கிரஸ் உறுப்பினர்களின் காதுகளில்கேட்காமல் இருக்கலாம். கனிமொழிக்கும், திருமாவளவனுக்கும்கூட கேட்காமற்போய்விட்டதே! \\\'அனைத்துக் கட்சிகளின் குழுவை உடனே இலங்கைக்கு அனுப்ப வேண்டும்\\\' என்றுநாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்ட நிலையில், மத்திய அரசு வெளியுறவு அமைச்சர்தலைமையில் அதிகாரபூர்வமாக ஒரு சர்வ கட்சிக் குழுவை அனுப்பியிருக்கலாமே. தி.மு.க.கூட்டணியின் குடும்ப விவகாரமா ஈழப் பிரச்னை? கலைஞர் அனுப்பி வைத்த குழு,ராஜபக்ஷே பரிவாரத் துடன் நடத்திய பேச்சுவார்த்தையால்தான் 58 ஆயிரம் தமிழர்கள் 15நாள்களில் மீள் குடியமர்த்தப்படும் சூழல் கனிந்திருக்கிறதாம்! ஐ.நா. சபை ஐரோப்பிய ஒன்றியம், மேலை நாடுகள், மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் உருவாக் கிய அழுத்தத்தால் இலங்கை அரசு அசைந்து கொடுக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டையும், இந்திய அரசையும் இனி நம்பிப் பயனில்லைஎன்று தெளிந்த, புலம்பெயர்ந்த தமிழர் கள் ஒன்றிணைந்து உலகம் முழுவதும் அறவழியில்அரங்கேற்றும் ஆர்ப் பாட்டங்களும், மாபெரும் மக்கள் பேரணிகளும் அமெரிக்கா முதல்பிரிட்டன் வரை இலங்கையின் அத்துமீறல்களுக்கு எதிராக எழச் செய்துள்ளன. மனித உரிமை மீறல்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகள் இலங்கைக்கு வழங்கி வந்த வர்த்தக சலுகைகளை ரத்துச் செய்துவிட்டன. விரைவில் வதை முகாம்களிலுள்ள அனைத்து மக்களும் விடுவிக்கப்படாவிடில், வளர்ந்த நாடுகள் இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்தும் என்று எச்சரித்துள்ளன. இந்த நிலையில் இந்தியா தேள் கொட்டிய திருடனாக விழிபிதுங்கி நிற்கிறது. \\\'நான்கே நாள்களில் இலங்கைத் தமிழருக்கு விடுதலை பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு\\\' என்று தி.மு.கழகம் சார்பில் சுவரொட்டிகள் கண்ணைப் பறிக்கின்றன. கலைஞர் அனுப்பிய குழுவால்தான் இலங்கை அரசு வதை முகாம்களிலிருந்து தமிழரை விடுவிக்க முன் வந்தது உண்மையானால், நம் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்னை திரும்பிய நான்கு நாள்களில் இரண்டு முறை ராமேசுவரம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்தபோது இலங்கைக் கடற்படையால் கடுமையாகத் தாக்கப்பட்டது ஏன்? மீனவர்கள் மீது இனி தாக்குதல்நடக்காது என்று ராஜபக்ஷே அரசு தந்த உறுதிமொழி என்னாயிற்றென்று,டி.ஆர்.பாலு விளக்குவாரா? ஆறு மாதங்களில் முகாம்கள் மூடப்படும் என்று உலகுக்கு உறுதியளித்த ராஜபக்ஷே 150நாள்களுக்குப் பின்பு, பல நாடுகள் தந்த அழுத்தத்தால் ஐயாயிரம் தமிழரை மட்டும்விடுவித்திருக்கிறார். முகாம்களிலிருந்து வெளி வந்த இவர்கள் அனைவரும் ஏற்கெனவேயாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்துவன்னிப் பகுதிக்கு வந்து, திரும்பிப் போக முடியாமல் சிக்கிச் சீரழிந்தவர்கள். வன்னிமக்களில் ஒருவரும் இன்று வரை விடுவிக்கப்படவில்லை. வன்னி மக்களை விடுதலைப் புலிகளாக பாவிக்கும் இலங்கை அரசு, கண்ணி வெடிகளைக் காரணம் காட்டியே கதையை முடிக்கத் திட்டமிடுகிறது. தீபாவளியன்று பல்லாயிரம் தமிழர் லண்டனில் பங்கேற்ற பேரணியில் பல பிரிட்டிஷ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியுள்ளனர். ஆன்ட்ரூ பெல்லிங் என்ற பிரிட்டிஷ்எம்.பி. பேசும்போது, \\\'முள் கம்பிகளுக்குப் பின்னால் முகவாட்டத்துடன் நிற்கும் ஐந்துவயதுக் குழந்தை எப்படி விடுதலைப் புலியாக இருக்க முடியும்? குழந்தைகளைக்கூடபயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி முகாம்களில் வைத்தது என்ன நியாயம்?\\\' என்றுகேட்டிருக்கிறார். நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுபோன்ற கேள்விகளைக்கேட்டார்களா? தமிழகத்திடமிருந்து, இந்திய அரசிடமிருந்து ஈழத் தமிழர்கள் எதிர்பார்ப்பது 500 கோடி ரூபாய் நிதியை அல்ல. \\\'இலங்கையில் தமிழர் ஒரு தனித்த தேசிய இனம் என்றஅங்கீகாரம், வடக்கும் கிழக்கும் ஈழத் தமிழரின் தாயக நிலம் என்ற பிரகடனம், தன்னாட்சிஉரிமைக்கான சட்ட வடிவம் - இவை மூன்றும் தமிழர் பெற்றிட இனியாவது இந்தியா உதவவேண்டும். சிங்கள பௌத்த பேரினவாத கும்பல் இதை அனுமதிக்காவிடில், \\\'தமிழீழம்\\\'காண இந்திய அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இதற்கான கடுமையான அழுத்தத்தை முதல்வர் கலைஞர் இந்திய அரசுக்குத் தரவேண்டும். நாம் செய்த தவறுகளால், நம் இனமே அழிந்து கொண்டிருக்கிறது. களத்தில் பல்லாயிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டபோது கண்களை மூடிக்கொண்ட நாம், இன்று இனம் காக்க முகாம்களில் உள்ளவர்களுக்காக \\\'முகாரி\\\' பாடுவது,\\\'கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச் சிரியாரோ?\\\' என்ற மகாகவி பாரதியின் கவிதையைத்தான் நினைவு படுத்துகிறது!
பிரபாகரனின் மறைவுக்குப் பின், ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கருணாநிதியை திட்டுவதை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பதிவும் அதைப் போன்றதே. இதில் உள்ள கோபங்கள் நியாயமானதே.
ஆனால் முகாம்களில் உள்ள மக்களை அவரவர் வீடுகளில் குடியமர்த்த இந்தக் கோபங்கள் மட்டும் போதாது.
தீர்வை எதிர்நோக்கிய எந்த வரியும் இதுபோன்ற பதிவுகளில் இருப்பதில்லை. இதுவும் அப்படியே.
வருகைக்கு நன்றி செல்வகுமார். முதலில் பிரபாகரன் மறைவு என்பதே மறுக்கிறேன். தீர்வு என்பதனை எடுக்க வேண்டிய கருணாந்தியோ, மத்திய அரசோ ஒரு துளி கூட விருப்பமின்றி இருப்பதனால்தான் அனைவரின் கோபமும் கருணாநிதி நோக்கி பாய்கிறது.
தீர்வை எதிர்நோக்கிய எந்த வரியும் இதுபோன்ற பதிவுகளில் இருப்பதில்லை.
this is solution:
இலங்கையில் தமிழர் ஒரு தனித்த தேசிய இனம் என்றஅங்கீகாரம், வடக்கும் கிழக்கும் ஈழத் தமிழரின் தாயக நிலம் என்ற பிரகடனம், தன்னாட்சிஉரிமைக்கான சட்ட வடிவம் - இவை மூன்றும் தமிழர் பெற்றிட இனியாவது இந்தியா உதவவேண்டும். சிங்கள பௌத்த பேரினவாத கும்பல் இதை அனுமதிக்காவிடில், \\\'தமிழீழம்\\\'காண இந்திய அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்
MK says we should not comment Rajapakse, selvakumar says no one comment on mk.
good selvakumar, U help a lot for Tamils cause. Long live viewer like you
நல்ல் சொன்னீர்கள் Harrispan, ஒரு சின்ன திருத்தம், இது அனைத்துமே நாம் முயற்சி செய்து இன்று வேறு வழியின்று தமீழீழம் ஒன்றே நமது தெரிவாக உள்ளது.
/*
this is solution:
இலங்கையில் தமிழர் ஒரு தனித்த தேசிய இனம் என்றஅங்கீகாரம், வடக்கும் கிழக்கும் ஈழத் தமிழரின் தாயக நிலம் என்ற பிரகடனம், தன்னாட்சிஉரிமைக்கான சட்ட வடிவம் - இவை மூன்றும் தமிழர் பெற்றிட இனியாவது இந்தியா உதவவேண்டும். சிங்கள பௌத்த பேரினவாத கும்பல் இதை அனுமதிக்காவிடில், \\\'தமிழீழம்\\\'காண இந்திய அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்
*/