சிங்கள இன்வெறி ராணுவத்தால் தாயும் கொல்லப்பட்டாள்,
Posted On Tuesday, 3 March 2009 at at 05:07 by Mikeஎன்ன கொடுமை இது, உலகமே இன்னுமா உன் மவுனம். கருணாநிதியே, ஜெ, சோ, சாமி, தினமலர் நீங்கள் எல்லாம் மனிதர்களா, இல்லை மிருகங்களா.
மட்டக்களப்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய் படையினரால் கொலை
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிரடிப்படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயதான சிறுமியின் தாய் நேற்று இரவு படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரின் வீட்டுக்கு சென்ற அதிரடிப்படையினர் சிறுமியின் தந்தையை கட்டி வைத்து விட்டு தாயை கிணற்றில் வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் சிறுமியின் தாய் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
தமது மகள் படையினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக குறித்த தாய் வாக்குமூலம் வழங்கவிருந்த நிலையிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமி களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்
http://www.tamilwin.com/view.php?2a36QVF4b33Z9EYe4d46Wn5cb0bf7GU24d2YYpD3e0d5ZLuQce03g2hF0cc2tj0Cde