சிங்கள அட்டூழியம்:தாயை கட்டிவைத்து மகள் கதற கதற கற்பழிப்பு
Posted On Tuesday, 3 March 2009 at at 00:01 by Mikeஇலங்கை கிழக்கு மாகாணத்தில் மட்டக் களப்பு மாவட்டம் கருவாஞ்சி குடி என்ற ஊருக்குள் சிங்கள அதிரடி படையினர் அதிகாலையில் திடீரென நுழைந்தனர்.
ஊர் முழுவதும் சோதனை போடப்போகிறோம். எனவே ஆட்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறி மைதானத்துக்கு செல்லும் படி கூறினார்கள்.
எனவே ஆட்கள் அனைவரும் மைதானத்தில் திரண்டனர். பின்னர் ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வீடாக சென்று சோதனை போட்டனர். ஒரு வீட்டில் தாயும் அருடைய மகள் புனிதவதி (வயது14) ஆகியோரும் இருந்தனர்.
அந்த வீட்டுக்கு 5 வீரர்கள் வந்தனர். ஒருவர் வீட்டுக்கு வெளியே காவலுக்கு நிற்க 4 பேர் மட்டும் உள்ளே நுழைந்தனர். தாயை கயிற்றால் கட்டி போட்டனர். அவரது கண்முன்பே 4 பேரும் புனிதவதியை மாறி மாறி கற்பழித்தனர். சிறுமி கதறி துடித்தார்.
புனிதவதி பருவமடைந்து 25 நாட்களே ஆகியிருந்தன. அதற்குள் இந்த கொடூரத் துக்கு ஆளாக்கப்பட்டார். அவரை கருவாஞ்சி குடி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த சோதனையில் புனித வதி மட்டும் அல்லாமல் மேலும் 5 பெண்களை ராணுவ வீரர்கள் கற்பழித் துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் பிள்ளையானிடம் சென்று புகார் கூறினார்கள். ஆனால் அவர் எனது கைகள் கட்டப்பட்டுள்ளன. என்னால் ஒன்றும் செய்ய முடியாது. கருணாவிடம் சென்று கேளுங்கள்(சிங்கள அரசு ஏற்படுத்திய கருணா கோஷ் டியினர்) என்று விட்டார்.
இதனால் செய்வதறியாது நிற்கின்றனர் மக்கள்.
இலங்கையில் காட்டாட்சி நடக்கிறது. இதனைப்பற்றி வெளியில் சொன்னதால் தாயும் கொல்லப்பட்டுள்ளால், மனிதஉரிமைஅமைப்புகள் இதில் தலையிடாவிட்டால் நாளை அந்த சிறுமியும் கொல்லப்படுவாள்.
http://www.tamilwin.com/view.php?2a36QVF4b33Z9EYe4d46Wn5cb0bf7GU24d2YYpD3e0d5ZLuQce03g2hF0cc2tj0Cde
மட்டக்களப்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய் படையினரால் கொலை
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2009, 05:27.20 AM GMT +05:30 ]
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிரடிப்படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயதான சிறுமியின் தாய் நேற்று இரவு படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரின் வீட்டுக்கு சென்ற அதிரடிப்படையினர் சிறுமியின் தந்தையை கட்டி வைத்து விட்டு தாயை கிணற்றில் வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் சிறுமியின் தாய் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
தமது மகள் படையினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக குறித்த தாய் வாக்குமூலம் வழங்கவிருந்த நிலையிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமி களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
முதன்மைச்செய்தி
March 2nd, 2009
மட்டக்களப்பில் தாயின் கண்ணெதிரில் மகள் பாலியல் வல்லுறவு
torture-womanமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு முழுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்டது.இதன்போது வெல்லாவெளியிலுள்ள வீடொன்றிற்குச் சென்ற விசேட அதிரடிப் படையினர் அங்கிருந்த 14 வயது சிறுமியை கதறக் கதற பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். விரிவு… »
http://meenagam.net/me/?p=2016
http://meenagam.net/me/?p=2102
அனைத்து ஆயுதங்களும்,
ராணுவ உதவிகளும் ,
24 மணி நேர விமானக் கண்காணிப்பு,கடற்படை என்று
உதவிய
சோனியா அம்மையாருக்குக்
காணிக்கை!