இங்கே பரவுகிற இலங்கைத் தீ! நக்கீரன்
Posted On Tuesday, 3 March 2009 at at 11:44 by Mikeஇலங்கை ராணுவத் தின் இனவெறித் தாக்குதலால் அங்கே கொத்துக் கொத்தாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். இங்கே தமிழகத்திலும் "போரை நிறுத்து' என்ற கோரிக் கையை வலியுறுத்தி ஒவ்வொரு வராகச் சாகிறார்கள். அத்தகைய வீரவணக்கத்துக்குரியவர்களின் வரிசையில் தன்னையும் இணைத் துக்கொண்டிருக்கிறார் சிவகாசி யைச் சேர்ந்த கோகுல் ரத்தினம். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளித்து உயிரை விட்ட இவரது கோரிக்கை மற்றவர்களிலிருந்து இவரை மாறுபடுத்திக் காட்டுகிறது.
"தமிழா எழுந்து நில்' என கடைசியாக கடிதம் எழுதியிருக்கும் கோகுல்ரத்தினம் இறந்த இடத்தில் கடிதத்தின் இணைப்பாக தி.மு.க. கொடியையும் விட்டுச் சென்றிருக்கிறார். அதில் "கலைஞர் உடல் நலமடைய வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் திருமாவளவன், வைகோ, ராமதாஸ், பழ.நெடு மாறன் போன்ற தலைவர்களை கைது செய்யக்கூடாது. இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் பட்டு வரும் துயரங்களைச் சகிக்க முடியாமல் நான் உயிர் விடுகிறேன்' என்று தனது மரண வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
25 வருடங்களுக்கு முன் இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்துக்கு வந்த கோகுல்ரத்தினம் "நான் இந்தக் கட்சிதான்' என்று தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொண்ட தில்லை. கலைஞரின் தமிழ்ப்பற்று அவருக்கு மிகவும் பிடித் திருந்திருக்கிறது. அதே நேரத்தில், தமிழ் உணர்வுள்ள மற்ற தலைவர்களையும் அவருக்குப் பிடித்திருக்கிறது. இப்படி ஒரு விசாலமான பார்வை அவருக்கு இருந்திருக்கிறது. சிவகாசி பேருந்து நிலையத்துக்கு வெளியே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வைத்திருந்த மெகா சைஸ் பேனரில் "அய்யா கலைஞரே... என்ன செய்யப் போகின்றீர்கள்?' என கேள்வி எழுப்பி "ஒன்று... தமிழகத்திலிருந்து ஒரு குழுவை அனுப்பி அங்கே செத்துக் கிடக்கும் ஈழத்தமிழனின் பிணங்களைப் புதையுங்கள்.
இரண்டு... வன்னிப் பகுதியிலிருந்து வெளியேறும் மக்களை அகதிகளாகத் தமிழகத்துக்கு அழைத்து வந்து மிச்சமிருக்கும் உயிர்களைக் காப்பாற்றுங்கள். அதுவும் முடியவில்லையென்றால், மூன்றாவதாக -ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய குண்டைப்போல ஒரு குண்டை இலங்கைத் தமிழர்கள் மீது வீசச் செய்யுங்கள். மொத்தமாக அழிந்து சாகிறோம்' என ஈழத் தமிழர் ஜெயகாந்தனின் வரிகளை அவர் பெயரிலேயே போட்டு, துயரப் படங்களுடன் கொட்டை எழுத்துக்களில் பளிச்சென்று தெரியும் விதமாக வைத்திருந்தது.
தொலைக்காட்சியிலும், தினசரி களிலும் இலங்கைத் தமிழர் குறித்த செய்திகளை ஒன்று விடாமல் கவனித்து வந்த கோகுல் ரத்தினத்தின் கண்களில் இந்த பேனர் உறுத்த லாகப் பட்டிருக்கிறது. அப்போதே, "என்ன அர சியல் இது?' என்று மனம் புழுங்கி யிருக்கிறார். "தமிழுணர்வுள்ள தமிழக தலைவர்கள் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் பிரிந்து நிற்கிறார்களே... ஆபரேஷனுக்குப் பிறகு மருத்துவமனை படுக்கையிலும் ஓய்வெடுக்காத முதல்வராக கலைஞர் இருக்கிறாரே... அவர் என்ன செய்வார் பாவம்? இலங்கைப் பிரச்சனையை முன்னிறுத்தி கலைஞரை ஆட்சிப் பொறுப்பிலிருந்து இறக்க வேண்டும் என்பதில்தானே சிலர் தீவிரமாக இருக்கிறார்கள். இது நடந்துவிட்டால் இலங்கைத் தமிழர்களின் துயரங்கள் நீங்கிவிடுமா? அட கொடுமையே...' என்று புலம்பியதாக அவர் நண்பர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.
25-ம் தேதி பட்டாசு ஆலை வேலைக்குப் போகாமல் "காய்ச்சலடிக்கு. ஆஸ்பத்திரி போறேன்' என்று மனைவி விஜயராணியிடம் சொல்லியிருக்கிறார். மனைவி வேலைக்குப் போனவுடன், 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனை தூக்கிக் கொண்டு, விருதுநகருக்கு கிளம்பிச் சென்று "இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு விடிவே கிடை யாதா?' என்ற மனவலியோடு தீக்குளித்து அந்த இடத்திலேயே கரிக்கட்டையாகி உயிரை விட்டிருக்கிறார்.
""இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்காக இந்த எளியனையும் நினைத்து கடிதத்தில் குறிப்பிட்ட கோகுல்ரத்தினத்துக்கு நன்றி உணர்வுடன் அஞ்சலி செலுத்துகிறேன்'' என்று முதல் ஆளாக வந்து விட்டுப் போனார் வைகோ.
அடுத்து ஃபிளைட் பிடித்து சென்னையிலிருந்து வந்த அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம் தென்னரசுவும் ""கோகுல்ரத்தினம் இறந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தார் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டதின் பேரில் இங்கே ஆறுதல் கூற வந்திருக்கிறோம்'' என்று அக்குடும்பத்துக்கு 1 லட்ச ரூபாய் நிதி உதவி தந்து விட்டுப் போனார்கள். கோகுல்ரத்தினத்தின் மனைவி விஜயராணி அவரது மகன், மகள், பேத்திகள் என மொத்த குடும்பமுமே "எங்களயெல்லாம் மறந்துட்டு இப்படிச் செஞ்சுட்டாரே' என்று பரிதவித்து நிற்கிறது.
இலங்கைத் தமிழர் களுக்காக இனி யாரும் உயிரை மாய்த் துக்கொள்ள வேண்டாம் என தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும் தமி ழகத்தில் துயரச் சாவுகள் தொடர் கிறதே!
-சி.என்.இராமகிருஷ்ணன்
நன்றி நக்கீரன்