அதிர்சி தகவல்:இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று உலகநாடுகளிடம் நேரடியாக வலியுறுத்துகிறார் சோனியா
Posted On Sunday, 22 February 2009 at at 14:54 by Mikeஉலகநாடுகள் பலவற்றிடம் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேரடியாக பேசி வருவதாக இந்திய தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் மறைமுகமாக குறிப்பிட்டு செய்தி வெளியாகியுள்ளது.
சோனியாவின் இந்த வேண்டுகோளையடுத்தே உலக நாடுகள் இலங்கை விவகாரம் தொடர்பாக நேரடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிக ளும் இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு உறுதி செய்வதை முன்னிட்டு, அந்நாட்டு அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக மத்திய அரசிடம் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வலியுறுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், முல்லைத்தீவுப் பகுதியில் இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால், நேரடியாகவே இந்திய அரசு இலங்கை இராணுவத்திற்குத் தேவையான உதவிகளைத் தரும் என்றும் தமிழகத்தில் வெளியாகும் அந்த அரசியல் புலனாய்வு இதழில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோனியாகாந்தியே நேரடியாக பல்வேறு உலக நாடுகளிடம் தொலைபேசி மூலம் இதுகுறித்து பேசி வருவதாகவும், இந்தியத் தலைவர்களில் மிக முக்கியமானவரும், ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் மிகுந்த செல்வாக்கு உடையவர் என்பதாலும், சோனியாவின் கருத்தை அந்த உலகத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் நட்புறவை விரும்பும் அக்குறிப்பிட்ட நாடுகள் சோனியாவின் தொலைபேசி பேச்சையடுத்தே இலங்கை விவகாரம் குறித்து எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருவதாகவும் தெரிகிறது
நன்றி : http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2456:2009-02-22-07-46-56&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56