கருணாதிக்கு சோனியா வலியுறுத்தல், இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களை அடக்குமாறு
Posted On Sunday, 22 February 2009 at at 12:18 by Mikeஇலங்கை பிரச்சினையை மையப்படுத்தி தமிழகத்தில் நாள்தோறும் பல்வேறு அமைப்புகள் சார்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஈழத் தமிழர்களுக்காக இதுவரை எட்டுப் பேர் தீயிட்டு மாண்டுள்ளனர்.
தமிழகத் தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் போராட்டம் தற் போது தீவிரமடைந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருதினங்களுக்கு முன்பு சட்டத்தரணிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த மோதல் சம்பவத்தில் சட்டத்தரணிகள் பல ரும் படுகாயம் அடைந்தனர். மேலும் பொலிஸார் தரப்பிலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் இருந்த வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. பல கார்களும் மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரையாயின. மோதலின் உச்சகட்டமாக உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் நிலையத்திற்கும் தீவைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து நேற்று சென்னை உயர்நீதிமன் றம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள அனை த்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் உயர் நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள் அனை வரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு முக்கிய வாசல்கள் முடப்பட்டன. உயர்நீதிமன்ற மோதலுக்கு பல்வேறு தரப்பின ரும் அதிருப்தியும் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் விரைவில் விசாரணை நடை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் உயர்ந்த புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் இலங்கைப் பிரச்சினையை மையப்படுத்தி நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்திருப் பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக போராட்டத்தில் ஈடுபடும் சட்டத்தரணிகள் மட் டுமல்லாமல், பல்வேறு அரசியல் கட்சியினரும், பொது அமைப்பினரும் மத்திய அரசையும், அதற்கு தலைமையேற்றுள்ள காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருவது சோனியாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து கடும் அதிருப்தி அடைந்துள்ள அவர், இது தொடர்பாக தமிழக முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, "உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வன்முறையை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது நாட்டின் பாதுகாப்பையே கேள்விக் குறியாக்கிவிட்டது. இதே நிலை தொடர்வது நல்லதல்ல. எனவே இலங்கைப் பிரச்சினையை மையப்படுத்தி நடைபெறும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியிடம் சோனியா வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராகச் செயற்படுவதும் சோனியாவை கவலையடைய வைத்திருப்பதாக டில்லி காங்கிரஸ் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியினரும் இத்தகைய எதிர்ப்பு நடவடிக் கைகளில் ஈடுபடுவதை சோனியா விரும்பவில்லை என்றும், கூட்டணியில் நீடிக்க விருப்பம் இல்லையென்றால் அதுகுறித்து உடனடியாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சித் தலைவரான டாக்டர் ராமதாஸிடம் சோனியா திட்டவட்ட மாக அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.
சோனியாவுடனான தொலைபேசி உரை யாடலையடுத்து மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்களைக் கட்டுப் படுத்த மாநில அரசு இனி தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகி றது.
இதையடுத்துதான் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் பொதுச் சொத்துக்களுக்குப் பங்கம் விளைவித்தாலோ, வன்முறைச் செயலில் ஈடுபட்டாலோ, அவர்களைக் கண்டவுடன் சுடு மாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
நன்றி:
http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51