ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா? - வைகோ

விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறும் ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா? - வைகோ

தாய்மார்கள், குழந்தைகள் அழிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு அரணாக போராடும் விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறும் ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா? என மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படக்கோரியும், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய

போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரையில் வக்கீல்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பாக வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர். வக்கீல்களின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசிகையில் இதனைத் தெரிவி்த்தார்.

’’தமிழீழ மக்களின் துன்பத்தை தவிர்க்க உறக்கத்தில் இருக்கும் தாய் தமிழகம் விழிக்காதா என்று நினைத்த நேரத்தில் தொப்புள்கொடி உறவினரான சகோதரர்களை பாதுகாக்க, வக்கீல்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பாராட்டுக்குரியது.

எந்த போராட்டம் என்றாலும் கந்தகம் என்னும் தீப்பொறி களம் பதிக்க வேண்டும். அதுபோல தீக்குளித்து இறந்த முத்துக்குமார் என்னும் கந்தகம் மூட்டிய தீயை இனி யாராலும் அணைக்க முடியாது. அது இன்று ஐ.நா.சபையிலும் எரிகிறது. இலங்கை தமிழர்களுக்காக 4 மாதங்களாக போராட்டம் நடக்கிறது.

வக்கீல்களின் அறவழி போராட்டம் தொடர வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்

நன்றி : http://tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2489:2009-02-25-15-19-26&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails