கலைஞர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தால் சாகும்வரை உண்ணாவிரதம்: வீரபாண்டி ஆறுமுகம்

என்னே கலைஞரின் கரிசனை, தமிழன் சாகறதை தடுக்க உண்ணாவிரதம் இருந்தால் மதித்திருப்போம், ஆனால் எங்கே தன் வாக்கு வங்கியினை/ஆட்சியினை இழந்து விடுவோமோ இந்த வக்கீல்கள்/காவல் துறையின் சண்டையில் என்ற பயமே இந்த உண்ணாவிரதம். ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவனுக்கு காலமே. வாழ்க கலைஞர். தமிழ் மக்களுக்காக 20 மணி நேரம் உழைக்கிறாராம். எதற்கு தமிழனை காப்பாத்தவா அய்யா. ரொம்ப சந்தோசம்.

தமிழக முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,



கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி கடுமையான முதுகுவலி ஏற்பட்டு அதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையிலும், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை எண்ணி எண்ணி வேதனைப்பட்டதோடு, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க முதுகுவலியையும் பாராமல், மருத்துவர்களின் ஆலோசனைகளையும் கேளாமல் செயல்பட்டார் கலைஞர்.



எதையும் தாங்கும் இதயத்தை பேரறிஞர் அண்ணாவிடம் இருந்து பெற்ற தலைவர் கலைஞர், இங்குள்ள சிலர், தலைவர் கலைஞர் மீதும், கழக அரசு மீதும் அவதூறுகளை பரப்பி வருவதை கண்டு மன வேதனைப்பட்டார்.



இந்த நேரத்தில் வழக்கறிஞர்கள், காவல் துறையினரிடையே ஏற்பட்ட மோதலும் சேர்ந்து அவரை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியது.



நீதிமன்றத்தில் வாதிடும் வழக்கறிஞர்களுக்கும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலால் மிகவும் துடித்துப் போனார் கலைஞர்.



இந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஒரு சில மணித்துளிகளிலேயே கலைஞர் பட்ட வேதனையை நாஙகள் அறிவோம், நாடும் அறியும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, உடல் வலியினால் துடிக்கும் தருணத்தில் அவ்வலியையும் பொருட்படுத்தாது, மக்கள் நலனில் அக்கறை கொண்ட கலைஞர் இதுகுறித்து உடனடி தீர்வு காண இன்னும் முழுமையான குணம் அடையாத நிலையிலும், மருத்துவர்கள் எச்சரித்த சூழலிலும், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அழைத்துப் பேசி, தலைமை நீதிபதியை சந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



அவர்கள் தலைமை நீதிபதியை சந்தித்து விவாதித்து:க கொண்டு இருக்கும் போது கலைஞர் அவர்கள் தானே ஆம்புலென்ஸ் வண்டியில் ஏறி தலைமை நீதிபதியை சந்திக்க வருகிறேன் என கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உண்மை நிலையை அறிய கேட்டுக்கொண்டதின் பேரில் மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) விசாரித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.



எதிர்பாராமல் ஏற்பட்ட இந்நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற அடிப்படையில், காவல் துறைக்கும், வழக்கறிஞர்களுக்கும் கலைஞர் வேண்டுகோள் விடுத்தபின்பும், இங்கொன்றும் அங்கொன்றும் நடைபெற்ற அசம்பாவிதங்களை அறிந்து மனம் வேதனைப்பட்டு தன்னைத்தானே வருத்திக்கொள்ள இறுதி முயற்சியாக, மருத்துவமனையிலேயே உண்ணா விரதம் இருப்பேன் என தெரிவித்துள்ளது எங்களைப் போன்ற கழக தொண்டர்களையும் பொதுமக்களையும் மிகுந்த மனவருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.



கலைஞர் உடல் பூரண நலம்பெற ஓய்வு மட்டுமின்றி, உண்ணாவிரத எண்ணமும் தவிர்க்க வேண்டும் என மருத்துவக்குழு ஆலோசனை அளித்துள்ளது. தமிழக மக்களுக்காக ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கும் மேலாக உழைத்திடும் கலைஞர் தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் சமுதாயம் வளர ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கிற காரணத்தினால் மருத்துவ குழுவின் ஆலோசனை ஏற்று உண்ணாவிரத எண்ணத்தை கைவிட வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். எனது வேண்டுகோளை கலைஞர் அவர்கள் ஏற்க மறுத்தால் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியுள்ளார்.


நன்றி : நக்கீரன்

Posted in |

15 comments:

  1. Anonymous Says:

    தினமும் பிரியாணி இல்லாட்டி இவனுங்களால தூங்கவே முடியாது. இதுல உண்ணாவிரதமா?
    வேணும்னா உண்ணும் விரதம் இருந்துவிட்டு போகட்டும்.

  2. Mike Says:

    /* தினமும் பிரியாணி இல்லாட்டி இவனுங்களால தூங்கவே முடியாது. இதுல உண்ணாவிரதமா?
    வேணும்னா உண்ணும் விரதம் இருந்துவிட்டு போகட்டும். */

    உண்ணாவிரதம் இருப்பதில் தவறில்லை நண்பரே, எதற்க்காக, யாருக்காக இருக்கிறோம் என்பது முக்கியம்.

  3. Anonymous Says:

    நான் சொல்லவந்தது என்னவென்றால், உண்ணாவிரதம் இருக்க மன் தைரியமும், உடல் ஒத்துழைப்பும் வேண்டும். இது இரண்டுமே இல்லாத இவர்களால் பேசத்தான் முடியும். உண்மையான உண்ணாவிரதம் இருக்க முடியாது. வேண்டுமானால் நடிக்கலாம்.

  4. G.Ragavan Says:

    விடுங்க. வயதான காலத்துல சாப்பாட்டைக் கொறைச்சிக்கிறது நல்லதுதான்.

  5. sathiri Says:

    இவங்கடை அழப்பலைதாங்க முடியலை சாமி ..ஜயா பெரியாரோ இவனுகள் திருந்துவாங்களா?? இவனுகளிற்கே பெரியாரென்றால் யாரென்று தெரியுமோ தெரியாது??

  6. மணிகண்டன் Says:

    ப்ளாக்ல போடற தொடர் பதிவுக்கு போட்டி இது !

    சபாஷ் சரியான போட்டி !

  7. Anonymous Says:

    இவரு "வீரபாண்டி" ஆறுமுகம் இல்லை, "வெத்துவேட்டு" ஆறுமுகம்.

    இவனுங்களுக்கு எல்லாம் அடைமொழி வேறு.

    "குமாஸ்தா" வீராச்சாமி எல்லாம் "ஆற்காடு" வீராச்சாமியான மாதிரிதான்.

  8. Anonymous Says:

    ///வேண்டுகோளை கலைஞர் அவர்கள் ஏற்க மறுத்தால் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியுள்ளார்//////

    good joke

  9. கோவி.கண்ணன் Says:

    //"கலைஞர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தால் சாகும்வரை உண்ணாவிரதம்: வீரபாண்டி ஆறுமுகம்"//

    வீரபாண்டி ஆறுமுகத்திற்கு அந்த பொன்னான வாய்ப்பை கலைஞர் கொடுக்க வேண்டும்

  10. கிரி Says:

    //கோவி.கண்ணன் said...
    //"கலைஞர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தால் சாகும்வரை உண்ணாவிரதம்: வீரபாண்டி ஆறுமுகம்"//

    வீரபாண்டி ஆறுமுகத்திற்கு அந்த பொன்னான வாய்ப்பை கலைஞர் கொடுக்க வேண்டும்//

    :-))))

  11. யோகன் பாரிஸ்(Johan-Paris) Says:

    ஆற்காட்டாருக்கு இவ்வரிய வாய்ப்பைக் கொடுத்து;
    வரலாற்றில் பெயர் பொறிக்க கலைஞர் வாய்ப்புக்
    கொடுப்பார் என நம்புகிறேன்.
    அந்த இனிய நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    ஆற்காட்டார் , அவன் சொன்னான்;இவன் சொன்னான்
    என சாகும் வரை உண்ணாநோன்பை; தேர்தல்
    வாக்குறுதிபோல் காற்றில் பறக்கவிட்டு
    ஏமாற்றமாட்டார் என நம்புகிறேன்.
    இவ்வளவு காலமும் இவர் புகழுக்கும், முன்னேற்றங்களுக்கும்
    தடையாக இருந்ததுபோல் ,இந்த சரித்திரத்தில்
    இடம் பிடிப்பதற்கும் தடையாக இருந்து
    அவர் சாவதை எவரும் தடுக்க வேண்டாம் என
    வேண்டுகிறேன்.
    இவ்வளவு காலமும் தலைவனுக்காக தொண்டன் தான்
    செத்தான். இனியாவது அரைத் தலைவன்; கால் தலைவனைச்
    சாகவிடுங்கள்.
    தலைவருக்காக உயிர் தந்த ஆற்காட்டார் புகழ் வாழ்க!!
    எனக் கோசமிட விடுங்கப்பா!!!

    இவங்க அலட்டலே தாங்க முடியலடா சாமி...

  12. Anonymous Says:

    //தமிழ் மக்களுக்காக 20 மணி நேரம் உழைக்கிறாராம். எதற்கு தமிழனை காப்பாத்தவா அய்யா. ரொம்ப சந்தோசம்.//
    Srilankan Tamilians'ku Uzachathan
    Uzhaippa ? Inge Irukkiravan Ellam Manusan Illaya ? Avlo Vetti nyayam pesuravan Prakaran'a Surrender aga solla vendiyadhu thane ? Enya Oruttharaye Mattam thatreenga
    Jayalalitha va vidava Kalaignar Emathurar Avar Ivlothan Seeya mudiyum Avar Resign pannitta ungalukku Tamil Eazham Kedachuruma ? Yosichu pesungayya.

  13. Mike Says:

    /* /தமிழ் மக்களுக்காக 20 மணி நேரம் உழைக்கிறாராம். எதற்கு தமிழனை காப்பாத்தவா அய்யா. ரொம்ப சந்தோசம்.//
    Srilankan Tamilians'ku Uzachathan
    Uzhaippa ? Inge Irukkiravan Ellam Manusan Illaya ? Avlo Vetti nyayam pesuravan Prakaran'a Surrender aga solla vendiyadhu thane ? Enya Oruttharaye Mattam thatreenga
    Jayalalitha va vidava Kalaignar Emathurar Avar Ivlothan Seeya mudiyum Avar Resign pannitta ungalukku Tamil Eazham Kedachuruma ? Yosichu pesungayya. */

    நண்பருக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்று தெரியாதது போல் உள்ளது. உங்கள் மாதிரி ஆட்களிடம் நிறைய கேள்விகள் கேட்கணும், அப்பதான் உங்களை புரிஞ்சிக்க முடியும்.

    இலங்கையில் தினமும் நூற்றுகணக்கில் கொல்லப்படும் செய்திகளை படிக்கும் போது ஏதாவது உங்க மனசுல தோணுதா. ஒரு இரக்கம், பரிவு, துக்கம். எதுவுமே இல்லாட்டி நீ காட்டுமிராண்டிதான்பா. உன் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தேவை இல்லை. அடுத்தவன் அழிவில் சுகம் காண்பவன்.

  14. Anonymous Says:

    இந்த நாடகத்திற்கு கதை, வசனம், திரைக்கதை அனைத்தும் கலைஞர் மு.கருணாநிதி

  15. Anonymous Says:

    இந்த நாடகத்தில் ஆர்காட்டாருக்கு கேரக்டர் ஏதும் இல்லை

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails