தமிழினத்துக்கு துரோகம் செய்யும் திராவிட கட்சிகள்:டி.ஆர்.

இலங்கை தமிழரகளுக்கு ஆதரவான ‘தமிழ் இன பாதுகாப்பு முன்னணி’ புதிய இயக்கத்தின் தலைவர் டி.ராஜேந்தர்,

’’இலங்கை தமிழர்களை காப்பாற்றுவது போல் பதவியை தக்கவைக்க சிலர் நாடகம் ஆடுகிறார்கள். தமிழர்கள் நலனை பகடைக்காய் ஆக்கி கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி இலங்கையில் தமிழர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. சட்டசபையில் தீர்மானம் போட்டு அனுப்பப்பட்டது. மனித சங்கிலி நடத்தப்பட்டது. இதனால் என்ன பயன் காங்கிரசின் அடிமை சங்கிலியில் சில கட்சிகள் பிணைக்கப்பட்டுள்ளன.

தமிழ் இனத்துக்கு குரல் கொடுக்க வேண்டிய திராவிட கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. துரோகமாகவும், விரோதமாகவும் நடக்கின்றன.

விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதன்பிறகு கூட்டணி என்ற உணர்வுடன் தமிழ் இன உணர்வுகளை தள்ளி வைத்து விடுவார்கள். இதுபற்றி தமிழக மக்களிடம் பிரசாரம் மேற்கொள்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

நக்கீரன்

Posted in |

1 comments:

 1. Anonymous Says:

  Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails