கலைஞரே, தமிழினத்தை உன் கையால் அழித்துவிடும்.

கலைஞரே நாங்களும் எப்படி எல்லாம் எழுதி உமக்கு புரிய வைக்க முடியுமோ, அப்படி எல்லாம் எழுதியும், உம் மனத்தில் எந்த ஒரு துளி மாற்றமும் இல்லை. தமிழின அழிவில் சோனியாவுடன் சேர்ந்து வேடிக்கை பார்க்க்கும் உம்மை என்ன சொல்வது. என்னால் முடியாது என்று கையாலாகத தனத்தை தைரியமாகவே ஏழு கோடி தமிழர்களிடம் சொல்கிறிர். இதில் ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை மத்திய அரசை நோக்கி கேட்டிருந்தால் இந்த இனம் இன்று காப்பாற்ற பட்டிருக்கும். ஆனால் உமக்கோ அதற்கு மனமில்லை.

இனியும் தமிழர்களுக்கு உதவறேன் என்று யாரையும் ஏமாற்ற தேவையில்லை. நிம்மதியாக உடம்பை சரி பண்ணிகொண்டு இருக்கிற மீதி ஆட்சியையும் நடத்துங்கள் தமிழனின் பிணத்தின் மேல், உங்கள் நண்பர்கள் சோனியா, சோ, சாமி, தினமலர் இன்னும் எவனெல்லாம் தமிழனுக்கு எதிரியாக வரானோ அவனை எல்லாம் கூட்டு சேர்த்து கொள்ளுங்கள்.

பிராணாப்பை வேண்டுமானால் இன்னுமொரு 200 டாங்கி அனுப்பி வைக்க சொல்லி, டில்லியிடம் நல்ல பேர் வாங்கி கொள்ளுங்கள். மேனனை அனுப்பி மகிந்தவுக்கு வாழ்த்து சொல்ல சொல்லுங்கள். சோனியாவை உலக நாடுகளிடம் தமிழனின் அழிவை விரைவுபடுத்த எடுத்து சொல்லுங்கள். அமெரிக்காவை பாரசூட்டில் இறக்குங்கள். தமிழர்களை தீவிரவாதிகள் என அறிவியுங்கள். பாகிஸ்தானோடு சேர்ந்து தமிழனை கொல்லுங்கள். இஸ்ரேலையும் கூப்பிடுங்கள்.

தமிழர்களுக்கு உண்மையாக யாரெல்லாம் ஆதரவு கொடுக்கிறார்களோ, பிடிச்சு உள்ளே போடுங்கய்யா. சீமான், மாணவர்கள், வக்கீல்கள் விடாதிங்கய்யா. சும்மா உள்ளே தள்ளி தமிழனுக்காக போராடுவாயா என்று முட்டிக்கு, முட்டி தட்டுங்க தலைவரே மன்னிக்கவும் தமிழின தலைவரே. அடிச்சே கொல்லுங்கள் தமிழனை. தன் இன அழிவை பார்த்து கொண்டு தமிழனாக இருப்பதை காட்டிலும் அவன் சாவதே மேல். தமிழனால்தான் உம் ஆட்சிக்கு இவ்வளவு தொல்லை, விடாதிங்கயா தமிழனை ஒரு கை பாருங்கள்.

Posted in |

4 comments:

 1. சே குவேரா Says:

  கலைஞர் பண்ண வேண்டிய புரட்சியெல்லாம் பண்ணீட்டாரு. நீங்க என்டா இங்கயே கூச்சல் போட்டுக்கிட்டு இருக்கீங்க. உங்கள்ள ஒரு சே குவேராகூட இல்லையா???????
  வரலாறு சொல்லட்டும், தமிழக படையும் சேர்ந்து சிங்களனை ஈழத்திலிருந்து ஓட ஓட விரட்டியது என்று.

 2. ராகுலன் Says:

  இந்தியமே! சிங்களமே! எமையழிக்க எண்ணாதீர்!
  மூத்த வளர்ந்த குடி! முச்சங்கம் கண்ட மொழி!
  ஆர்த்து எழுந்த கலை! அகிலத்தின் ஆதி நிலை!
  செந்தமிழின் மீதாணை! எம்தமிழர் மீதாணை!
  எம் தலைவன் நெஞ்சத்தில் ஓர் தர்மம் வாழ்கிறது!
  எம் தாகம் தமிழீழ தாயகமே
  இது உறுதி!

 3. Ammu Says:

  விடுதலைப்புலி பிரபாகரன் மேலே நம்பிக்கை மொத்தமா போச்சா என்ன??
  பிரபாகரன் வென்றெடுப்பார் என்றெல்லாம் சொன்னவங்க இப்ப என்னடானு பார்த்தா , தமிழக தலைவர்களே தமிழக தலைவர்களே நு சொல்றீங்க.. இவ்ளோ நாளா என்ன சொன்னீங்க??

 4. Mike Says:

  /* விடுதலைப்புலி பிரபாகரன் மேலே நம்பிக்கை மொத்தமா போச்சா என்ன??
  பிரபாகரன் வென்றெடுப்பார் என்றெல்லாம் சொன்னவங்க இப்ப என்னடானு பார்த்தா , தமிழக தலைவர்களே தமிழக தலைவர்களே நு சொல்றீங்க.. இவ்ளோ நாளா என்ன சொன்னீங்க??

  */

  நண்பருக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்று தெரியாதது போல் உள்ளது. உங்கள் மாதிரி ஆட்களிடம் நிறைய கேள்விகள் கேட்கணும், அப்பதான் உங்களை புரிஞ்சிக்க முடியும்.

  இலங்கையில் தினமும் நூற்றுகணக்கில் கொல்லப்படும் செய்திகளை படிக்கும் போது ஏதாவது உங்க மனசுல தோணுதா. ஒரு இரக்கம், பரிவு, துக்கம். எதுவுமே இல்லாட்டி நீ காட்டுமிராண்டிதான்பா. உன் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தேவை இல்லை. அடுத்தவன் அழிவில் சுகம் காண்பவன்.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails