புலிகள் மீதான தடையை நீக்கினால்தான் சமரச பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகும்:சரத்குமார்

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் தலைமையில் டெல்லியில் நாளை (25ஆம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


இதற்காக டெல்லி சென்றுள்ள சரத்குமாரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது,

’’விடுதலைப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை இந்தியாவும், இலங்கை அரசும் தற்காலிகமாக நீக்கினால் விடுதலைப்புலிகளுடன் சமரச பேச்சு நடத்துவதற்கு இணக்கமான சூழ்நிலை உருவாகும்.


இதன் தொடர்ச்சியாக, விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தும் ஏற்பாட்டை கவனிக்க தமிழக அரசியல் கட்சி குழு ஒன்று இலங்கை செல்ல வேண்டும்.


தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இலங்கை சென்று அந்த நாட்டு அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

நக்கீரன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails