பத்தாயிரம் தற்கொலைப்படை தயார்! புலிகளின் லேட்டஸ்ட் ப்ளான்! : நக்கீரன்
Posted On Monday, 2 February 2009 at at 05:28 by Mikeமத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து, 48 மணி நேர யுத்த நிறுத்தத்தை அறிவித்தார் ராஜபக்சே! கொழும்பு பயணத்தில் "தமிழ் மக்களைப் பாதுகாக்க பாதுகாப்பு வளைய பகுதிகளை அதிகரிக்க வேண்டும்' என்று பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டதை அடுத்து, அதற்கும் ஒப்புக்கொண்டார். ஆனால், மக்கள் பாதுகாப்பு வளைய பகுதிகளின் மீதே குண்டுகளை வீசி விட்டு பறந்துள்ளது ராணுவத்தின் விமானப்படை!
இந்த 48 மணி நேர யுத்த நிறுத்தம் பற்றி புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், ""இது தமிழ் மக்களை ஏமாற்றும் செயல். அறிவிப்பு செய்த பிறகும் தாக்குதலை நடத்தி வருகிறது ராணுவம்'' என்கிறார்.
ராஜபக்சே அறிவித்த யுத்த நிறுத்தம் இலங்கையில் எப்படிப் பார்க்கப்படுகிறது?
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் நாம் பேசியபோது, ""தமிழர்களை பாதுகாப்பதற்காக யுத்த நிறுத்த அறிவிப்பை ராஜபக்சே செய்யவில்லை. மாறாக, வேறொரு திட்டம் இலங்கை அரசிடம் இருக்கிறது.
அதாவது, அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வளைய பகுதிகளுக்கு மக்கள் வரத் தயாராக இல்லை. அதனால் தமிழ் மக்களும் புலிகள்தான் என்று கூறி ஒட்டுமொத்தமாக மக்கள் மீது குண்டுமழை பொழிவதுதான் ராணுவத்தின் திட்டமாக இருக்கிறது. இதனை சர்வதேச நாடுகள் நம்ப வேண்டுமென்பதற் காகவே, "பாதுகாப்பான இடத்திற்கு வந்து விடுங்கள் என்று கூறி யுத்தத்தை நிறுத்தி னோம். ஆனால், அவர்கள் வரவில்லை. அப்படியானால், அவர்கள் புலிகள் தானே! நாங்கள் என்ன செய்வது? வேறு வழி தெரிய வில்லை என்பதால் தாக்குதல் நடத்தினோம்' என்று சொல்லவே இந்த யுத்த நிறுத்த நாடகத்தை நடத்தியுள்ளார் ராஜபக்சே.
இது ஒரு வகையான திட்டம். அடுத்து, வன்னிக் காடுகளில் பதுங்கியுள்ள புலிகளை முற்றிலுமாக அழிக்க, பெரிய தாக்குதலையும் விமான குண்டு வீச்சையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற் காக, முல்லைத்தீவு பகுதியில் ஆயுதங்களையும் தளவாடங் களையும் குவிப்பதற்கான கால அவகாசத்திற்காகவும் இந்த நிறுத்த அறிவிப்பை செய்துள் ளார்'' என்று சுட்டிக் காட்டு கின்றனர்.
அதேசமயம், பிரணாப்பின் வருகையை அடுத்து யுத்த நிறுத்தம் செய்யப்பட்டதை சிங்கள பேரினவாத அரசியல் கட்சிகளோ, ""பிரபாகரனை பிடிக்க நினைத்த ராணுவத்தின் வேகம் குறைந்துள்ளது'' என்று பிரணாப்பின் பயணத்திற்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றன.
பிரணாப்பின் இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து இத்தகைய கருத்துக்கள் எதிரொலிக்கும் நிலையில், புலிகளின் லேட்டஸ்ட் ப்ளான் என்ன?
""முல்லைத்தீவு மாவட்டத்தின் பிற பகுதிகளை யும் இழந்து வருகிற நிலையில் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தளபதிகளும் போராளிகளும் வன்னிக் காடுகளில் இருக்கின்றனர்.
புலிகளுடன் இணைந்து போராடத் துடிக்கும் மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. போராளிகள் போல், இலங்கை ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தும் முடிவுக்கு வந்துள்ளனர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்.
அவர்களோ புலிகளிடம், ""பெல்ட் வடிவிலான சூசைட் பாம் எங்களுக்குத் தாருங்கள். கடைசி கட்ட தாக்குதலை நடத்த 20 ஆயிரம் பேர் வருவார்களா? 50 ஆயிரம் பேர் வருவார்களா? வரட்டும். இங்குள்ள 10 ஆயிரம் மக்களும் சூசைட் பாம் பெல்ட் கட்டிக்கொண்டு எதிர் வருகிற ராணுவத்தினர் மீதோ பீரங்கிகள் மீதோ விழுகிறோம்.
இதன் மூலம் வருகின்ற பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினரை கொல்ல முடியும். ஏராளமான ஆயுதங்களை அழிக்க முடியும்'' என சூசைட் பாம் கேட்டு மன்றாடிக் கொண்டிருக்கின்றனர் மக்கள் என்கின்றன வன்னிக் காடுகளிலிருந்து வருகிற செய்திகள்.
இந்த சூழலில், தமிழீழத்தின் வடபகுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கைப்பற்றியுள்ள இலங்கை அரசு, ஆக்கிரமித்துள்ள ஒவ்வொரு பகுதி களையும் பாதுகாத்துக்கொள்ள ஏராளமான ராணுவத்தினரை களமிறக்கியுள்ளது. இதனால், இலங்கை அரசின் ராணுவத்தினர் பல பகுதிகளில் சிதறுண்டிருக்கிறார்கள். மேலும், பிரபாகரனைப் பிடிப்பதற்காக வன்னிக் காடுகளில் இறுதிகட்ட தாக்குதலை நடத்துவதற்காகவும் ராணுவத்தினர் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இதனால், எல்லா பகுதிகளிலும் ராணுவத் தினரை எதிர்கொள்ள, நவீன ரக ஆயுதங்களை இழப்பில்லாமல் பாது காத்துவரும் பிரபாகரன், தற்போதைக்கு போராளி களையும் இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால், ஆயுதங்கள் பாதுகாப்பாக பதுக்கப் பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, கடந்த 27-ந் தேதி நள்ளிரவில், முல்லைத்தீவில் சுண்டிக் குளம் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆயுத கப்பலிலிருந்து ஏராளமான ஆயுதங்களை இறக்கியுள்ளனர் புலிகள்.
""இதனை மிகத் தாமதமாக இந்திய அரசின் உதவியுடன் அறிந்துகொண்ட ராணுவத்தினர், அந்த கப்பலை மடக்கிப் பிடிக்க விரைந்தனர். ஆனால், அதற்குள் ஆயுதங்களை இறக்கி போட்டுவிட்டு சர்வதேச கடல் எல்லைக்குள் சென்று மறைந்துவிட்டது அந்த கப்பல்'' என்கின்றனர் கொழும்பு பத்திரிகையாளர்கள்.
ஆயுதங்களை புலிகள் சேகரித்து வருகின்றனர் என்பதை ஒப்புக்கொள்கிற வகையில், ""மிக ரகசியமாக ஆயுதங்களை வரவழைத்து பாதுகாப்பு வளைய பகுதிகளிலேயே பதுக்கி வைத்து வருகின்றனர் புலிகள்'' என்கிறார் ராஜபக்சே.
ராஜபக்சே அறிவித்துள்ள 48 மணி நேர யுத்த நிறுத்தம் முடிந்துள்ள நிலையில், வன்னிக் காடுகளில் பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற் காக இறுதி யுத்தத்தை நடத்தவிருக்கிறார் ராஜபக்சே. அதேசமயம், பிரபாகரன் பாது காப்புக்காக மட்டும் நூற்றுக்கணக்கான இளம் போராளிகள் இருப்பதால்... இந்த இறுதி யுத்தம் மிகப் பயங்கரமாகவே இருக்கும் என்கின்றன வன்னிச் செய்திகள்.
-கொழும்புவிலிருந்து எழில்
தயவு செய்து இப்படியான மிகைப்ப்படுத்தப்பட்ட செய்திகளை பதிவாக்கி எமது போராட்டத்தை குழப்பி விட வேண்டாம்..
அங்கே மக்கள் படும் அவலம் தெரியாமல் இப்பிடியான பிழையான மிகை படுத்திய செய்திகளை பரப்பி பொதுமக்களின் உயிரை பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல் வரும் புனை கதை செய்திகளை நக்கீரன் சொல்லுகிறது என்றால் நீங்களும் அதை வெளியிடுவது அங்கிருக்கும் மக்களின் உயிரை நீங்களும் மதிக்கவில்லை என்றே பொருள் படும். உயிர் தப்பிப் பிழைத்து இருக்கும் மக்களைக் காப்பாற்றுவது தான் இப்போ முக்கியம். இப்படி கேவலமான செய்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம்.
விபரீதமான மிகைப்படுத்தப்பட்ட தகவல் யாருக்கும் பயனளிக்காது.
புள்ளிராஜா
Nakkeeran is publishing exaggerated baseless stories and junior vikatan is changing it's tune and talking about pirapakaran's escape.
while people are dying everyday these papers are trying to cash in .
LTTE will never discuss openly with anyone about military stratagy.These magazines are putting stories as though pirapakaran has discussed his plans with him.
pirapikaran will never escape anywhere,if he dies, he will die as a hero fighting the sinhala army in Tamil eelam.
Mike,please ignore these stories.
இருக்கற பத்தாயிரம் பேரும் தற்கொலை செஞ்சுகிட்டா அப்பறம் யாரு சண்டை போடுவா?
நல்ல கிளப்புங்கையா பீதியா!!
இப்படி புலிகள் அப்பாவி மக்கள் வேடத்தில் தாக்குவார்கள் என எவனே கிளப்பிவிட்ட பீதிய ஆர்மிகாரன் நம்பி தாக்க நேத்து பல ஜனம் செத்து போச்சி.
//. அதேசமயம், பிரபாகரன் பாது காப்புக்காக மட்டும் நூற்றுக்கணக்கான இளம் போராளிகள் இருப்பதால்... //
Is it srilankan Tamil issue or rights ? Movement to protect one single person ?
This is the same ego which broght t0 this level .
sorry for srilankan tamils .
Please post real stuff.
Already, people from Tamil Eelam around the world are depressed by the news of their relations, kin and kith. Even otherwise, we are all deeply saddened and feeling helpless. Only God can save those people and bring a clear and good solution for all the lose.
-kajan
பிரமிப்பு உணர்வுக்கு தீனி போடும் விதத்தில், மிகையான கட்பனயுடன் எழுதப்பட்டுள்ளது. தற்போது இன்னலில் இருக்கும் மக்களின் துயர நிலையை விளக்கும் கட்டுரை தான் பொறுப்பான பத்திரிக்கைக்கு அழகு. இப்படி எழுவது மேலும் ராணுவத்துக்கு வெறியை ஊட்டி மேலும் மக்களை தாக்குவதட்ட்கு தூண்டி விடாதா?. கொழும்பில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் இல்லை . அரசு சார்பாக இல்லாமல் எழுதுபவர்கள் கொல்லபடுகிறார்கள் அல்லது விரட்டபடுகிறார்கள். இப்படி இருக்கும்போது கொழும்பில் இருந்து "எழில் " எழுதியதாக இருப்பது நம்பும்படியாக இல்லை.
வாரா வாரம் பிரபாகரனை அட்டையில் போடுவது மார்க்கெட் உத்தியாக போய்விட்டது. ஜூனியர் விகடடுடன் போட்டி போட இப்படி அபத்தமான செய்தியாய் போட்டு உண்மையை பழி கொடுக்கவேண்டாம்.
இந்த செய்திகள் எல்லாம் தங்கள் விற்பனையைக் கூட்டுவதற்காக மிகைப்படித்திக் கற்பனை செய்து வெளியிடப்பட்டவை.
இலங்கை அரசு மிக மோசமான முறையில் தமிழர்களைக் கொன்று மனிதப் படுகொலை செய்கிறது.வேண்டுமென்றே அப்பாவிப் பொதுமக்கள் மீது செல்களையும் குண்டுகளையும் வீசி கொலை செய்கிறது..இது ஒரு போர் குற்றம்.இதற்காக சிங்கள ராஜபக்சக்களை சர்வதேச கோர்ட்டுக்கு கொண்டுபோய் தண்டனை கொடுக்கலாம்.
அதற்காக தாங்கள் புலிகள் வந்து தாக்குகிறார்கள் என்ற வதந்தியினால் பொதுமக்களை தாக்கியதாக ஒரு பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து இருக்கிறார்கள்..சிங்கள இராணுவம் வேண்டும் என்றேதான் தமிழர்களை குறி வைத்து தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்..இந்த சிங்களப் பிரச்சாரத்தை உண்மை மாதிரி ஜூனியர் விகடன் ஒரு கதை சொல்லிக் கட்டுரை எழுதுகிறது.
சமீப காலமாக ஜூனியர் விகடனின் சில பத்திரிகையாளர்களும் இலங்கைத் தூதுவர் அம்சாவின் வலையில் விழுந்து விட்டார்களோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.
புலம் பெயர் வாழ் தேசங்களில் உள்ள எம் இரத்த உறவுகளே. எமது உறவுடன் இணைந்த தாழ்மையான வணக்கம்.
உங்களின் தாய் மண்ணில் உங்கள் உறவுகளாகிய நாங்கள் அனுபவிக்கும் துயரங்களையும் அழிவுகளையும் இழப்புக்களையும் எங்களுக்கு மேலாக உணர்ந்து கொண்ட நீங்கள் முன்னெடுக்கின்ற தாயகத்தின் தேசிய விடுதலைக்கான எழுச்சி செயற்பாடுகள் அனைத்தையும் அவதானித்து எங்களின் இதய குமுறல்களை எப்படி உங்களோடு பகிர்ந்து கொள்வதென்று புரியாத சூழ்நிலையில் வாய்மூடி மௌனிகளாக எங்கள் இதயம் வெடிக்கின்றது.
நீங்கள் வாழும் தேசத்தில் உங்கள் உள்ளக் குமுறல்களை துணிந்து வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றீர்கள். நாங்களோ இத் தாய் மண்ணில் வாழ்ந்துகொண்டு எங்கள் தழிழ் என்ற இனிய மூச்சை சுவாசிக்க முடியாதவர்களாக தவிக்கின்றோம்.
எமது தேசிய விடுதலை போராட்டத்தின் வரலாற்றையும் தேசிய தலைவரின் வழிகாட்டல்களையும் தமிழர்களாகிய நாம் அனைவரும் உணர்வோம்.
இவ்வாறான கால கட்டத்தில் எமது வடக்கு தாயகமாகிய யாழ்மண் இணைப்பின்றி துண்டாடப்பட்டதுடன், கிழக்கு தாயகம் மட்டுநகர் மண்ணும் தேசத் துரோகிகளின் வழிகாட்டல்களுடன் எமது தாயகத்தின் தனித்துவம் தடம் புரண்டு துண்டாடப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் விடுதலை பாதையின் வன்னிக் களமானது தனிமைப்படுத்தப்பட்டு இரத்த களமாக உருமாறியுள்ளதுடன், அங்கு எமது உறவுகளின் உயிர் அழிவுகளும் அளவிட முடியாத துயரத்தில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளது.
எமது தேசிய தலைவரும் அவருடன் இணைந்த எமது இரத்த உறவுகள் மீதும் சிறிலங்கா அரசு தங்களால் முடியாத செயற்பாட்டை மேற்கொள்வதற்காக இந்திய அரசுடனும் ஏனைய வல்லரசு நாடுகளுடன் இணைந்து வேறோர் அயல் நாட்டை கைப்பற்றுவதுபோல எமது இனத்தையும், தேசத்தையும் அழித்து விட்டு வெற்றி விழா கொண்டாடுகின்றார்கள்.
திரும்பி வாருங்கள்…
இவ்வாறான சூழ் நிலையில் எமது தேசிய விடுதலைக்கு தளமாகவும், போர் முனையாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வன்னி போர்க்களத்தில் உள்ளவர்கள் எமது சகோதர இரத்த உறவுகள்தான். அவர்கள் மறு அவதாரங்கள் எடுப்பதற்கு கடவுளோ, மந்திரவாதிகளோ இல்லை.
அங்கு தேவைப்படுவதெல்லாம் ஆட்பலத்துடன், இணைந்த மனிதவலு தான். இவ்வலுப்பலத்தினை எமது தேசிய தலைவரின் இலக்கோடு இணைத்து கொள்வதற்கும், எம் உறவுகளை உயிர் ஊட்டுவதற்கும், புலம் பெயர்வாழ் தமிழ் மக்களாகிய நீங்கள் தேச விடுதலைக்கான அமைப்புக்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், இளைஞர், யுவதிகள் ஏனையோர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சாதூரியமான திட்டங்களை மேற்கொள்வதுடன்,அழிந்து விட்ட எமது தாய் மண்ணின் சமூக, பொருளாதார, கல்வி, கலை, கலாச்சார, விழுமியங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், எமது தேசவிடுதலையை வென்றெடுப்பதற்கும் அனைவரும் விரைந்து வாரீர்! என்று அறைகூவல் விடுக்கின்றோம்.