புலிகளின் திடீர் பாய்ச்சல், வெளிவராத தகவல்கள்:நக்கீரன்

இலங்கையின் கட்டுநாயக விமானப்படைத்தளமும் அதனையொட்டியுள்ள வான் படை தலைமையகமும் சிங்கள அரசின் அதி உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறது. இதற்குள் ஊடுருவி மீண்டும் ஒருமுறை புலிகள் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல்... இலங்கை அரசுக்கு கிலிபிடிக்க வைத்துவிட்டது. புலிகளின் இந்த தாக்குதலை இலங்கை அரசு முறியடித்துவிட்டாலும், ""இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது'' என்று சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன.

வன்னியில் உள்ள தமிழர்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தும் சிங்கள அரசுக்கு, ""எங்கள் தமிழர்கள் வாழும் பகுதியில் குண்டுவீச்சைத் தொடர்ந்தால் சிங்களர்களின் தலைநகரமான கொழும்பு மீது நாங்கள் குண்டு வீசுவோம்'' என்ற எச்சரிக்கும் விதத்தில் புலிகள் நடத்திய தாக்குதலாகத்தான் இதைப் பார்க்கிறோம் என்கி றார்கள் இன்னமும் பீதி விலகாத கொழும்புவாசிகள்.

இலங்கையின் பாதுகாப்புத் துறை பேச்சாளரும் அமைச்சருமான கெகலியேரம்புக்வெல, ""புலிகள் நடத்திய வான் தற்கொலைத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் விமானப்படைத் தளத்தை முற்றிலும் அரசு இழந்திருக் கும்!'' என்கிறார் மிரட்சியுடன். இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள புலிகள் தலைமை, ''வான்படைத் தலைமையகமும் கட்டுநாயக வான்படைத் தளமும் தமிழ்மக்கள் மீதான வான் வழி தாக்குதல்களில் முக்கிய பங்கு வகிப்பவை. அதனால் அதனை இலக்கு வைத்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தினோம்'' என்கிறது.

கடந்த 21-ந் தேதி இரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பிரபாகரனிடம் நீலப்புலிகள் விருது பெற்ற வான்கரும்புலிகளின் (தற்கொலைப்படை) முக்கிய தளபதிகளில் ஒருவரான ரூபன் மற்றும் சிரித்திரன் பங்கேற்றனர்.

""தற்போது நடத்தப்பட்ட தாக்குதலோடு இதுவரை 9 முறை விமானத்தாக்குதலை நடத்தியுள்ளனர் புலிகள். இதற்குமுன்பு நடத்தப்பட்ட தாக்குதல்கள் எல்லாமே, இலக்கை குறிவைத்து குண்டுகளை வீசிவிட்டு பத்திரமாக திரும்பிவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் வியூகங்கள் வகுத்தனர் புலிகள். ஆனால் முதல் முறையாக வான்வழி தற்கொலைத்தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக் கின்றனர். அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது போன்ற ஒரு தற்கொலை வான்படைத்தாக்குதல் நடத்தப்பட்டால்தான் நோக்கம் நிறைவேறும் என புலிகள் கருதியிருக்கக் கூடும்''என்கிறார்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

"புலிகளின் பரப்பளவை சுருக்கிவிட் டோம், அவர்களின் 7 விமான ஓடுதளங் களையும் கைப்பற்றி அழித்துவிட்டோம். புலிகளால் இனி செயல்படமுடியாது. விமான தாக்குதலையும் நடத்தமுடியாது. ஓரிரு நாட்களில் புலிகளை முற்றிலும் அழித்து விடுவோம். சரணடைவதை தவிர வேறு வழிகள் அவர்களுக்கு இல்லை' என்றெல்லாம் சிங்கள ராணுவம் இறுமாந்திருக்கும் நிலையில்தான் திடீரென பிரதான வான் வழியிலேயே தங்களின் 2 விமானங்களை சீறிப்பாய வைத்து தாக்குதலை நடத்தி இலங்கை அரசை கதிகலங்க வைத்துள்ளனர் புலிகள்.

இந்த தாக்குதல் எப்படி நடந்துள்ளது என்று வன்னி பிரதேசத்தில் விசாரித்தபோது, ""வன்னிப் பகுதியில் புதுக்குடியிருப்பு மற்றும் அதனையொட்டிய கடற்பரப்புமாக சேர்ந்து 100 சதுரகிலோ மீட்டர் பரப்பளவிலேயே புலிகள் உள்ளனர். இந்த பகுதியை சகல முனைகளிலும் சுற்றி வளைத்து 8 படையணி களை நிற்க வைத்து கடுமையாக தாக்குதலை நடத்திவருகிறது ராணுவம். இது தவிர முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிநவீன 25-க்கும் மேற்பட்ட டோரா கப்பல்களை நிறுத்தி தீவிரமாக கண்காணித்து வரு கின்றனர். அதேபோல முல் லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் எல்லாம் இந்தியா வழங்கிய ராடார்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக் கிறது. இதனையெல் லாம் மீறித்தான் இந்த தாக்குதலை நடத்தி யிருக்கிறார்கள் புலிகள்.

புதுக்குடியிருப்பு மற்றும் தங்கள் கட்டுப் பாட்டில் உள்ள கடற் பிரதேசத்தில் 2 ஓடு தளங்களை வைத்திருக் கிறார்கள். கடற்பிரதேச ஓடுதளத்திலிருந்து முல் லைத்தீவு வழியாக கொழும்பு நோக்கி விரைய ஒரு திட்டம் போடப்பட்டிருக்கிறது. ஆனால், முல்லைத்தீவு வான்வழி என்பது திறந்தவெளி பகுதி. இதில் பயணித்தால் கடல் பகுதியில் உள்ள சிங்கள கடற்படை... தங்கள் விமானம் புறப்பட்ட இடத்திலேயே தாக்கி அழித்துவிட சாத்தியங்கள் அதிகம். அதிலும் கொழும்பு நோக்கி செல்ல முல்லைதீவு தேவையும் இல்லை என கருதி புதுக்குடியிருப்பு பகுதி ஓடுதளத்திலிருந்தே விமானங்களை இயக்க முடிவெடுத்துள்ளார் பிரபாகரன்.

அதன்படி, புதுக்குடியிருப்பிலிருந்து இரவு 8.25க்கு ஒரு விமானமும் 8.40க்கு மற்றொரு விமானமும் புறப்பட்டது. இந்த 2 விமானங்களில் ஒன்றில் கேணல் ரூபனும் மற்றொன்றில் கேணல் சிரித்திரனும் பயணித்தனர். 2 விமானங்களிலும் 230 கிலோ எடைகொண்ட சி 4 ரக வெடிமருந்துகளும் குண்டுகளும் நிரப்பப் பட்டன. இலக்கை அடைந்ததும் விமானங் களை தாழ்வாக இறக்கி விமானத்தை வெடிக்க வைத்து இலங்கை அர சின் வான்படைத்தளத் தையும் வான் படைத் தலைமையகத்தையும் சிதறடிப்பதுதான் திட் டம். இந்த திட்டத்தின் படி இரவு 9.40 க்கு கொழும்புவை அடைந் துள்ளன. புலிகளின் விமானம் பறந்த பாதை என்பது இலங் கை விமானப் படையினர் பயன்படுத்தும் பிரதான வான் வழி பாதையாகும். ஆனால் இந்த பகுதிகளில் இருந்த ரேடார் களின் பார்வையில் படாமல் விரைந்துள்ள புலிகளின் விமானம் கொழும்புக்குள் நுழைந்தபோது தான் அங்கிருந்த ரேடார்களில் சிக்கியுள்ளது. அப்போதுதான் கண்டறிந்துள்ளனர் ராணுவத்தினர். உடனடியாக கொழும்பு முழுவதும் மின்சாரத்தை துண்டித்தனர்.

ஆகாயத்தில் ஒளிவெள்ளத் தை பாய்ச்சி புலிகளின் விமானத்தை தேடினர். சட்டென்று விமானங்கள் சிக்காததால் உயர்பாதுகாப்பு வளைய பகுதி முழுவதும் நின் றிருந்த ராணுவத்தினர் விமான படைஎதிர்ப்பு பீரங்கி மூலம் ஆகாயத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் விமான படைத் தலைமையகத்தை தாக்குவதற்கு நெருங்கிவிட்ட விமானம் நிலை தடுமாற... அருகில் இருந்த வருமான வரித் துறையின் 13 மாடி கட்டி டத்தில் மோதி விபத்திற்குள்ளாகி விட்டது. இதனால் அந்த கட்டிடம் தீப்பற்றி எரிந்தது. அதேவேளையில் வான்படைத்தளத்தைநெருங்கி விட்ட மற்றொரு விமானத்தை நோக்கி ராணுவத்தினர் சுட... அந்த விமானமும் இலக்கை அடைய முடியவில்லை.

மின்சாரத்தை துண்டித்து விட்டு ஆகாயத்தில் சரமாரியாக பீரங்கி தாக்குதலை ராணுவம் நடத்தியதால் புலிகளின் தளபதிகள் தடுமாறிவிட்டனர். தங்களிடமிருந்த வெடிகுண்டுகளை இயக்குவதற்கு முன்பு புலிகள் மீது ராணுவத்தின் குண்டுகள் பாய்ந்ததால் செயல் இழந்து விட்டது புலிகளின் விமானம். ஒரு 5 நிமிடம் ராணு வத்தின் தாக்குதலிலிருந்து புலிகளின் விமானத்தில் ஏதேனும் ஒன்று தப்பித்திருந்தாலும்கூட ராணுவத்திற்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியிருப் பார்கள். பெரிய இழப்புகள் ராணுவத்திற்கு இல்லையென்றா லும் கூட.. புலிகள் தங்களால் எந்தசூழலிலும் பலத்தை நிரூபிக்க முடியும் என்று உணர்த்தியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்''’என்கின்றனர்.

இலங்கை ராணுவ வட்டாரங்களில் விசாரித்த போது,’""வவுனியா, மன்னார் வழியாக புலிகளின் விமானம் பயணிக் கிறபோதே எங்களுக்கு தகவல் வந்து விட்டது. இந்தியா வழங்கிய ரேடார்கள் இந்த முறை தப்பு செய்யவில்லை. மிக துல்லியமாக எங்களுக்கு காட்டிக்கொடுத்தது. அத்துடன் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது என்பதையும் கணக்கிட்டு சொல்லியது ரேடார்கள். அதனால் கொழும்பில் வைத்து அதனை தகர்க்கவேண்டு மென்று புலிகளின் விமானத்தை இடையில் மறிக்கவில்லை. அதேசமயம், ராணுவத்தின் விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் படையணியினரையும் உஷார் படுத்திவிட்டு காத்திருந்தோம். கொழும்பிற்குள் நுழைந்ததுமே மின்சாரத்தை துண்டித்துவிட்டு அதிரடியான தாக்குதலை நடத்தியதில் புலிகளின் விமானங்களை வீழ்த்திவிட்டோம். ரிஸ்க்கான ஆபரேசன்தான். கொஞ்சம் தவறியிருந்தாலும் புலிகள் ஜெயித்திருப்பார்கள். சமாளிக்கவே முடியாத அளவிற்கு ராணுவத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆக புலிகளிடமிருந்த 2 விமானங்களையும் அழித்துவிட்டோம். இனி அவர்கள் வான்வழித் தாக்குதல் நடத்த முடியாது. புலிகளுக்கு மிகப்பெரிய இழப்பு இது''’என்கின்றனர் ராணுவ உயர் அதிகாரிகள்.

ஆனால் புலிகள் தரப்போ,’""ஏற்கனவே நாங்கள் பயன்படுத்திய விமானத்திற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தற்போது பயன்படுத்தியது ஒருவர் அமர்ந்து செல்லும் மிக சிறிய ரக விமானம். ஏற்கனவே பயன்படுத்தியது இருவர் மற்றும் நால்வர் அமர்ந்து செல்லும் விமானங்கள். அந்த விமானங்கள் இன்னமும் பத்திரமாகத்தான் இருக்கிறது. அதனால் புலிகளின் வான் வழித்தாக்குதல்கள் தொடரும்''’என்கின்றன வன்னியிலிருந்து வரும் தகவல்கள். புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ள ராணுவத் தினர் அந்த விமானத்திலிருந்து வெடி மருந்துகளை கைப்பற்றியிருப்ப துடன் அந்த விமானங்கள் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது? என்ன உலோகத்தால் உருவாக்கியிருக்கின்றனர்? எத்தனை பாகங் களாக பிரிக்க முடிகிறது? எந்த நாட்டிலிருந்து விமான பாகங்களை வரவழைத்துள்ளனர்’’என்று தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

-கொழும்பிலிருந்து எழில்

Posted in |

1 comments:

  1. Anonymous Says:

    அகதியான எம் தாய்நிலம்நன்றி: ஈழவிசன்தேடல்:

    சிறப்புச் செய்திகள்"சொந்த நிலத்தில் நிம்மதியாய் வாழ வழி செய்யாமல் தமிழர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் மேற்குலகம்": 'புதினம்' நிருபரிடம் பா.நடேசன் கவலை
    அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் மனித உரிமைகளையும், அரசியல் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாத்து உறுதி செய்வதை விடுத்துவிட்டு - ஐக்கிய நாடுகள் சபையும், இணைத் தலைமை நாடுகளும் அவர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளி்ன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் 'புதினம்' நிருபரிடம் தெரிவித்துள்ளார். [விரிவு]
    உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்திற்கு வன்னியில் இருந்து அவசர அறைகூவல்
    எமக்கு பிரியமான தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் வேறு மொழிகளைப் பேசும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, நாம் ஆதரிக்கும் சர்வ வல்லமையுள்ள இறைவனின் திருப்பெயரில் நாம் வன்னியில் இருந்து கொண்டு இந்த அவசர அறைகூவலை விடுக்கின்றோம் என வன்னி அருட் பணியாளர்கள் சார்பாக அருட்திரு க.சாம் இராஜேந்திரன் அறிவித்துள்ளார். [விரிவு]
    "விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்
    சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். [விரிவு]
    அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் இறந்தோருக்காக கதறிய இந்த உலகு; சிங்கள காட்டுமிராண்டியிடம் கொலைபடும் எமது மக்களுக்காக கவலை கூட படவில்லை: யோகி ஆதங்கம்
    அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்த போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாக்கி அழுகின்றன. ஆனால், ஹிட்லரிலும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை - காட்டுமிராண்டியைப் போல மக்களை கொலை செய்கின்ற ஒரு மனிதனை - அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். ஆனால், இந்த உலகம் எந்த அக்கறையும் காட்டவில்லை. அவனுக்குப் பின்னால் அது மனசாட்சியற்று நிற்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். [விரிவு]
    ஈழத்தில் இனப் படுகொலையை கண்டித்து சென்னையில் தொடருந்து முற்றுகை போராட்டம்
    ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை மத்திய தொடருந்து நிலையத்தில் தொடருந்துகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய நூற்றுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக தொடருந்து போக்குவரத்தும் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. [விரிவு]
    இந்தியாவின் முயற்சி தமிழ் மக்களை பேரினவாதத்திற்கு அடிமைகளாக்கி அழிப்பதற்கே வழிவகுக்கும்: செ.கஜேந்திரன்
    [வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2009, 06:19 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
    வன்னியில் உள்ள தமிழ் மக்களை வெளியேற்ற இந்தியா முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக கூறுவது தமிழ் மக்களை முழுமையாக அகதிகளாக்கி - சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடிமைகளாக்கி - அழிப்பதற்கே வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
    இது தொடர்பாக இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு நேற்று புதன்கிழமை (25.02.09) செல்வராஜா கஜேந்திரன் எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

    இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போரினை சிறிலங்கா அரசு மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது.

    பொதுமக்களை இலக்கு வைத்து வான் தாக்குதல்களையும் எறிகணைத் தாக்குதல்களையும் உக்கிரமாக நடாத்தி வருகின்றது.

    பொதுமக்களை இலக்கு வைத்து திட்டமிட்டு மேற்கொண்டு வரும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் கடந்த 01.01.2009 தொடக்கம் 24.02.2009 வரையான 55 நாட்களில் மட்டும் 2,076 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 4,727 தமிழ் மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

    கொல்லப்பட்டவர்களில் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் சிறுவர்கள் அதிகளவில் அடங்குகின்றனர். இறந்தவர்களில் அதிகளாவானோர் படுகாயமடைந்த நிலையில் உரிய மருத்துவ வசதிகள் எதுவும் இன்றியே உயிரிழந்துள்ளனர்.

    காயமடைந்தவர்களில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நேற்று 24 ஆம் நாள் வரை 1948 பேர் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளவர்கள் சிங்களவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு சிகிச்சைகளுக்காக பலவந்தமாக அனுப்பப்பட்டுள்ளனர்.

    காயமடைந்தவர்களுக்கு உதவிக்காக வந்தவர்கள் பலவந்தமாகப் பிரிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    உறவினர்கள், நண்பர்களின் உதவிகள் எதுவும் இன்றி பாரிய மனிதாபிமான நெருக்கடிகளை காயமடைந்தவர்களும் உதவிக்கு வந்தவர்களும் எதிர்நோக்கி வருகின்றனர்.

    மேலதிக சிகிச்சைகளுக்காக கொண்டு வரப்பட்டவர்கள் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள போதிலும் அவர்களின் உடலங்கள் வன்னியில் உள்ள உறவினர்களிடம் அனுப்பி வைக்கப்படாமலேயே அடக்கம் செய்யப்படுகின்றது.

    சிகிச்சைக்காக வந்த நோயளிகளும் உதவிக்கு வந்துள்ளவர்களும் மீண்டும் வன்னியில் உள்ள தமது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று இணைந்து கொள்ள அனுமதி மறுத்துள்ள சிறிலங்கா அரசு, அவர்களை குடும்ப உறுப்பினர்களுடன் இணைவதனை தடுக்கும் வகையில் பலவந்தமாக முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர்.

    இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசங்களுக்குள் வன்னியில் இருந்து இதுவரையில் 35,000 வரையான பொதுமக்கள் வந்துள்ளதாக அரசு கூறுகின்றது.

    இவர்கள், அனைவரும் தாமாக விரும்பி வரவில்லை மாறாக மக்கள் வாழ்விடங்களை இராணுவம் திடீரென கைப்பற்றிய போது இராணுவத்தினரிடம் அகப்பட்டு இராணுவத்தினரால் பலவந்தமாக கொண்டு வரப்பட்டவர்களும் பெருமளவில் உள்ளனர்.

    அவ்வாறு வந்த பொதுமக்களை ஆண்கள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் வேறாகவும் தாய்மார் மற்றும் குழந்தைகள் வேறாகவும் பிரிக்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    அவ்வாறு அனுப்பப்படும் போது பெருமளவு பெண்களும் ஆண்களும் படையினரால் தெரிவு செய்யப்பட்டு இரகசிய முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

    இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆண்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். பெருமளவானோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    எஞ்சியவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் பெயர் விபரங்களை இராணுவம் இரகசியமாக வைத்துள்ளது.

    குடும்பங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுளமையினால் எத்தனை பேர் காணமல் போனார்கள் யாருடய உறவினர்கள் காணாமல் போனார்கள் என்ற விபரங்கள் எதுவும் தெரியாமல் முகாம்களில் உள்ள மக்கள் தவிக்கின்றனர்.

    முகாம்களில் உள்ள இளம் பெண்களும் ஆண்களும் விசாரணைகளுக்காக என்று கூறி இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டு துன்புறுத்தப்படுவதுடன் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

    பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும்போது அக்கொடூரத்தினை படையினர் வீடியோ கமராக்களில் பதிவு செய்யும் கொடூரங்களும் நடைபெற்று வருவதாக முகாம்களில் இருந்து நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

    மக்கள் தமது பிரச்சினைகளை வெளியே யாருக்கும் சொல்ல முடியாதளவுக்கு இராணுவத்தினரதும் துணை இராணுவக் குழுவினரதும் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாக முகாம்களில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தூதரகங்களை சார்ந்தவர்களும் முகாம்களுக்கு பயணம் செய்து பொதுமக்களை சந்திக்கும்போது பொதுமக்களுடன் சிவில் உடை அணிந்து இராணுவப் புலனாய்வுத்துறையினரும் துணை இராணுவக் குழுவினரும் பொதுமக்கள் போன்று நிற்பதனால் அச்சம் காரணமாக மக்கள் உண்மைகளை பேச முடியாதுள்ளதாகவும் குறித்த சில மணி நேரங்களில் அல்லது ஓரிரண்டு நாட்களில் மக்களின் உண்மையான பிரச்சினைகளை கேட்டறிய முடியாது என்றும் முகாம்களில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.

    முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் பெருமளவானோர் தாம் வன்னியில் உள்ள தமது உறவினருடன் சென்று மீண்டும் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் ஆனால் அது தொடர்பாக பேசினால் இராணுவத்தினரால் தாம் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட நேரிடும் என அஞ்சுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    கடந்த இரண்டு வருடங்களில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் கொழும்பு உட்பட தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் கடத்தப்பட்டும் உள்ளனர்.

    அப்பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், சித்திரவதைகள், கொள்ளைகள் என்பன தாராளமாக நடைபெற்று வருவதுடன் மிக வேகமான சிங்கள மயமாக்கலும் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

    இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலும் ஏற்கனவே இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தவோ சிங்கள மயமாக்கலை தடுக்கவோ இந்திய அரசாங்கத்தினால் முடியாமல் போய் உள்ளது.

    சிறிலங்கா அரசின் நடவக்கைகளை நோக்கும் போது வன்னியில் எஞ்சியுள்ள பகுதிகளை கைப்பற்றி முழு அளவிலான இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகி வருவதை தெளிவாக உணர முடிகிறது.

    இந்நிலையில் வன்னியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவர முயற்சி செய்வது சிங்கள-தமிழ் மக்களுக்கு இடையிலான 60 ஆண்டுகால பிரச்சினைகளை தீர்க்க ஒரு போதும் உதவப் போவதில்லை.

    இவ்வாறான நிலையில் வன்னியில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கான நம்பகமான பாதுகாப்பான வழிமுறைகளை கண்டறியுமாறும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயாராக உள்ளதாகவும் இந்தியா கூறுவது தமிழ் மக்களை முழுமையாக அகதிகளாக்கி சிங்கள பௌத்த பேரினவாததிற்கு அடிமைகளாக்கி அழிப்பதற்கே வழி வகுக்கும்.

    எனவே, இந்தியா வன்னியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை உடன் கைவிட வேண்டும் என்பதுடன்

    சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் இன அழிப்பு போருக்கு வழங்கும் சகல ஆதரவையும் உடன் விலக்கிக்கொண்டு, உடனடி போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்தவும் வன்னியில் உள்ள மக்களுக்கான உடனடி மனிதாபிமான உதவிகளை அனுப்பிவைக்க நடவடிக்கை ஏடுக்க வேண்டும் எனவும் கோருவதுடன்

    தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி -

    அவர்களை தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக அங்கீகரித்து -

    தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கையை அங்கீகரிப்பதன் மூலம் இலங்கையில் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் கோருகின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails