""ராஜபக்சே தலைக்கு விலை!'' -இந்து மக்கள் கட்சி

ராஜபக்சே தலைக்கு ஏழரை கோடி விலை வைத்து அதிரடி கிளப்பி இருக்கிறது இந்து மக்கள் கட்சி.

பல்லடம் ஜி.என்.ஆர்.சாலையில் இருக்கும் இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் கோவை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. பாரதிய ஜனசக்தி பொதுச்செயலாளர் திண்டுக் கல் மாணிக்கம், அமைப்புக்குழுத் தலைவர் மதுரை திருமுகனார், மாவட்டத்தலைவர் தளபதி தன்ராஜ், ஜீயர் ரமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஈழத்தமிழர் படுகொலை குறித்து விவாதித்தனர். இந்தக் கூட்டத்தில்தான் ராஜபக்சே தலைக்கு விலை வைத்து தீர் மானம் நிறைவேற்றப்பட்டி ருக்கிறது. இதை பிட்நோட் டீஸ் அடித்தும் போஸ்டர் ஒட்டியும் அங்கங்கே பரப்பி... பரவலாகப் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் இந்து அமைப்பினர். பெரும்பாலான போஸ்டர்களில் நக்கீரன் அட்டைப்படத்தில் வந்த மண்டை யோட்டு மாலையுடன் கூடிய ராஜபக்சே படமே இடம் பிடித்திருக்கிறது.

தீர்மானம் குறித்து இந்து மக்கள் கட்சி யின் மாநில பொதுச்செயலாளர் அண்ணா துரையிடம் நாம் கேட்டபோது... ""இந்திய அரசு, ராஜபக்சேவை அண்டை நாட்டு அதிபராகப் பார்க்கிறது. சில உலக நாடு களும் அவரை ஏதோ ஒரு நாட்டின் ஜனாதிபதி என்று நினைக்கின்றன. உண்மை யில் அவர் ஒருநாட்டின் அதிபராகவோ... மக்களின் தலைவ ராகவோ நடந்துகொள்ளவில்லை. சொந்தநாட்டு மக்களையே குண்டுமழை பொழிந்து கொல்லக்கூடிய... ரத்தவெறி கொண்ட அரக்கனாகவே நடந்து கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் அவரை ஆசியாவின் ஹிட்லராக... அழிவுசக்திகொண்ட அரக்கனாகத்தான் பார்க்கிறார்கள். இதை இந்திய அரசுக்கும் உலக நாடுகளுக்கும் உணர்த்தவே... அந்த அரக்கனின் தலைக்கு விலை வைத்திருக்கிறோம்.

இங்குள்ள ஏழரை கோடி தமிழர்களும் ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டு... அவரது தலைக்கான விலையைக்கொடுப்போம். கச்சத்தீவைப் போல் இலங்கையும் ஒரு காலத்தில் நம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த நிலப் பரப்புதான். எனவே அந்த உரிமையைக் கையில் எடுத்து இலங்கை மீது போர் தொடுத்து... தமிழ் ஈழத்தை கைப்பற்றி அதை அங்குள்ள தமிழர்களிடம் இந்தியா ஒப்படைக்கவேண்டும். இனியும் ராஜபக்சே எங்கள் தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதை எங்களால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது''’என்றார் ஆக்ரோஷமாக. தமிழீழம் மலரவேண்டும் என்ற கோரிக்கையோடு திண்டுக் கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து பழனிக்கு 30 பேருடன் பாதயாத்திரை சென்று... முடிக் காணிக்கையும் செலுத்தியிருக்கிறார்...இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளரான தர்மராஜ். மொட்டை போட்ட கையோடு நம்மிடம் பேசிய அவர்...’’""தமிழ்க் கடவுளான பழனி முருகன்... சக்தி படைத்தவர். அசுரர்களை சம்ஹாரம் செய்த வர். எனவே ராஜபக்சேவை சம்ஹாரம் பண்ணி... தமிழீழத் தை மலர வைக்கவேண்டும் என தமிழ்க் கடவுளான முருகப் பெருமானிடம் கோரிக்கை வைத்து... மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறோம். எங்கள் வேண்டுதல் பலிக்காமல் போகாது''’என்கிறார் அழுத்தமான நம்பிக்கையோடு.

இலங்கை பிரச்சினையில் இந் திய அரசின் மீது நம்பிக்கை இழக்க ஆரம்பித்தவர்கள்... கடைசியாய் இறைவனை நம்ப ஆரம்பித்திருக் கிறார்கள்.

-சகா

நக்கீரன்

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails