இலங்கைக்கான பிரித்தானிய பிரதமரின் சிறப்புப் பிரதிநிதி
Posted On Thursday, 12 February 2009 at at 10:24 by Mikeஇலங்கையில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலும், அங்கு நிலவும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக உதவும் வகையிலும், பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்புச் செயலரான தேஸ் பிரவுண் அவர்களை பிரித்தானியப் பிரதமர் கார்டன் பிரவுண் தனது சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளார்.
இலங்கை அரசுடனும், அங்குள்ள பல்சமூகத் தலைவர்களுடனும் தேஸ் பிரவுண் அவர்கள் நெருக்கமாக இணைந்து செயல்படுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அவர் சர்வதேச அமைப்புகள் மற்றும் பரந்துபட்ட அளவில் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
appdiye mike intha pathivaiyum podunga
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1937&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51
ragu
நன்றி ரகு அவர்களே, கண்டிப்பாக இந்த கொடுமையை உலகுக்கு எடுத்து சொல்வோம். அடுத்த பதிவில் இதை கண்டிப்பாக இடுகிறேன்.