தீக்குளித்த "வீரத் தமிழ் மகன்" ரவியும் மரணம்: மதுரையில் பல்லாயிரக்கணக்கானேர் வணக்கம்
Posted On Monday, 2 February 2009 at at 12:25 by Mikeஇலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிங்கள அரசின் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளித்த திண்டுக்கலைச் சேர்ந்த "வீரத் தமிழ் மகன்" ரவி இன்று காலை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தார். அவரின் உடலத்துக்கு பல்லாயிரக்கணக்கானோர் வணக்கம் செலுத்தினர்.
முல்லைத்தீவு காடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்து வரும் சிங்கள படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மனமுடைந்த நிலக்கோட்டை குல்லாளகுண்டு என்ற சிற்றூரைச் சேர்ந்த ரவி (வயது 39) கடந்த இரு நாட்களுக்கு முன் தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் இன்று திங்கட்கிழமை இறந்தார்.
மேலும் படங்களுடன் இந்த சோகத்தினை பார்க்க
http://puthinam.com/full.php?2b34OO44b33M6DNe4d45Vo6ca0bc4AO24d2ISmA2e0dU0MtHce03f1eW0cc2mcYAde