ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் இன்றும் ஒருவர் தீக்குளிப்பு

கூமுட்டை சாமி, மொன்னை மாரி சோ, முடிச்சவிக்கி ஜெ, மற்றும் மலத்தையே உண்டு அதனையே கக்கும் தினமலர், இவர்களின் தீக்குளிப்பிற்கு முழுக்காரணமும் நீங்களே.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடலூர் பழைய நகரம் குழந்தை கொலனியைச் சேர்ந்த சோதி என்று அழைக்கப்படும் தமிழ்வேந்தன் (வயது 30) என்பவர் தீக்குளித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை நிர்வாகியாக இருக்கும் இவர், ஏழு மாதக் குழந்தையின் தந்தையும் ஆவார்.

இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலை குறித்து மன அழுத்தத்தில் இருந்து வந்த இவர், கடந்த மாதம் வீட்டின் அருகில் உண்ணாநிலைப் போராட்டமும் நடத்தியுள்ளார்.சோதி


மருத்துவமனையில் காயக்கட்டுகளுடன் சோதி


அழுதபடி நிற்கும் சோதியின் தாயார்

இந்நிலையில் மனைவியும் குழந்தையும் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றிருந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று புதன்கிழமை பிற்பகல் இலங்கையில் இனப் போரைத் தடுத்து நிறுத்தக் கோரியும், சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீயிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் சோதியை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 90 விழுக்காடு அளவிற்கு உடல் எரிந்துள்ளது என்றும், 3 மணிநேரம் கழித்த பின்னரே நிலைமை குறித்து தெரிவிக்க முடியும் என்றும் மாலை 3:00 மணியளவில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வு குறித்து கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

தீக்குளிப்பு முயற்சிக்கு முன்னதாக சோதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீக்குளிப்பு முடிவு குறித்து தெரிவித்ததாகவும், அவர் ஆறுதல் கூறியதுடன், அது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும், அதனையும் மீறி சோதி தீக்குளித்தார் என்றும் கூறப்படுகிறது.

http://puthinam.com/full.php?2b1VoKe0dIcYe0ecAA4y3b4M6D74d2f1e3cc2AmS3d434OO3a030Mt3e

Posted in |

0 comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails