கருணாநிதியிடம் கேட்க விரும்பும் 10 கேள்விகள்

1) தமிழகத்தில் உங்கள் வாக்கு வங்கி 10 சதவீதம் குறைந்ததிற்கு காரணம் காங்கிரஸ் என்று தெரிந்தும், இன்னும் ஏன் அதனுடன் கூட்டு வைத்துள்ளிர்களே ஏன்.

2) சகோதர யுத்தம் அப்படின்னா ஸ்டாலினுக்கு, அழகிரிக்கும் நடந்ததே அதுவா.

3) அடுத்த முறை ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நினைப்பு கொஞ்சமாவது இருக்கிறதா

4) ஒரு உண்மை தமிழன் சீமானை பிடிப்பதில் உள்ள உங்கள் வீரம், ஏன் தமிழின அழிவை காப்பதில் இல்லை

5) ஒரு வேளை ஜெ. நேருக்கு, நேர் சந்தித்தால் என்ன பேசி கொள்வீர்கள்(2 பேரும் ஒன்னுதான், நீ தமிழனுக்கு எதிரி, நான் துரோகி சிங்கா,சிங்கிச்ச்சா அப்படின்னு ஒரு கோலாட்டம் ஆடுவிங்களா)

6) முத்துகுமாரின் தியாகத்தை கொச்சை படுத்த எப்படி உங்களால் முடிகிறது, மனசாட்சியை எங்கு அடகு வைத்திருக்கிர்கள்.

7) திமுக குடும்ப அரசியல் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு தொடரும். இது மெகா, மெகா சீரியலா.

8) தமிழர்கள் ஒவ்வொரு நாளும் நூற்றுகணக்கில் ஈழத்தில் இலங்கை அரசின் வன்முறையால் செத்து மடிவது, தெரியுமா.

9) தமிழர்களை காக்க அரசியல் கட்சியாக நீங்கள் முயற்சி எடுப்பதை விட்டு, நீங்களே மக்களிடம் போய் நியாயம் கேட்கிறிர்கள், இது என்ன நியாயம் கலைஞர் சார். மக்கள் எல்லாம் தெளிவாத்தான் இருக்காங்க. நீங்கள் தெளிவு அடைவது எப்போது.

10) தமிழர்களின் மேல் எப்போது வெறுப்பு வரத்துவங்கியது.

Posted in |

3 comments:

 1. Anonymous Says:

  நிலையான கொள்கைகள் இல்லாதவர் ஜெயலலிதா. இன்றைக்கு ஒருவரை எதிர்ப்பார். நாளைக்கு அவரை சேர்த்துக் கொள்வார். ஓரிருவரைத் தவிர அவர் யாரையும் தொடர்ந்து எதிரியாகப் பார்ப்பது இல்லை. அப்படி அவர் தொடர்ந்து எதிரியாகப் பார்க்கின்ற ஓரிருவரில் தமிழீழத்தின் தேசியத் தலைவரும் இருக்கின்றார்.

  இன்றைக்கு தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விடுதலைப் புலிகளையும் தமிழீழப் போராட்டத்தையும் ஆதரிக்கின்ற நிலையில் கூட, ஜெயலலிதாவிடம் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளையும் தமிழீழத்தையும் ஆதரிப்பதன் மூலம் கலைஞருக்கு சங்கடத்தை உருவாக்குதல், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு, பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்றவையும் இணைந்த பலமான கூட்டணி போன்ற அரசியல் ஆதாயங்கள் இருந்தும், விடுதலைப் புலிகள் மீது தொடர்ந்தும் வெறுப்பைக் கொட்டுவது போன்றே ஜெயலலிதா பேசி வருகின்றார்.

  “இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை கைது செய்து கொண்டு வர வேண்டும்” என்று சட்ட சபையில் தீர்மானம் போட்டவர் ஜெயலலிதா. காங்கிரஸ் கட்சி கூட அப்படி ஒரு தீர்மானத்தை போடவில்லை. தேசியத் தலைவரின் ஊடகவியலாளர் மாநாடு வன்னியில் நடைபெற்று அது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியிருந்தது. தேசியத் தலைவரின் முகத்தைப் பார்த்தவுடன் அப்படி என்ன கோபம் வந்ததோ தெரியவில்லை, உடனடியாக இப்படி ஒரு தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றினார்.

  “இந்த மனுசிக்கு நாங்கள் அப்படி என்ன செய்தோம்” என்று தேசியத் தலைவர் கூட ஒரு முறை அலுத்துக் கொண்டதாகச் சொல்வார்கள். ஜெயலலிதாவிற்கு அப்படி என்னதான் கோபம் என்கின்ற கேள்விக்குப் பதிலை சொல்வது உண்மையில் மிகவும் கடினமானது. ஆனால் சில காரணங்கள் இருக்கக் கூடும்.

  உண்மையில் ஜெயலலிதாவிற்கு என்று அரசியற் கொள்கைகளோ, மக்கள் நலன் பற்றிய சிந்தனைகளோ இல்லை. அவருடைய பெரும்பாலான நடவடிக்கைகள் தனிப்பட்ட நலன்களும், தனிப்பட்ட கோபங்களும் சார்ந்தவை. உதாரணமாக காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் கைதை எடுத்துக் கொள்ளலாம். ஜெயலலிதாவை பார்ப்பனியவாதி என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அவர் ஜெயேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தார். ஜெயேந்திரனைக் கைது செய்வதற்கு ஒரு தனிப்பட்ட பிரச்சனைதான் காரணமாக இருந்தது.

  ஜெயலலிதாவும் அவருடைய தோழியாகிய சசிகலாவும் ஒரு காலத்தில் ஜெயேந்திரனுடன் கொண்டிருந்த நட்பு முறிந்து போனதற்கு காரணமாக இருந்த பிரச்சனை எது என்பது பற்றி பலர் பலவாறு சொல்கின்றார்கள். சிலர் பணம் சம்பந்தமான பிரச்சனை என்கின்றனர். சிலர் சொத்து சம்பந்தமான பிரச்சனை என்கின்றனர். சிலர் வேறு ஒரு காரணத்தை சொல்கின்றனர். அந்தக் காரணம் சினிமா கிசு கிசு போன்று சுவாரஸ்யமானது.

  ஜெயேந்திரனுக்கு சற்று குண்டாக இருக்கின்ற பெண்கள் மீது ஆர்வம் அதிகம். எழுத்தாளர் அனுராதா ரமணன் மீது ஜெயேந்திரன் மோகம் கொண்டு அவரை மடத்திற்கு அழைத்து வரச் செய்து தவறாக நடக்க முயற்சி செய்த சம்பவம் பலரும் அறிந்த ஒன்று. எழுத்தாளர் அனுராதா ரமணனை அழைத்துக் கொண்டு சென்ற பெண்ணுக்கும் ஜெயேந்திரனிற்கும் ஏற்கனவே தகாத உறவு இருந்ததாகவும் அனுராதா ரமணன் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார். அந்தப் பெண்ணும் நல்ல குண்டான உடல்வாகு உள்ளவர்தான்.

  பலவிதமான பெண்களோடு தொடர்பு வைத்திருந்தாலும், ஜெயேந்திரனுக்கு குண்டான பெண்கள் மீதுதான் பிடிப்பு அதிகம். இதுதான் அவரைக் கம்பி எண்ணவும் வைத்தது. மடத்திற்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்த சசிகலாவிடம் ஒரு நாள் தன்னுடைய கைவரிசையைக் காட்டி விட்டார். ஜெயலலிதா தனக்கு ஏதாவது என்றாலும் பொறுப்பார். சசிகலாவிற்கு ஒன்று என்றால்… அவ்வளவுதான்.

  அதுவரை தூங்கிக் கொண்டிருந்த சங்கரராமன் வழக்கிற்கு உயிர் வந்தது. ஜெயேந்திரன் உள்ளே போனார். அதன் பிறகு வழக்கு மேல் வழக்குப் போட்டு ஜெயேந்திரனுக்கு கொடுக்கக் கூடிய அனைத்து தொல்லைகளையும் ஜெயலலிதா கொடுத்தார். ஒரு பரம்பரைப் பகைவனோடு நடந்து கொள்வது போன்றுதான் ஜெயலலிதா ஜெயேந்திரனோடு நடந்து கொண்டார்.

  சசிகலாவுடன் ஜெயேந்திரன் தவறாக நடக்க முற்பட்டார் என்ற செய்தியில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது என்று தெரியவில்லை. அனுராதா ரமணன் போன்று சசிகலாவும் வெளிப்படையாக உண்மையைப் பேசும் வரை இந்தச் சம்பவம் ஒரு கிசுகிசுவாகத்தான் இருக்கும். சசிகலாவுடன் அத்துமீறியதுதான் கைதிற்கு காரணமா என்று உறுதியாகத் தெரியாது விட்டாலும், ஜெயேந்திரன் கைது என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சனையால்தான் நடந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

  ஜெயலலிதாவின் பெரும்பாலான நடவடிக்கைகள் அவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தவை என்பதற்கு ஜெயேந்திரனின் கைது ஒரு உதாரணம்.

  ஜெயலலிதா ஒருவர் மீது அன்பு கொள்வதற்கும், வெறுப்புக் கொள்வதற்கும் தனிப்பட்ட காரணங்களே எப்பொழுதும் இருக்கின்றன. அந்த வகையில் தேசியத் தலைவர் மீது ஜெயலலிதா கொண்டிருக்கும் வெறுப்பிற்கும் ஏதாவது தனிப்பட்ட காரணங்கள் இருக்க முடியுமா என்று பார்ப்பது பிழையாக இருக்காது.

  தேசியத் தலைவரும் ஜெயலலிதாவும் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கின்றார்கள். எம்ஜிஆர்தான் தேசியத் தலைவரை ஜெயலலிதாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.அதிலும் இருவரும் வணக்கம் தெரிவித்ததோடு சரி. வேறு ஒன்றும் பேசவில்லை. ஆகவே இந்த இருவருக்குள்ளும் தனிப்பட்ட முறையில் நேரடியான கோபதாபங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை.

  ஆனால் தேசியத் தலைவரை நேசித்த ஒருவரை ஜெயலலிதா வெறுத்தார் என்பதும் தேசியத்தலைவரை வெறுத்த ஒருவரை ஜெயலலிதா விரும்பினார் என்பதும் இங்கே சொல்லக் கூடிய செய்திகள்.

  ஒரு நடிகையாக இருந்த ஜெயலலிதாவை அவரை விட 31 வயது கூடிய எம்ஜிஆர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஜெயலலிதாவே விரும்பி சில இளம் நடிகர்களுடன் நெருங்கிப் பழகிய போதும் அவைகள் எம்ஜிஆரால் தடுக்கப்பட்டன. சினிமாவிலும் அரசியலிலும் உச்சத்தை அடைய விரும்பியதால் ஜெயலலிதாவும் வேண்டா வெறுப்பாக எம்ஜிஆருக்கு ஏற்றபடி நடந்து கொண்டார். அத்துடன் சில ஆண்கள் ஜெயலலிதாவை தொல்லைப்படுத்தியதானால் எம்ஜிஆரின் பாதுகாப்பும் ஜெயலலிதாவிற்குத் தேவைப்பட்டது.

  ஒரு கிழவனிடம் அடைக்கலம் புக வைத்த ஆண் சமூகத்தின் மீது ஜெயலலிதாவிற்கு வெறுப்பு ஏற்பட்டது. தான் விரும்பியவர்களுடன் தன்னைப் பழக விடாத, தன்னை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த எம்ஜிஆர் மீதும் ஜெயலலிதாவிற்கு வெறுப்பு ஏற்பட்டது.

  ஆண் சமூகத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பை, ஒவ்வொரு ஆணாக காலில் விழ வைத்து தீர்த்துக் கொள்கிறார். எம்ஜிஆர் மீது ஏற்பட்ட வெறுப்பை, எம்ஜிஆர் மீது பற்று வைத்திருக்கும் தலைவர்களை பந்தாடித் தீர்த்துக் கொள்கிறார்.

  எம்ஜிஆர் மீது பற்றுக் கொண்டிருந்த தலைவர்கள் யாரும் இன்றைக்கு அதிமுகவில் இல்லை. ஜெயலலிதாவின் அதிமுகவில் எம்ஜிஆரை உண்மையாக நேசிப்பவர்கள் கடைநிலைத் தொண்டர்களாக இருக்கலாமே தவிர, எந்த ஒரு பதவியிலும் இருக்க முடியாது என்பதுதான் இன்றைய நிலை.

  ஜெயலலிதா தலைமையிலும் ஜானகி தலைமையிலும் அதிமுக இரண்டாக உடைந்த பொழுது, ஜெயலலிதாவுடன் நின்ற திருநாவுக்கரசர் போன்ற தலைவர்கள் ஒரு நேரத்தில் அவரை விட்டு விலக வேண்டி வந்தது. இவர்கள் ஜெயலலிதாவை தலைவியாக ஏற்றுக் கொண்டாலும், எம்ஜிஆரையும் தொடர்ந்து நேசித்ததும் இவர்களின் நீக்கத்திற்கு ஒரு காரணம்.

  எம்ஜிஆரால் நேசிக்கப்பட்டவர்களையும், எம்ஜிஆரை நேசித்தவர்களையும் ஜெயலலிதா வெறுத்தார். அரசியற் காரணங்களினால் சிலரை சில காலம் தன்னோடு வைத்துக் கொண்டாலும், பின்பு அவர்களை தூக்கி வெளியில் வீசினார்.

  தேசியத் தலைவர் எம்ஜிஆரால் மிகவும் நேசிக்கப்பட்டவர் என்பதும், தேசியத் தலைவரும் எம்ஜிஆர் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார் என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய ஒரு செய்தி.

  தேசியத் தலைவரை வெறுத்த ஒருவரை ஜெயலலிதா விரும்பிய கதையை இனிப் பார்ப்போம்.

  1984ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்பியாக ஜெயலலிதா தெரிவு செய்யப்பட்டார். அப்பொழுது அவருக்கு ஒன்றும் அதிக வயதில்லை. வெறும் முப்பத்தாறுதான். விளக்கமாகச் சொல்வது என்றால் ஐஸ்வர்யாராயின் இன்றைய வயது. ராஜ்யசபாவில் அழகாகவும் இளமையாகவும் இருந்த ஜெயலலிதாவைப் பார்த்து பல தலைவர்கள் ஜொள்ளு விட்டார்கள். ஜெயலலிதாவின் ஆங்கில அறிவையும் பேச்சுத் திறனையும் வியப்பதாகச் சொல்லி அசடு வழிந்தார்கள்.

  அதே ஆண்டு இந்திராகாந்தி கொல்லப்பட்டு விட, ஜெயலலிதாவை விட நான்கு வயது கூடிய இளம் தலைவர் ராஜீவ்காந்தி பிரதமர் ஆனார். அவரும் ஜெயலலிதாவின் திறமையை வியந்தார். இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தது. இருவருக்கும் இனம் புரியாத அன்பு ஏற்பட்டதாகவும், அவர்களின் உறவு எல்லைகளை கடந்து சென்றதாகவும் ஒரு கிசுகிசு இருக்கின்றது.

  இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது விட்டாலும், பல சம்பவங்கள் இந்தக் கிசுகிசு உண்மையாக இருக்குமோ என்று சிந்திக்க வைக்கின்றன.

  எம்ஜிஆர் நோய் வாய்ப்பிட்டிருந்த பொழுது நாவலர் நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வராக இருந்தார். அப்பொழுது ஜெயலலிதா தன்னை முதல்வராக்கும் படி ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதினார். ராஜீவ்காந்தியிடம் நெருங்கிய உறவும் நம்பிக்கையும் வைத்திருக்காது விட்டால், இப்படி ஒரு கடிதத்தை எழுதும் துணிவு ஜெயலலிதாவிற்கு வந்திருக்காது. ஜெயலலிதாவின் சில நடத்தைகளால் அவரைக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு எம்ஜிஆர் திட்டமிட்டார் என்கின்ற ஒரு செய்தியும் இங்கு இருக்கின்றது.

  ராஜீவ்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த வரை, அந்தக் கட்சியுடன் கூட்டணியை உருவாக்குவது ஜெயலலிதாவிற்கு ஒன்று கடினமாக இருந்தது இல்லை.

  இதை விட ராஜீவ்காந்தியின் உண்மையான மனைவியான சோனியாகாந்தி மீது ஜெயலலிதா கொண்டிருக்கும் வெறுப்பையும் பார்க்க வேண்டும். சோனியாவை ஜெயலலிதா போன்று கடுமையாக யாரும் விமர்சனம் செய்தது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு சோனியாவின் உண்மையான பெயரை சொல்லி அவரை ஜெயலலிதா கடுமையாகச் சாடினார். அரசியற் தேவைகள் வந்த பொழுது கூட சோனியாவோடு ஜெயலலிதாவால் இணைந்து செயற்பட முடியவில்லை.

  வாஜ்பாயின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சுப்ரமணிய சுவாமி வைத்த தேனீர் விருந்தில் இருவரும் கலந்து கொண்டும், தொடர்ந்து இணைந்திருக்க முடியவில்லை. பின்பு தேர்தல் கூட்டணி வைத்த பொழுது, ஓரே மேடையில் இருவரும் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டும், ஜெயலலிதா அதில் கலந்து கொள்ளவில்லை.

  இப்படி ஜெயலலிதா சோனியா மீது வெறுப்பைக் கொட்டுவதற்கு “சக்களத்தி சண்டை” என்பதைத் தவிர வேறு காரணங்களை சொல்ல முடியவில்லை.

  ஜெயலலிதாவின் வாழ்க்கையில் பல ஆண்கள் வந்து சென்றிருக்கின்றார்கள். இதில் எல்லோரையும் ஜெயலலிதா விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தன்னுடைய அறிவுக்கும் அழகுக்கும் நிகரானவராக ராஜீவ்காந்தி இருப்பதாக ஜெயலலிதா நினைத்திருக்கக் கூடும். தன்னைப் பற்றி மிகை மதிப்பீடு கொண்டிருக்கும் ஜெயலலிதா தனக்குப் பொருத்தமான ஒருவராக ராஜீவ்காந்தியை கருதியிருக்கக் கூடும்.

  ராஜீவ்காந்தியை இழந்த சோகத்தினால்தான் என்னவோ, அதன் பிறகு எந்த ஒரு ஆணையும் நெருங்க விடாத ஜெயலலிதா ஒரு பெண்ணையே தனக்கு துணையாக்கிக் கொண்டார்.

  தன்னுடைய ஆருயிர்க் காதலர் ராஜீவ்காந்தியை கொன்று விட்டதாக நம்புதால்தான் தேசியத் தலைவரை ஜெயலலிதா வெறுக்கின்றரா? அல்லது எம்ஜிஆரை வெறுப்பதால் அவரால் நேசிக்கப்பட்ட தேசியத் தலைவரையும் வெறுக்கின்றாரா? அல்லது இரண்டும் இல்லாது வேறு ஒரு காரணத்தினாலா? ஜெயலலிதாவே என்றைக்காவது மனம் திறந்து உண்மையை பேசுகின்ற வரைக்கும் இதற்கான பதில்கள் தெரிய வரப் போவது இல்லை. அதுவரை வெறும் ஊகங்களை மட்டுமே செய்ய முடியும்.

 2. Su.Logan, Norway Says:

  For a long time, I am a observer of sinhala, worldwide tamil and indian politics and all the time I have been serching for any reason for Jeyalaitha to stand against LTTE and its leader, I asked also VaiGo directly when he was here, but now only I got some glues eventhough it is not 100% soure. But if we annalise Jeyalalitha`s behaviour it can be true and acceptable. Hello Anonymous thank you very much to clear the long time dobut.
  Regards
  Logan

 3. கரிகாலன் Says:

  செயலலிதா பற்றிய அனானியின் கருத்துக்கள் அத்தனையும் உண்மை...

  மிகச்சிறந்த பின்னூட்டம்

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails