பந்த்திற்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

கருணாநிதி கவனிக்க வேண்டும், உணர்வுகளை வெளிப்படுத்துவற்கான உரிமை என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது. கருணாநிதி-க்கு நாற்காலியும், காங்கிரஸ்தான் முக்கியம். தமிழனாவது மண்ணாவது. இன்றைய செயற்குழு கூட்டத்தில் இந்திய அரசு தமிழ் மக்களை கொல்வதற்கு மேலும் ஆயுதம் எதுவும் கொடுக்க வேண்டும் என கேட்டு கொள்ளவில்லை. மிக்க மகிழ்ச்சி கருணா(நீதியே).


சரி செய்திக்கு வருவோம்.

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக புதன்கிழமை அன்று தமிழக கட்சிகள் நடத்தவுள்ள பந்த்திற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதன்கிழமை இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த ஜெயநீதி சரவண சதீஷ்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த் தொடர்பாக எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும். அது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவற்கான உரிமை என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது.


மேலும் இந்த மனு மீதான விசாரணை வரும் பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நன்றி நக்கீரன்

Posted in |

1 comments:

  1. G.Ragavan Says:

    நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகச் சரியானது. இது அரசியல் போராட்டமல்ல. உணர்வுகள் உளுத்துப் போன அரசியல்வாதிகளில் கையாலாகதத்தனத்தின் ஏமாற்றத்தில் உணர்வுகள் கொந்தளித்து உருவான அறப்போராட்டம். புரியாதது போல நடிக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் ஆளத்துடிக்கும் வர்க்கத்திற்கும் பாடம் நடத்தும் போராட்டம். வெல்க. வெல்க.

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails