கருணாநிதியின் ஈழஎதிர்ப்பு :spectrum ஊழலில் இருந்து தப்பிப்பதற்காகவே
Posted On Tuesday, 3 February 2009 at at 10:41 by Mikeகாங்கிரஸினை மடியில் வைத்து கொண்டு என்னமா கொஞ்சராருப்பா இவரு. மாறி, மாறி காங்கிரஸ்க்கு உம்மா மேல உம்மா கொடுக்கிறது பார்த்தால் நமக்கே பயமா இருக்குது. இன்று நடந்த செயற்குழு கூட்டத்திலும் உம்மா மழை பொழிந்திருக்கிறார்.
கொஞ்சி குலாவுவது எல்லாம் 60,000 கோடி ஊழலை மறைக்கவே. ஈழமாவது மண்ணாங்கட்டியாவது. போங்கடா போக்கத்த பயலுங்களா, நான் ஒரு ஈழத்தையே இங்கே வாங்க ரெடி பண்ணிட்டிருக்கேன். வேணுமானால் அங்கு வாடகைக்கு வந்து இருங்கள் என்று சொல்கிறார்.
தமிழனை காக்க நினைப்பவன் யாராக இருந்தாலும் அவன் தமிழனின் நண்பனே, சகோதரனே. தமிழனை அழிக்க நினைக்க துடிப்பவன் தமிழனாக இருந்தாலும் அவன் கருங்காலியே. இன்று முதல் நீ அன்புடன் 'கருங்காலி கருணாநிதி' என அழைக்கப்படுவாய்.
உன் இந்த கடைசி காலத்தில், தள்ளாத வயதில் தமிழருக்கு ஏதாவது நல்லது செய்வாய் என்று எதிர்பார்த்திருந்த 7 கோடி தமிழ் மக்களில் நானும் ஒருவன். ஆனால் நீயோ முன்னை விட பலமாகத்தான் இருக்கிறாய் தமிழனுக்கு ஆப்பு வைப்பதில்.
வீரமணி அய்யா உங்களின் தமிழின பற்றை நாங்கள் என்றும் மதிக்கிறோம், உங்களின் நண்பர் ஈழத்துக்கு பண்றது எவ்வளவு பெரிய துரோகம் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். நீங்களே ஒரு நல்ல தீர்ப்பை சொல்லுங்கள்.
"திராவிடர் கழகமும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி" என்று நீங்கள் சொன்னது உண்மையானால், ஏன் ஒரு குழல் குண்டு மட்டும் தமிழனை நோக்கி பாய்கிறது.
இன்று தமிழினம் தவித்து கொண்டிருக்கிறது. இனியிம் இந்த ஊழல் அரசியல் கட்சிகள் தேவையில்லை. ஒரு புதிய தமிழின தலைவரை கண்டெடுப்போம் தமிழர்களை காப்பாற்றுவதற்க்காக.
சமீபத்தில் டெல்லி சென்றிருந்த கருணாநிதியிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையின் கதி என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 'அது முடிந்து போன விஷயம்' என்று பதில் கூறி மக்களை அதிர வைத்திருக்கிறார் தமிழக முதல்வர். கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி ஊழல் இந்த டெண்டர் விவகாரத்தில் நடந்துள்ளதாக நம்பப்படும் இந்த விஷயம் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வதால் எப்படி ஒரு முடிவுக்கு வரமுடியும்?
இந்தியாவை அதிர வைத்த போபர்ஸ், டான்ஸி உள்ளிட்ட பல ஊழல்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்திய ஊழல் சரித்திரத்தில் முதலிடம் பெற்ற பெருமை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு உண்டு. தயாநிதி மாறன் தொலைதொடர்பு மந்திரியாக இருந்த போது அவரால் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று அவருக்கு அடுத்து அமைச்சரான ராசா தெரிவித்தார். சில நாட்களில் ராசா செய்த குளறுபடிகளால் தொலைத் தொடர்புத் துறைக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தயாநிதி மாறன் மட்டுமல்லாமல் மத்திய எதிர்கட்சி எம்.பி.க்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள் - மேலும் இந்த விவகாரம் குறித்து டெல்லி மீடியாக்களும் தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளன. தயாநிதி மாறனோ அல்லது ராசாவோ - நடந்த குளறுபடிகளுக்கு அவர்களது கட்சித் தலைவர் என்ற முறையில் கருணாநிதியே பொறுப்பாவார். அப்படி இருக்க தங்களது சொந்த குடும்பச் சண்டை தற்காலிகமாக ஓய்ந்ததால் ஸ்பெக்ட்ரம் விவகாரமே முடிவுக்கு வந்து விட்டது என்று கருணாநிதி அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்?
ஏற்கனவே நாட்டின் நிதிநிலைமை பாதுகாப்பு தீவிரவாதம் உள்ளிட்ட பல விஷயங்களில் மத்திய அரசின் நிலை பாட்டால் மக்கள் அவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள். டெல்லியிலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது தங்களது பலத்தாலோ அல்லது மக்கள் அவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையாலோ அல்ல - எதிர்கட்சிகளின் மீது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால்தான். இதை உணர்ந்து தி.மு.க தலைவரது கட்டளைகளையும் மீறி மத்திய அரசு ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் முறையான விசாரணை நடத்த முன் வரவேண்டும். போபர்ஸ் விவகாரம் தான் ராஜீவ் அரசை பதவியிழக்க வைத்தது - இத உணர்ந்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வைத்தால் நாட்டுக்கு நல்லது.
நன்றி : http://www.tamiloviam.com/unicode/12110801.asp
உலகின் ஒரே கோமாளி கருணாநிதி.இனிமேல் "கோமாளி கருணாநிதி" என்றே அழைக்கலாம்.
intha kilattu saniyanai enna solli thittalam.avanukku oru saave vara maatenguthui.avanoda ponnu 3000 kodi rupaai palan adainthal endru ella makalaum pesukirargal.ayyo tamilagame ippadi paata oru tamil ina throki naammku thevaiya.ivan kudumbam oliyattum.tamil inam valattum
//கொஞ்சி குலாவுவது எல்லாம் 60 கோடி ஊழலை மறைக்கவே. //
60 ஆ. 60. 000 ஆ.. தெளிவுபடுத்தவும். ப்ளீஸ்
//தமிழனை காக்க நினைப்பவன் யாராக இருந்தாலும் அவன் தமிழனின் நண்பனே, சகோதரனே. தமிழனை அழிக்க நினைக்க துடிப்பவன் தமிழனாக இருந்தாலும் அவன் கருங்காலியே. இன்று முதல் நீ அன்புடன் 'கருங்காலி கருணாநிதி' என அழைக்கப்படுவாய்.//
தமிழன் என்பது பிறப்பில் இல்லை. ஒருவன் தமிழனாக பிறக்காவிட்டாலும் தமிழை, தமிழ் சமூகத்தை மதித்து அதற்க்கு உண்மையாக இருந்தால் அவனும் ஒரு தமிழனே. தமிழனாக பிறந்தும் தமிழ் சமூகத்தை ஏமாற்றி , சுரண்டி, எதிரிகளுக்கு துணை புரிந்து துரோகத்தனம் செய்து வாழ்பவன் தமிழன் அல்ல.
/*/கொஞ்சி குலாவுவது எல்லாம் 60 கோடி ஊழலை மறைக்கவே. //
60 ஆ. 60. 000 ஆ.. தெளிவுபடுத்தவும். ப்ளீஸ்*/
மன்னிக்க வேண்டும், 60,000 கோடி தவறுதலாக 60 கோடி ஆகியது, 60 கோடி எல்லாம் பிச்சை காசு இவருக்கு.