இந்திய அரசை நம்புவது கொலையாளி வீட்டில் அடைக்கலம் புகுவதற்கே ஒப்பாகும்

ஈழ விடுதலை பற்றி, 1992க்குப் பிறகு நீறுபூத்த நெருப்பாகத் தமிழகத் தமிழரிடையே தேங்கிக்கிடந்த ஈழவிடுதலை ஆதரவு உணர்வு, 2.10.2008க்குப் பின்னர், தமிழகத்தில் எல்லாத் தரப்பினரிடமும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. இதற்கு உடனடிக் காரணராக விளங்குவோர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையினரும், மாண்புமிகு தமிழக முதல்வரும் ஆவார்கள். இவர்கள் எடுத்த முன்முயற்சி - கட்சி, மாவட்டம், தேசம், பிராந்தியம் அல்லது மாநிலம் என்கிற எல்லாவற்றையும் கடந்து, இந்தியாவிலும் உலக நாடுகளிலும் வாழும் ஏழு கோடித் தமிழரையும் பிற மொழியினரையும் பற்றிக் கொண்டது.

இந்தியத் தலைநகரான புதுதில்லியில் கடந்த ஓராண்டாகத் தமிழ் இனப் பல்கலைக் கழக மாணவர்களால் தூக்கிப்பிடிக்கப் பட்ட ஈழத்தமிழர் சிக்கல், 14.11.2008 அன்று எல்லா மாநிலங் களையும் சார்ந்த மாணவர்களாலும் தூக்கிப் பிடிக்கப்பட்டது. இதற்கும் அடித்தளமாக விளங்குவோர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாணவர் பிரிவினராவர்.
தமிழக முதல்வருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, அவர் அனைத்துக் கட்சியினரின் கூட்டத்தைக் கூட்டி, தக்க முடிவுகளை எடுத்து இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளின் தலையான கோரிக்கை, “ஈழத் தமிழர் பேரிலான போரை இலங்கை அரசு உடனே நிறுத்துவதற்கான அழுத்தத்தை இந்திய அரசு தரவேண்டும்'' என்பது. ஆனால் இந்திய அரசு அப்படிச் செய்யவில்லை.

இதுபற்றிப் பேசுவதற்காக, முதலில் இந்தியாவுக்கு வந்த இராசபக்சேவின் தம்பி பாசில் இராசபக்சே - மகிந்த இராசபக்சேவின் தலைமை ஆலோசகர் என்கிற நிலையில் இருந்துகொண்டு, இங்குள்ளவர்களிடம் என்ன பேசினார்? “விடுதலைப் புலிகளின் பேரிலான தாக்குதலை நிறுத்த முடியாது. துன்பத்துக்கு ஆளாகும் இலங்கைத் தமிழர்களுக்கு எல்லா உதவிகளையும் இலங்கை அரசு செய்யும்'' என்று மட்டுமே அவர் பேசினார்.

இந்த நிலையை மாற்றிட வழி காணுவதற்கு, “தமிழகச் சட்ட மன்றத்தில், ஈழ விடுதலை கோருவோர் பேரில் நடத்தப்படும் போரைத் தடுத்து நிறுத்திட இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு ஆவன செய்யவேண்டும்'' என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் கோரினர்.
மா.பெ.பொ.க. சார்பில் 13.10.2008இல் இப்படிப்பட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எல்லாக் கட்சிகளின்கோரிக்கையையும் ஏற்று, 12.11.2008இல் சட்டமன்றத்தில் இதுபற்றிய நெடியதோர் தீர்மானத்தை நிறைவேற்றி, உணர்ச்சிமிக்க உரையாற்றினார். இதுமிகவும் வரவேற்கத்தக்கது. இதற்குமேல், இந்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காகத் தமிழ்நாட்டு அரசு எதையும் செய்திட அதிகாரம் இல்லை.
ஆனால், தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட இக் கோரிக்கையை, இதே வடிவில் அப்படியே, பிரதமர் மன்மோகன்சிங் மகிந்த இராசபக்சேவிடம் எடுத்துக் கூறினாரே அன்றி, “போரை நிறுத்துங்கள்; பேச்சுவார்த்தை நடத்தித் தமிழர்களுக்கு உரிய உரிமைகளை வழங்கும் அரசியல் தீர்வை அளியுங்கள்'' என்று அவர் இலங்கை அதிபரிடம் கூறவில்லை; பிரணாப் முகர்சியும் அப்படிக் கூறவில்லை.

இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் நான்கு ஆகும்.

மேலும் படிக்க

http://www.keetru.com/sinthanaiyalan/dec08/aanaimuthu_3.php

Posted in |

2 comments:

  1. karu Says:

    srilankangovernment or indian government is trying to kill or catch pirabakaran now they asking permission from America it may happen on pongal day or feb 4th . can u help them

  2. karu Says:

    indian and srilankan now close to kill prabakaran they waiting for American permission. it may happen on 14th Jan or 4 th feb.could anyone help him pl?

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails