கருணாநிதி தோற்க வேண்டும், திருமங்கலத்தில்
Posted On Tuesday, 6 January 2009 at at 10:15 by Mikeதமிழர்களில் கருணாநிதிதான் அதிகாரமிக்கவர், பலமிக்கவர். பல மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழக முதல்வர் இவை அனைத்தும் இருந்தும் தமிழின தலைவர் என்ன செய்தார் தமிழ் மக்களுக்கு, இவருக்கு ஏன் ஓட்டு போட வேண்டும். இது ஒரு பாடமாக இருக்கட்டும் அனைத்து கட்சிகளுக்கும். தமிழனை ஏமாற்றி விட்டு ஆட்சி கட்டிலில் எவனும் உட்கார முடியாது. தமிழர்களே இதுதான் உங்களின் நேரம் வாக்குகளை மாற்றி அளியுங்கள். காங்கிரஸிடன் கூட்டு வைத்த திமுக வை புறக்கணியுங்கள்.
அப்போதுதான் திமுக கொள்கைகளிலே மாற்றம் வரும், காங்கிரஸின் பற்று குறையும். தமிழ் மக்களின் கோபத்தை புரிந்து கொள்ள முடியும். அடுத்த பாரளுமன்ற தேர்தலில் சரியான கூட்டணி அமைத்து கொள்ள முடியும்.
தி.மு.க வாக்களர்களே நீங்களும் வேறு யாருக்காவது உங்கள் வாக்கை அளியுங்கள். இந்த முறை நீங்கள் மாற்றி அளிக்க தவறினால் உங்கள் திமுக கழகத்தை காப்பாற்ற யாராலும் முடியாமல் போகும். வரும் முன் காப்போம் சிறிய இழப்புகளோடு.
தமிழனுக்கு துரோகம் பன்ணுபவன் மட்டும் தமிழின துரோகி அல்ல, தன்னால் முடிந்தும் தன் சுய நலனுக்காக தமிழனுக்கு எதுவும் பண்ணாததும் ஒரு வகை தமிழின துரோகமே. இதற்கு சில உதாரணங்கள்
1) ராஜினாமா நாடகம் நடத்தியது.
2) தமிழகத்தின் எழுச்சியை அமுக்கியவர்களில் ஜெ-யிம், கருணாநிதியும் சமபங்கு படைத்தவரே. ஜெ மற்றும் காங்கிரஸ் சொன்னதற்காகவும் சீமான், வை.கோ வையும் கைது பண்ணியது மாபெரும் தவறு. சீமான் அவர்கள் வெளியில் வந்தால் கருணாநிதி காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் மண் கவ்வும் என்று பயந்து விட்டார் நம்ம தமிழின தலை.தமிழகத்தில் ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலை அடக்கி விடவே மத்திய அரசு விரும்புகின்றது. ஆட்சி நாற்காலி ஆசை இருப்பவர்களுக்கு வலியும் வேதனையும் எப்படிப்புரியும்.
3) பிரணாப் முகர்ஜியை இப்ப அனுப்பறோம், அப்ப அனுப்பறோம் என்று படம் காட்டியது, அதற்க்காக டில்லி வரை சென்று பெரிய படம் காட்டியது.
4) தமிழகத்தில் எழுச்சி வந்தவுடன், தானும் இணைந்து கொண்டது போல் காட்டி கொண்டு, குட்டைய குழப்பியது. குரல்கொடுத்தவர்களை சிறையில் அடைத்து கொழுத்துவிட்டெரிந்த தமிழக எழுச்சியை அணைத்துவிட்டார். மகள் ஒரு புறம் வீறுகொண்டு எழுங்கள் என்று சொல்லி கொண்டிருக்க்க இவரோ மறுபுறம் கையில் விலங்குடன் காத்து கொண்டிருக்கிறார். என்ன கொடுமை சார் இது.
5) இத்தனை அமைச்சர்கள் டில்லியில் இருந்து எந்த ஒரு மதிப்பும், மரியாதையும் கிடைக்காத டில்லியிடம் இன்னும் கூட்டு வைக்க ஆசைப்படுவது, தமிழின அழிவிற்கு துணை போவது.
ஏன் இந்த நாடகம் தமிழின தலைவரே. தமிழனே, தமிழனை காப்பாற்றா விட்டால் எப்படி ஒரு கன்னடத்தி வந்து காப்பாற்ற முடியும். திராவிடனே ஒரு திராவிடனை காப்பாற்ற முடியா விட்டால் எங்கிருந்து ஆரியன் வந்து காப்பாற்ற முடியும்.
அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம்.
உங்கள் உணர்ச்சி புரிகின்றது.
ஒரு ஈழத் தமிழன்
//அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம்.
//
you may have to defend Karunanidhi's action in a future post!!!
கருணாநிதி தமிழினத்தலைவர் அல்ல, அவர் ஒரு தமிழ் ஈனத் தலைவர்.
கருணாநிதி, ஜெயலலிதாவை விடப் பரவாயில்லை. காங்கிரஸ், அதிமுகவை விட திமுக பரவாயில்லை.
இந்த தேர்தலை பொருத்தவரையில் கலைஞர் தோற்க வேண்டும் . கலைஞர் பதவிக்காக தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறார் . ஆனால் அந்த பதவியை கொடுத்து தமிழர்கள் என்பதை இந்த தேர்தலில் கலைஞருக்கு எதிராக வாக்களித்து மக்கள் நிரூபிக்க வேண்டும்
///கருணாநிதி தமிழினத்தலைவர் அல்ல, அவர் ஒரு தமிழ் ஈனத் தலைவர்.///
வழிமொழிகிறேன்.
தியாகு
திருமங்கலத்தில் திமுக அதிமுக தேமுதிக போட்டி. இதில் யாருக்கு ஓட்டு போட சொல்லுகிறீர்கள்? யார் வென்றாலும் ஈழப் பிரச்சினை வாக்குகளில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்று பொருள் ஆகிவிடாதா?
see this link.
http://puthiyamalayagam.blogspot.com/2009/01/blog-post_07.html
/* திருமங்கலத்தில் திமுக அதிமுக தேமுதிக போட்டி. இதில் யாருக்கு ஓட்டு போட சொல்லுகிறீர்கள்? யார் வென்றாலும் ஈழப் பிரச்சினை வாக்குகளில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்று பொருள் ஆகிவிடாதா? */
உண்மைதான், ஆனால் ஆட்சி அதிகாரம் கையிலிருந்தும் தமிழனுக்கு உதவாத திமுக விற்கு இந்த முறை வேண்டாம். வேறு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள். இந்த தண்டனை மற்றவர்களுக்கு ஒரு முன்னுதரானமாக இருக்க வேண்டும்.
***///தமிழனுக்கு துரோகம் பன்ணுபவன் மட்டும் தமிழினத் துரோகி அல்ல, தன்னால் முடிந்தும் தன் சுய நலனுக்காக தமிழனுக்கு எதுவும் பண்ணாததும் ஒரு வகை தமிழினத் துரோகமே. ///***
சரியான கருத்து!
அது மட்டுமன்று! தமிழ்மக்களின் இயல்பான எழுச்சியைத் தன்னலம் கருதி மிகக்கரவாக அடக்கி வைக்கும் இழிவான தந்திரமும் இரண்டகச் செயலே!
கலைஞர் நீங்கள் சொல்வது போல் தோற்க்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் அந்த கன்னடத்தி ஆட்சியில் அமர வேண்டும். இப்போதாவது ஏதோ விடுதலைபுலிகள் என்று உச்சரிக்கறார்கள். அந்தம்மா வந்தா வின்னு ஆரம்ப எழுத்து ஆரம்பிக்கும் போதே கைதுபடலம் நடக்கும். வைகோ நிலை உங்களுக்கு தெரியாதா?
நீங்கள் சொவலவது போல் அந்த கன்னடத்தி வர வேண்டும். யாரிடம் நீங்கள் போய் கத்துவீர்கள் என்று எனக்கு பார்க்க ஆசையாக இருக்கிறது.
உங்கள் கோபம் புரிகிறது. உங்கள் கோபம் நீயாயமும் கூட ஆனால் அதற்க்கு நீங்கள் சொல்வது தீர்வல்ல.