41 படையினர் பலி; 102 பேர் காயம்: கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் மும்முனை முன்நகர்வுகள் முறியடிப்பு:
Posted On Tuesday, 6 January 2009 at at 10:09 by Mikeகிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 41 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 102 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
பரந்தனில் இருந்து கிழக்காக முரசுமோட்டை நோக்கியும்
பன்னங்கண்டி நோக்கியும்
கிளிநொச்சியில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் இருந்து இரணைமடு நோக்கியும்
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினரால் செறிவான எறிகணைத் தாக்குதல் மற்றும் கனரக போர்க் கருவிகளின் சூட்டாதரவு பின்பலத்துடன் இம்மும்முனை முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
முன்நகர்வுகளுக்கு எதிராக கனரகச்சூடுகள் மற்றும் எறிகணைத் தாக்குதல்களின் துணையுடன் விடுதலைப் புலிகள் செறிவான முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதல்களால் இன்று பிற்பகல் 5:00 மணியளவில் படையினரின் நகர்வுகள் முறியடிக்கப்பட்டன.
படையினர் பலத்த இழப்புக்களை சந்தித்தனர்.
இம்முறியடிப்பின் போது சிறிலங்கா படைத்தரப்பில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 102 பேர் காயமடைந்துள்ளனர்.
முறியடிப்பு தாக்குதல்களின் பின்னர் விடுதலைப் புலிகளால் படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறிலங்கா படையினரின் உடலங்களும் வேறு படையப் பொருட்களும் களமுனையில் சிதறிக் காணப்படுவதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.
நன்றி : புதினம்